Pages

Powered by Blogger.

Jan 25, 2014

படுக்கையறை ‘போர்க் களத்தின்’ செக்ஸ் காயங்கள்




காதல் போர்களத்தில் வெற்றி தோல்வி என்பது கிடையாது. தம்பதியர் இருவருக்குமே மகிழ்ச்சிதான். விட்டுக்கொடுத்தலும், பெற்றுக்கொள்ளுதலும் இருக்கும். கூடல் பொழுதில் காயங்கள் ஏற்படுவது சகஜம். சந்தோச வலிகளும், உடல்களின் மேல் நகங்களால் வரையப்பட்ட ஓவியங்களும் ஏற்படுவது இயல்புதான்.

  இது தம்பதியரின் காதல் விளையாட்டுக்களை நினைவூட்டிக்கொண்டே இருப்பவை. காதல் போர்க்களத்தில் ஏற்படும் காயங்களைப் பற்றி விளக்குகின்றனர் நிபுணர்கள் நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.
காதல் கடி

தாம்பத்ய உறவு என்பது அஹிம்சையான இம்சைதான். அதில் ஆங்காங்கே காயங்கள் அதிகம் ஏற்படும். கணவனோ, மனைவியோ மாறி மாறி கடித்து கூட வைத்துக்கொள்வார்கள். இதனால் உடலில் ரத்தம் கன்றிக்கூடப் போய்விடும். மறுநாள் காலையில் குளிக்கும்போதுதான் தெரியும் முதல்நாள் இரவில் நடந்த சம்பவங்கள். புண்கள் ஏற்பட்டு விட்டால் கூச்சப்படாமல் உடனே உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள். ஆன்டிபயாடிக் மருந்துகளை போட்டு காயத்தை ஆற்றுங்கள். அப்பொழுதுதான் காதல் நினைவுகள் வலியின்றி இருக்கும்.

நகக்கீறல்கள்
தாம்பத்திய உறவின் போது காதல் மயக்கத்தில் இருவருக்குமே நகக்கீறல்கள் ஏற்படுவது வாடிக்கைதான். அந்த நேரத்தில் வலி எதுவும் தெரியாமல் இருந்தாலும் மறுநாள் காலையில் எரிச்சல் ஏற்படும். அந்த காயத்திற்கு பாடி லோசன்களை போடுங்கள். காயம்பட்ட இடத்தில் கற்றாழை ஜெல், தேன் தடவலாம் எரிச்சலோ, வலியோ இருக்காது.

தசை பிடிப்பு
செக்ஸ் என்பது ஒரு எக்சர்சைஸ் போலத்தான். சிலர் அதீத ஆர்வத்தில் துணையை இம்ப்ரஸ் செய்யவேண்டும் என்று ஏதேதோ விளையாட்டுக்களில் ஈடுபடுவார். இதனால் திடீரென்று தசைப்பிடிப்பு ஏற்பட்டு விடும். வலி உயிரே போவது போல இருக்கும். பதற்றப்படாமல் ரிலாக்ஸ் செய்யுங்கள். காதல் விளையாட்டுக்களுக்கு வலி படிப்படியாக குறையும். இரண்டு நாட்களுக்கு விடுமுறை விடுங்கள்.
புதுமணத் தம்பதியராக இருந்தால் ஒரு சிலருக்கு பிறப்புறுப்பில் புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடனே சிலர் பயந்து விடுவார்கள். பதற்றப்படாமல் புண்களை ஆற்றுவதற்கான வழியை காணவேண்டும். உடனே உறவில் ஈடுபடாமல் சிலநாட்கள் விடுமுறை கூட விடலாம் தப்பில்லை.
தாம்பத்ய உறவு என்பது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விசயம்தான் என்றாலும் சில காயங்கள் ஏற்படுவது சகஜம்தான். அவற்றை எளிதில் சரி செய்துவிடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

 

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.