Pages

Powered by Blogger.

Jan 25, 2014

சிக்கல் இல்லாத ரொமான்ஸ் வாழ்க்கைக்கு சில நிபந்தனைகள்!



தம்பதியரிடையே எழும் சின்னச் சின்ன உரசல்கள்தான் பூதாகரமாக பார்க்கப்படுகின்றன. உறவுகளிடையே விரிசல்கள் விழாமல் இருக்க தங்கமான நிபந்தனைகளை பின்பற்றவேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர் அவற்றை படியுங்களேன்.
அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலகாரணமாய் திகழ்வது பணம்தான். பணத்தினால் தம்பதியரிடையே பிரச்சினை எழாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.
தாம்பத்ய உறவில் சிக்கல்கள் இருந்தால்தான் தம்பதியரிடையே விரிசல்கள் விழும். எனவே உங்களின் செக்ஸ் உறவில் நெருப்பு அணைந்து போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏதோனும் தொய்வு ஏற்பட்டால் அன்பின் மூலம் உங்களின் ரொமான்ஸ் வாழ்க்கையை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.
மரியாதை இல்லாத வார்தைகளை ஒருவருக்கொருவர் உபயோகிக்கவேண்டாம். ஏனெனில் ஒருவரை உதாசீனப்படுத்தும் வகையில் பேசுவதால் உறவில் நிரந்தரப் பிரிவு ஏற்பட்டுவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

குழந்தைகளை கவனித்துக்கொள்வதில் இருவருக்குமே சரி பங்குண்டு. எனவே குழந்தைகளை வளர்ப்பதன் பொருட்டு இருவருக்கும் இடையே பிரச்சினைகள் எழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
எதிர்பாலின நண்பர்கள் இருப்பது இயல்புதான். அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறோம், நடந்துகொள்கிறோம் என்று கூறிக்கொண்டு சொந்த வாழ்க்கையில் சிக்கலை உண்டுபண்ணிவிடவேண்டாம்.
உங்களுடைய கோபம், வலி, வேதனை எதுவோ அதனை உள்ளுக்குள் வைத்து புழுங்கி சாகவேண்டாம். அதுவே பின்னர் வெடித்து பெரிய சிக்கல்களை ஏற்படுத்திவிடும். எனவே எதுவென்றாலும் உங்களுக்குள் நேருக்கு நேராக பேசி தீர்த்துக்கொள்ளுங்கள்.
எந்த சூழ்நிலையிலும் ஒருவருக்கொருவர் செய்துகொடுத்த சத்தியத்தை மீறவேண்டாம். குடும்பவாழ்க்கையில் பொய் கூறவேண்டாம். ஏனெனில் அது குடும்ப வாழ்க்கையில் சூறாவளியை உண்டுபண்ணிவிடும். உங்களின் பழைய தவறுகளை மீண்டும் கிளறிவிட்டுவிடும்.
நீங்கள் கடுமையான உழைப்பாளியாக இருக்கவேண்டும் என்றுதான் உங்களின் வாழ்க்கைத்துணை விரும்புவார். சோம்பேறித்தனம் குடும்ப வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்திவிடும் எச்சரிக்கை.
தண்டனை தருகிறேன் பேர்வழி என்று கடுமையான சொற்களால் பேசுவதோ, உணர்வுரீதியாக வலிகளை ஏற்படுத்துவதோ கூடாது. எந்த பிரச்சினைக்கும் தண்டனை மட்டுமே தீர்வாகாது.
உடல்காயங்கள் விரைவில் ஆறிவிடும். அதே சமயம் மனதில் ஏற்படுத்திய காயமோ, வலியே ஆறாத வடுவாக தங்கிவிடும். இது இல்லறத்தில் நிரந்தரமான பிரிவை கூட ஏற்படுத்திவிடும். எனவே உங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளை பெரிதாக விடாமல் நீங்களே பேசி தீர்வுகாணுங்கள். இல்லறத்தில் இடைத்தரகர்களை அனுமதிப்பது ஆபத்து என்பதை என்றைக்கும் மனதில் கொள்ளுங்கள்
 

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.