Pages

Powered by Blogger.

Dec 28, 2013

செக்ஸ் என்பது திகட்டாத இன்பம் … அனுபவியுங்கள்..

செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்வது நல்லது. அது ஒரு உணர்வு. அந்த உணர்வை, அதற்குரிய வகையில்தான் தணிக்க வேண்டுமே தவிர அலங்கோலமான வழியில் அதை ‘ஆப்’ செய்ய நினைத்தால் கசப்புணர்வுதான் இறுதியில் மிஞ்சும்.
சிலர் உறவின்போது பல தவறுகளைச் செய்வார்கள். அதைத் தவிர்ப்பது உறவுக்கும், உறவில் ஈடுபடுவோரின் மனங்களுக்கும் நல்லது. அது என்ன தவறுகள் என்பதைப் பார்ப்போமா…
நிறைய முத்தம் கொடுங்கள்
செக்ஸ் உறவின்போது பலரும் செய்யத் தவறுவது நிறைய்ய்ய்ய்ய முத்தம். இருவரும் இணையும் அந்த ரம்மியமான தருணத்தை மேலும் மேலும் இனிமையாக்க உதவுவது எண்ணிக்கைக்குள் வராத அளவு முத்தமிடுவதுதான். இங்குதான், அங்குதான் என்றில்லாமல் நினைக்கும் இடத்தில், கணக்கே இல்லாமல் முத்தமிடுங்கள். இது இருவருக்கும் இடையிலான அன்பை அதிகரிக்க உதவும். அளவு கடந்த ஆசையை தட்டி எழுப்ப உதவும். முத்தத்தைதப் போல ஒரு சக்தி வாய்ந்த எதுவுமே இல்லை. எப்படிப்பட்ட ஆளாக இருந்தாலும் உங்களது முத்தம் அவரை தட்டி எழுப்பி உங்களை ஆனந்தபுரிக்குக் கூட்டிச் செல்லும்.
அவசரப்படாதீர்கள்
உங்களது பார்ட்னரும் செக்ஸ் மூடுக்கு வர வேண்டியது அவசியம். ஆனால் பலர் அவசரம் அவசரமாக எதையாவது செய்து பார்ட்னரை டென்ஷன்படுத்துவார்கள். அதற்குத்தான் நிறைய நேரத்தை முன்விளையாட்டுக்கு செலவிட வேண்டும் என்பது. முன் விளையாட்டை அதிகரிக்கும்போது தானாகவே இருவருக்கும் நல்ல மூடு வந்து விடும்.
சரியான இடத்தில் தொடுங்கள்
முன்விளையாட்டின்போது சிலர் தேவையில்லாமல், உணர்ச்சிகள் அதிகம் வெளிக்கிளம்பாத இடங்களைத் தொட்டும், தடவியும், கடித்தும் மேலும் டென்ஷனைக் கூட்டுவார்கள். அப்படி இல்லாமல், உங்களது துணையை எந்த இடத்தில் தொட்டால் சிலிர்ப்பார், எப்படித் தொட்டால் சிரிப்பார், எந்த மாதிரி தொட்டால் சிலாகிப்பார் என்பதைத் தெரிந்து கொண்டு சரியாக குறி வைத்து விளையாடுங்கள். ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமே பொதுவாக கழுத்து, முதுகு, வயிறு உள்ளிட்ட பகுதிகள் கிளர்ச்சியூட்டக் கூடியவை. அதேபோல ஆண், பெண் உறுப்புகளில் விளையாடுவதும் கிளர்ச்சியைக் கூட்டக் கூடியவை.
பூ போல பாவியுங்கள்
சில ஆண்களுக்கு இந்தக் கெட்டப் பழக்கம் இருக்கும். அதாவது அப்படியே ஒட்டுமொத்த உடலையும் தூக்கி தனது துணை மீது போட்டு அமுக்கி விடுவார்கள். பெண் உங்களது வெயிட்டை எப்படித் தாங்குவார்.. அதையெல்லாம் யோசிக்க வேண்டும். பெண்களைப் பூ போல பாவித்து கையாள வேண்டும். எனவே மென்மையாக கையாளுங்கள். உடல் எடையை உங்களது துணை மீது வைத்து அவரைக் கஷ்டப்படுத்தாதீர்கள்.
மெதுவா.. மெதுவா…
கிளைமேக்ஸ் ஆண்களுக்கு எப்போதுமே சீக்கிரம் வந்து விடும். ஆனால் பெண்களுக்கு நேரம் பிடிக்கும். எனவே அதற்கேற்ற வகையில் உங்களது உறவின் வேகத்தைக் குறைத்தும், தணித்தும் விவேகமான முறையில் செயல்பட வேண்டும். அவரது இன்பத்தையும், சந்தோஷத்தையும், அனுபவிப்பையும் நீங்கள் மதித்து அதற்கேற்றார் போல நடந்து கொள்ள வேண்டும். விந்தணு வெளியேறுவதை தள்ளிப் போட நிறைய உபாயங்கள் உள்ளன. அதைக் கடைப்பிடித்து உங்களது துணையையும் களிப்பூட்டுங்கள்.
சொல்லாமல் செய்யாதீர்கள்
நீங்கள் வேகமாக உறவில் ஈடுபட்டு அதை விட வேகமாக விந்தணு வெளியிட்டு விடும் நிலை சில நேரங்களில் ஏற்படலாம். அது உங்களது துணைக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி விடும். அதுக்குள்ளேயும் முடிச்சுட்டீங்களே என்று அவர் விசனப்பட நேரிடும். எனவே எனக்கு உச்சம் வந்து விட்டது என்பதை, வெளியேற்றி விடவா என்று உங்களது துணையிடம் ஒரு வார்த்தை சொல்லி விடுங்கள். அதற்கேற்றவாறு உங்களது துணை செயல்பட அது ஏதுவாகும்.
செக்ஸை ஆபாசமாக்கி விடாதீர்கள்
அதேபோல செக்ஸ் உறவை ஆபாசமான விஷயமாக மாற்றி விடக் கூடாது. அது ரொம்ப முக்கியம். செக்ஸ் உறவு என்பது ஒரு கலை. அதை நயத்தோடு அணுகுவதும், செயல்படுத்துவதுதான் நல்ல உறவுக்கு அழகு. நீங்கள் எதைச் செய்தாலும் அதை ரசித்து்ச செய்யுங்கள். மாறாக, அந்தப் படத்தில் அப்படிப் பண்ணானே, நாமும் அதே போலச் செய்யலாமா என்று ஆபாச பட நிலைக்கு கொண்டு போய் விடாதீர்கள். அது சீக்கிரமே உறவு கசந்து போக வழி வகுத்து விடும். அதேபோல சிலர் உறவின்போது படு ஆபாசமாக பேசக் கூடும். அதையும் தவிர்ப்பது நல்லது.
மெஷின் போல இயங்காதீர்கள்
உறவின்போது சிலர் மெஷின் போல இருப்பார்கள். அதுவும் தவறு. ஏதோ ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்வது போல சில ஆண்கள் இயங்கக் கூடும். அதுவும் தவறு. ரசித்து, ஒவ்வொன்றையும் ருசித்து, அனுபவித்து, அழகியலோடு செய்யும்போதுதான் உறவுகள் இனிக்கும், சுவைக்கும்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.