Pages

Powered by Blogger.

Jan 12, 2014

ஆண்மையை அதிகரிக்கும் உண்மையான வைத்தியம்! நீங்களே தயாரிக்கலாம்!!




நாம் தற்போது எந்த செய்தித்தாள் ஊடகம் மற்றும் தொலைக்காட்சி பார்த்தாலும் ஆண்மைகுறைவு  பற்றின செய்திகளும் சிகிச்சை நிகழ்சிகளும் வந்த வண்ணமே உள்ளன. இதில் சில சித்த மருத்துவர்கள் சரியான மருந்தையும் கொடுகின்றனர், சில அரை குறை போலி வைத்தியர்களும் போலியான பிரச்சாரம் செய்து ஆண்மகன்களை பயமுறுத்தி வருகின்றனர்.

உண்மையில் ஆண்மைக்குறைவு ஒரு பெரிய நோயா? சரியாக கவனிக்காமல் காலம் தாழ்த்தினால் அது பெரிய நோய்தான், சரியான தனி மனித ஒழுக்கத்தை கடைபிடித்தால் ஆண்ன்மைகுறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை , இருந்தாலும் சுய இன்பம் ஒன்றே இந்த ஆண்மைக்குறைவுக்கு காரணம் என்று சொல்ல முடியாது, உயர் ரத்த அழுத்தமும், மன அழுத்தமும் காரணமாக அமைகின்றன. 

இதற்கு என்னதான் தீர்வு? இந்த குறைபாடு ஒன்றும் குணபடுத்த முடியாத ஒரு விசயமல்ல, மொத்தத்தில் இது ஒரு நோய் என்று சொல்வதே தவறு, இருந்தாலும் இபோதுள்ள இளைஞர்கள் சுய இன்ப கரபழக்கம் மற்றும் தவறான உறவுகளினால் தங்களது சக்தியை வீணடிக்கின்றனர். இதனால் உடலில் தாது உடைகிறது மற்றும் எழுச்சி தன்மை குறைகிறது, மீண்டும் நீங்கள் நல்ல சத்துள்ள உணவு வகைகளை உண்டால் இது அடிக்கடி தோன்றாது, மேலும் அளவுக்கு மீறின சுய இன்பத்தால் மீண்டும் இந்த குறைபாடு தோன்றி குற்ற உணர்வு தோன்றுகிறது, இதுவே இன்றைய தலைமுறையினரின் நிதர்சன பிரச்சினை, இதனை நீங்கள் உங்கள் கை வைத்தியதிலியே போக்கலாம்.

ஆண்மை தன்மையை அதிகரிக்கும் சக்தி இயற்கையிலயே தேனுக்கும் பேரிச்சம் பழத்திற்கும் உண்டு, இதனை சரியாக கையாண்டு ஒரு சிறப்பு மருந்தை நாமே தயாரித்து உண்டால் ஆண்மை குறைபாடு விரைவில் நீங்கும். இந்த மருந்து பக்க விளைவுகள் இல்லாத ஒரு அறிய வகை மருந்தாகும்.

உயர் ரக பேரிச்சம் பழம் ஒரு கிலோவும், உண்மையான தேன் ஒரு கிலோவும் வாங்கி கொள்ளுங்கள், 

பேரிச்சம் பழங்களை ஒரு அகன்ற பெரிய தட்டில் கொட்டி வைக்கவும், அதனை மூன்று மணி நேரம் வெயிலில் காய வைத்து பிறகு ஒரு பீங்கான் பாட்டிலில் பத்திரபடுதவும் பிறகு அதனுடன் தேனை ஊற்றி மீண்டும் மூன்று மணி நேரம் வெயிலில் வைத்து விடுங்கள்.

பிறகு தினமும் காலை உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பிறகு 3 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு விட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள்,

பிறகு இரவு 12 பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு விட்டு வென்னிருக்கு பதில் பசும்பாலை அருந்தவும், இப்படி தொடர்ந்து 60 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி பெருகிவிடும்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.