Pages

Powered by Blogger.

Jan 2, 2014

மசாஜ் செய்வதன் மூலம் மார்பகங்களை பெரிதாக்கலாம்!

பெண்களுக்கு மார்பகம் மிகவும் முக்கியமான ஒரு அம்சமாக கருதப்படுகிறது. நிறைய பெண்களுக்கு அத்தகைய மார்பகமானது மிகவும் சிறியதாக உள்ளது. அதனால் பலர் மிகவும் சங்கடமான நிலைக்கு ஆளாகின்றனர். எனவே பல பெண்கள் மார்பகத்தை பெரிதாக வெளிப்படுத்துவதற்கு, பேட் உள்ள பிராக்களை அணிந்து கொள்கின்றனர். மேலும் சிலர் மார்பகத்தை பெரிதாக்கும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் அவ்வாறு அதிக பணம் செலவழித்து மார்பகங்களை பெரிதாக வெளிப்படுத்துவதற்கு பதிலாக, ஒரு சில இயற்கை வழிகளை பின்பற்றினால், பணத்தை செலவழிக்காமலேயே அழகான மார்பகங்களைப் பெறலாம். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் மார்பகங்களுக்கு மசாஜ் தான். ஆம், மார்பகங்களை மசாஜ் செய்வதன் மூலம் மார்பகங்களை பெரிதாக்கலாம். மேலும் அதற்கென்று பல்வேறு மசாஜ்களும் உள்ளன. அந்த மசாஜ்களை எப்படி செய்வதென்று கீழேக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து முயற்சி செய்து பயன் பெறுங்கள்.
ஃப்ரிக்ஷன் மசாஜ் (Friction Massage) -இந்த மசாஜ் செய்யும் முன், கைகளை நன்கு வெப்பம் வரும் வரை தேய்த்துக் கொள்ள வேண்டும். கைகளானது வெதுவெதுப்பானதும், இரண்டு கைகளையும் மார்கங்களின் மீது வைத்து, ஒரு கையை இடது பக்கமாகவும், மற்றொரு கையை வலது பக்கமாகவும் சுழற்ற வேண்டும். இந்த முறையை தினமும் காலை மற்றும் இரவில், தொடர்ந்து 20-30 நிமிடங்கள் செய்தால், மார்பகங்களில் நல்ல வளர்ச்சி தெரியும்.
சி மசாஜ் (Chi Massage) -சரியான மார்பக வளர்ச்சிக்கு சி மசாஜ் மிகவும் சிறந்தது. இந்த மசாஜ் செய்வதால் இரண்டு நன்மைகள் கிடைக்கும். ஒன்று மசாஜ், மற்றொன்று அக்குபிரஷர். இந்த மசாஜ் செய்வதற்கு முதலில் கை விரல்களை மார்பகங்களின் மீது வைத்து, உட்புறமாக சுழற்ற வேண்டும். இந்த செயலை தினமும் இரண்டு முறை 40-50 நிமிடங்கள் செய்தால், மார்பகத்தின் அளவு அதிகரிக்கும்.
கொக்கோ வெண்ணெய் மசாஜ்- கொக்கோ வெண்ணெய் கொண்டு நீண்ட நேரம் மசாஜ் செய்தால், மார்பகத்தின் அளவு பெரிதாகும். அதற்கு சிறிது கொக்கோ வெண்ணெயை கைகளில் தடவி, இரண்டு மார்பகங்களும் ஒன்றோடொன்று உராய்வு ஏற்படாதவாறு சுழற்ற வேண்டும். இதனை தினமும் 50-60 நிமிடம் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
எண்ணெய் மசாஜ் -மார்பகங்களின் வளர்ச்சிக்கு முதலில் ஒரு மசாஜ் எண்ணெயை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு சிறிது தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் ஆயில் சேர்த்து கலந்து, அதனை கைகளில் தடவி, மார்பகங்களில் வைத்து, மெதுவாக உட்புறமாக சுழற்றினால், மார்பகங்களில் இரத்த சுழற்சியானது அதிகரித்து, மார்பகங்களின் அளவும் அதிகரிக்கும்.
வெங்காய மசாஜ்- வெங்காயத்தைக் கொண்டும் மார்பகங்களின் அளவை அதிகரிக்கலாம். அதற்கு வெங்காயச் சாற்றில், தேன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, மார்பகங்களின் மீது தடவி மசாஜ் செய்த பின்னர், ஒரு நாள் முழுவதும் பிரா அணிய வேண்டும். இதனால் மார்பகங்கள் தொங்காமல் இருப்பதோடு, பெரிதாகவும் வளரும்.
சோம்பு மேற்கூறிய அனைத்து மசாஜ்களுடன், சோம்பை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள ஈஸ்ட்ரேஜெனின் அளவு அதிகரித்து, மார்பகத்தின் அளவும் அதிகரிக்கும்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.