Pages

Powered by Blogger.

Jan 12, 2014

காமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா?



சில விசயங்கள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். சில விசயங்கள் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். செக்ஸ்சும் அப்படித்தான். படிக்கவும், பார்க்கவும், சுவாரஸ்யமான விசயங்களை செயல்முறைப்படுத்திப் பார்க்கவேண்டும் என்று ஆரம்பித்தால் சிக்கலில் கொண்டுபோய் விடும் என்கின்றனர் நிபுணர்கள்.
வாத்ஸ்சாயனார் எழுதியுள்ள காமசூத்ரத்தில் 64 முறைகளை எழுதியுள்ளார். 8 தொகுதிகளில் எட்டெட்டு முறைகளை மொத்தம் 64 பொசிஷன்கள் கூறப்பட்டுள்ளன. இந்த பொஸிசன்கள் பார்த்தும், படித்தும் ரசிக்கவும் மட்டும்தான். இவற்றை பின்பற்றிப்பார்க்கலாம் என்று முயற்சி செய்தால் பின்னர் எலும்பு முறிவு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குத்தான் செல்லவேண்டியிருக்கும்.
தாம்பத்ய உறவில் மகிழ்ச்சியான நிலைதானே உற்சாகத்தை அதிகரிக்கும். அதை விடுத்து வலி நிறைந்த உறவுகள் செக்ஸ் பற்றிய எண்ணத்தையே மறக்கடிக்கச் செய்துவிடும் காமசூத்ராவில் உள்ள 64 கலைகளையும் செயல்பாடுகளில் கொண்டுவரவேண்டும் என்று நினைப்பது இயலாத ஒன்று. இந்த பொசிஷன்களை படமாக வரைந்திருப்பது பார்த்த உடன் மனதில் கிளர்ச்சி ஏற்படவேண்டும் என்பதற்காகத்தானே தவிர இதனை பின்பற்ற வேண்டும் என்பதற்காக அல்ல. ஏனெனில் நேரடியான செயல்பாடுகளில்தான் 60 சதவிகித பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர் என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.
புதிதாய் திருமணமானவர்கள் தாம்பத்ய உறவின் ரகசியத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவும், நுட்பத்தை தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக கோவில்களில் சிற்பங்களாகவும், நூல்களில் ஓவியங்களாகவும் வரையப்பட்டுள்ளன. அவற்றை அப்படியே செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றால் தம்பதியரின் உடல்அமைப்பு ஒத்துழைக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இல்லையெனில் வலியும் வேதனையும் ஏற்பட்டு தாம்பத்ய உறவின் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தாம்பத்ய உறவின் மூலம் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காக காமசூத்ராவில் மனித உடல் அமைப்பை வைத்த எந்தெந்த பொசிஷன்களில் உடலை சங்கமிக்கச் செய்யலாம் என்ற கற்பனையின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது என்கின்றனர் நிபுணர்கள். இவை தம்பதியரின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி உணர்ச்சிகளை ஒரு பாயிண்ட்டுக்கு கொண்டுவரும். அதேபோல் கஜூராகோ சிற்பங்களை பார்த்த மாத்திரத்தில் உடலில் ஒரு அதிர்வு ஏற்பட்டு அது செக்ஸ் உறவை உண்டுபண்ணும் என்கின்றனர் நிபுணர்.
அதை விடுத்து சிலைகளைப் போல ஈடுபட்டால் வலிதான் மிஞ்சும். செக்ஸ் உறவின் மூலம் உச்சகட்ட நிலையில் கண்களின் ஒரம் ஆனந்த கண்ணீரைத்தான் வரவைக்கவேண்டுமே தவிர வலிநிறைந்த வேதனையை ஏற்படுத்தக்கூடாது.
மயிலிறகால் வருடியதைப்போன்ற சுகத்தை தேடுவதுதான் பெண்மையின் எதிர்பார்ப்பு. அவர்களுக்கு ஏற்றார்போல செயல்பாட்டாலே அள்ள அள்ள குறையாத சுகம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். எனவே இயல்பான நிலையில் உறவில் ஈடுபட்டு இன்பமாக வாழுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் நிபுணர்கள்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.