Pages

Powered by Blogger.
Showing posts with label அறிந்து கொள்வோம். Show all posts
Showing posts with label அறிந்து கொள்வோம். Show all posts

Mar 31, 2014

சுத்தம் சுகம்தரும்

போஸ் என்கிற சந்திரபோஸ் ஆசை ஆசையாக நெருங்கினால்கூட அகல் என்கிற அகல்யா தள்ளியே நின்றாள். இந்தத் தம்பதிக்குள் என்ன பிரச்னை? பிடித்தமானவர்களைக்கூட பிடிக்காமல் செய்யும், மூக்கைப் பிடிக்க வைக்கும் விஷயம்தான் காரணம். இத்தனைக்கும் இவர்கள் 'நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில் ரோஜா மல்லிகை வாசம்’ என்கிற பாடலை அடிக்கடி முணுமுணுத்த முன்னாள் காதலர்கள். போஸிடம் இருந்த புகைப் பழக்கமும் சுத்தமற்ற உள்ளாடைகளும்தான் அகல்யாவை போஸிடம் இருந்து சில சென்டி மீட்டர் தூரத்தில் நிற்கவைத்தன. இதில் வேடிக்கை என்னவென்றால், யார் மீது துர்வாடை அடிக்கிறதோ அவர்களுக்கு அது தெரிவதே இல்லை என்பதுதான். சுத்தம்தான் நல்ல ஆரோக்கியத்துக்கான ஆரம்பப் புள்ளி. 
சிலர், வெளியில் பார்ப்பதற்கு அழகான ஆசாமியாக இருப்பார்கள். அவர்கள் வரும்போது அந்த இடமே கமகமக்கும். ஆனால், வீட்டுக்கு உள்ளே அழுக்காகத் திரிவார்கள். இன்றைய போக்குவரத்து நெரிசல்மிக்க, புழுதி பறக்கும் சூழலில் நாம் ஒவ்வொருவரும் கூடுதல் கவனத்துடன் உடல் சுத்தத்தைப் பேண வேண்டும். உடல் சுத்தம் என்பது வெளிப்படையான உறுப்புகளைச் சுத்தமாக வைத்திருப்பது மட்டும் அல்ல; ஜனன உறுப்புகளையும் சேர்த்துதான்.
பெண்ணின் பிறப்பு உறுப்பில் சில திரவங்கள் இயல்பாக சுரந்துகொண்டே இருக்கும். இவற்றில் இருந்து துர்வாடை வருவதுடன் கிருமித் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உண்டு. பெண்கள் குளிக்கும்போது ஜனன உறுப்புகளைச் சுத்தப்படுத்துவதையும் சிறுநீர் கழித்த உடனே பிறப்பு உறுப்பைத் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்வதையும் கடைப்பிடிக்க வேண்டும். இப்படி ஜனன உறுப்பைச் சுத்தப்படுத்த அவரவர் அன்றாடம் பயன்படுத்தும் குளியல் சோப்பும் சாதாரண தண்ணீருமே போதுமானது. குறிப்பாக பெண்கள் மலம் கழித்த பின்னர் ஆசன வாயை முன்பக்கம் கையால் மேலிருந்து கீழாகத்தான் கழுவ வேண்டும். மாறாக, கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் கழுவுவதால் சிறுநீர்த் தொற்று ஏற்படலாம்.
ஆண் உறுப்பின் முன் தோலில் மெழுகு போன்ற திரவம் திரளும். இதனை சுத்தப்படுத்தாவிட்டால் துர்வாடை அடிக்கும். அங்கே கிருமித் தொற்று வளரவும் வாய்ப்பு உண்டு. எனவே, ஒவ்வோர் ஆணும் குளிக்கும்போது ஆண் உறுப்பின் முன்தோலையும் தலைப் பகுதியையும் நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.
இருமுறை பல் துலக்குவது பலரிடம் இல்லாத ஒன்று. அதனையும் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். சாப்பிட்ட பின்னர் குடிக்கிற தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். பல பேர் உள்ளாடைகளில் கவனம் செலுத்துவதே இல்லை. 'உள்ளே போட்டுக்கொள்வதுதானே வெளியிலா தெரியப்போகிறது’ என்கிற எண்ணம்தான் இதற்குக் காரணம். தினமும் சுத்தமான, பருத்தித் துணியால் ஆன உள்ளாடைகளை அணிவதே நல்லது.
சிகரெட் புகைப்பவர்களுக்கு வாய் நாற்றம் ஏற்படுவதோடு ஈறுகளும் பல்லின் எனாமலும்கூட கெட்டுப்போய்விடும். தம்பதி இருவருமே படுக்கைக்குப் போகும் முன் மவுத் வாஷ் பயன்படுத்தலாம். மூச்சுக் குழாய் தொற்று, கல்லீரல் பிரச்னை, சர்க்கரை நோய், மலச் சிக்கல், சைனஸ் தொற்று, மூக்கில் கட்டி, சொத்தைப் பல் போன்ற காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் (Halitosis)  ஏற்படும். இதுதவிர பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகமாக உண்பவர்களுக்கும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
பொதுவாக வியர்வையில் எந்தவிதக் கெட்ட வாடையும் அடிப்பது இல்லை. ஆனால், வியர்வையுடன் பாக்டீரியா கிருமி சேர்ந்தாலோ அல்லது வேலையின் தன்மை, தட்பவெப்பம், மனக்கவலை, உடல் பருமன், தைராய்டு பிரச்னை, சிலவகை மருந்துகள் போன்ற காரணங்களைச் சார்ந்து வியர்வை நாற்றம் அடிக்கலாம். இரண்டு வேளை குளித்தால் வியர்வை நாற்றம் குறையும். குளித்து முடித்ததும் ஈரத்தை நன்கு உறிஞ்சுவதற்கு பருத்தித் துணியினைப் பயன்படுத்த வேண்டும். வியர்வை அதிகம் சுரக்கும் இடங்களில் நறுமணப் பவுடரைப் பயன்படுத்தலாம். மேலும், இறுக்கமான உடைகளைத் தவிர்த்து பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. காலில் அணிகிற சாக்ஸ்களை துவைத்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கால்களுக்குப் பவுடர் பூசிய பின்னர் சாக்ஸ் அணிவது நல்லது. பாதங்களையும் சுத்தமாகப் பராமரித்து வரவேண்டும்.
உடல் உறவுக்குப்பின் பிறப்பு உறுப்புகளை சுத்தப்படுத்திக் கொண்டால் எந்தப் பிரச்னையும் வராது!

Feb 11, 2014

''தம்பதியருக்குள் உடலுறவு'' ஏன் அவசியம்?!



[ உறவு நடக்காத பட்சத்தில் மனைவி மீது எரிந்து விழுவது, சம்பந்தம் இல்லாமல் திட்டுவது, ஒரு சிலர் ஒரு நிலையை தாண்டி போய் ''உனக்கு வேறு யாருடனோ தொடர்பு இருக்கிறது, அதுதான் என்னை நிராகரிக்கிற'' என்று சிறிதும் யோசிக்காமல் நடத்தையில் சேறை வாரி இறைப்பார்கள். இதற்கு பிறகு மனைவிக்கு, கணவனின் மேல் இருக்கிற அன்பு மொத்தமாக குறைந்து போகும் என்பதை தவிர வேறு எந்த நல்ல விஷயமும் நடக்க போவதில்லை.
படுக்கை அறையில் ஆணை விட பெண்ணே அதிக இன்பத்தை பெறுகிறாள். உடலுறவின் மூலம் அவர்களது ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் பெண், உறவை அதிகம் விரும்பவே செய்வாள். அப்படி பட்ட பெண் உறவை தவிர்க்கிறாள் என்றால், எதனால் என்று புரிந்து கொள்வது ஒரு கணவனின் கடமை.
பணம், படிப்பு, அந்தஸ்து, கௌரவம் இவை போன்றவற்றுக்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்கும் இதே காலத்தில் தான் விவாகரத்துகளும் பெருகி வருகின்றன. விவகாரத்து கோரும் தம்பதியரிடம் ஆழமாக விசாரித்து பார்த்தால் ஒன்று புரியும், அவர்களுக்குள் நடக்கும் பல பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக, மூலகாரணமாக இருப்பது "அந்த விஷயம்'' தான் என்பது...!]
  ''தம்பதியருக்குள் உடலுறவு''  ஏன்  அவசியம்?!  
''செக்ஸ்'' பற்றி வெளிப்படையாக பேசுவதும், விவாதிப்பதும் மிக தவறான ஒன்றாக பார்க்கபடுகிறது. நமது கலாச்சாரத்தில் இதற்கு நாம் கொடுக்கும் இடம் கிட்டத்தட்ட கடைசி. இதனை குழந்தை பெறுவதற்காகவும், அற்ப சந்தோஷத்துக்காக என்று ஒதுக்கியே வைத்து விட்டோம். இதன் மகத்துவம் புரிந்த முன்னோர்கள் சொல்வதை ஏற்காத நாம் சமீபத்திய அறிவியலாளர்கள் இதன் அவசியம் குறித்து சொல்லும் போது அப்படியா என்று புருவத்தை உயர்த்துகிறோம். மன இறுக்கம், மனஅழுத்தம் குறைந்து ஆரோக்கியத்தை இதன் மூலம் அதிகரிக்கலாம் என்பது எவ்வளவு அருமை!
உடல் எடை போட்டுவிட்டது, சுகர், பிரசர், அப்படி இப்படின்னு பிரச்சனைகளில் இருந்து தம்பதிகள் நிறைவான உடலுறவின் மூலம் தள்ளி இருக்கலாம் என்பது ஆச்சர்யம் தானே?! மன இறுக்கம் கலையபட்டாலே உடல் தன்னால் அழகு பெற்றுவிடும்! (சிலர் கேட்கலாம், ஒரு சிலர் கண்டபடி இதே நினைப்பாகவே அப்டி இப்டி அலையுறாங்களே அவங்க ரொம்பவே நல்லா இருப்பாங்களே என்று...?!! தன் துணையை தவிர பிறருடனான உறவுகளில் சுகம், சந்தோஷம் இருக்கலாம், ஆனால் மன இறுக்கம் குறைய நிச்சயம் வாய்ப்பேயில்லை மாறாக தவறு செய்கிறோம்(!) என்கிற குற்ற உணர்ச்சியால் மன அழுத்தம் அதிகரிக்கவே செய்யும் !!)
"மூளை, மூட்டுகள், ஜனன உறுப்புகள் உட்பட எந்த ஒரு உறுப்பையும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால், அந்த உறுப்பானது நாளடைவில் அதன் செயல் திறனை இழப்பதோடு மட்டுமின்றி தன்னளவில் சுருங்கி இறுதியில் மறந்தே போகும்" என்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள்.
உறுப்புகளுக்கு ஓரளவு மிதமான இயக்கம் இருந்தாக வேண்டியது அவசியம். முற்றிலும் தவிர்த்தால் உடல் ரீதியாக, மன ரீதியாக பாதிப்புகள் வர வாய்ப்புகள் அதிகம். இதயத்தை மாரடைப்பு ஆபத்தில்  இருந்து பாதுகாப்பளிக்கிறது. வெளிநாடுகளில் இன்னும் ஆராய்ச்சி பண்ணிகொண்டே இருக்கிறார்கள், இதன் பயன்கள் வேறு என்னவெல்லாம் இருக்கிறது என்று !!
ஆனால் இதை பற்றி எல்லாம் அக்கறையில்லாமல் ஏனோ தானோவென சம்பிரதாயதுக்காக சலிப்பாக சென்று கொண்டிருக்கிறது இன்றைய இயந்திர உலகில் தம்பதியரின் தனிப்பட்ட அந்தரங்கம்.
பணம், படிப்பு, அந்தஸ்து, கௌரவம் இவை போன்றவற்றுக்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்கும் இதே காலத்தில் தான் விவாகரத்துகளும் பெருகி வருகின்றன. விவகாரத்து கோரும் தம்பதியரிடம் ஆழமாக விசாரித்து பார்த்தால் ஒன்று புரியும், அவர்களுக்குள் நடக்கும் பல பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக, மூலகாரணமாக இருப்பது செக்ஸ் என்பது...!!
  பெண்களின் மனோநிலை  
உடலுறவை பொறுத்தவரை தனது விருப்பத்தை நேரடியாக வெளிபடுத்த மாட்டாள். ஒரு சில பெண்கள் சுற்றி வளைத்து பேசி குறிப்பால் உணர்த்தலாம்...கேலியும் கிண்டலுமாக வெளியிடலாம். அவரவர் கணவனின் எண்ணவோட்டங்களை பொறுத்து இது மாறுபடும். பொதுவாக நம் சமூகத்தில் ஆண்களுக்கு பெண்கள் செக்ஸ் பற்றி பேசினால் அவள் அனுபவரீதியாக எல்லாம் அறிந்தவளாக இருப்பாள் என்கிற எண்ணம் உண்டு. ஆண்கள் என்று இல்லை, பெண்ணே மற்றொரு பெண் இவ்விஷயத்தை விவரித்து பேசினால் அப்பெண் அனுபவபட்டவள் என்று முடிவு பண்ணிவிடுகிறாள். இதற்கு அஞ்சியே பல பெண்கள் உறவு குறித்து சந்தேகம் எதுவும் இருப்பினும் வாய் திறக்க மறுக்கிறார்கள்.
இந்த விஷயத்தை பொறுத்தவரை கற்றுக்கொடுக்கும் இடத்தில் இருப்பதை தான் ஆண் விரும்புகிறான். (எந்த காலமாக இருந்தாலும்!)
எனவே பொதுவாக பெண் இவ்விஷயம் குறித்து அதிகம் வெளிப்படையாக பேசுவதையும், ஆணுக்கு முன்னரே செயல்படுவதையும் தவிர்த்தல் நல்லதே. ஒரு சிலர் தனது மனைவி செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுவதையும், விவாதிப்பதையும் விரும்புவார்கள். கணவன் மனமறிந்து பேசுவது முக்கியம்.
  ஆண்களின் மனநிலை  
உறவை பற்றிய எண்ணம் தோன்றியதும் மனைவி உடனே உடன்பட்டே ஆகவேண்டும் என்பதே பெரும்பாலான கணவர்களின் எதிர்பார்ப்பு. அதற்கு முன் மனைவியின் உடலறிந்து, மனமறிந்து என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகி விடுகிறது. பெண்களுக்கு மெதுவாகவே  உடல் கிளர்ந்தெழ தொடங்கும், ஆனால் ஆண் இதனை கவனிப்பது இல்லை. தான் இயங்கி திருப்தி  அடைந்தால் போதும் பெண்ணுக்கு என்று தனியாக திருப்தி அடைதல் இல்லை   என முடிவு செய்து கொள்கிறார்கள், அவளது உணர்வுகளுக்கும் வடிகால் தேவை என்பதை மறந்து...!
  பத்து வருடங்கள் கழிந்த பின்  
தாம்பத்தியத்தில் அந்தரங்க உறவு என்பது மிக முக்கியம் என்றாலும் திருமணம் முடிந்த பத்து ஆண்டுகள் கழிந்த தம்பதியினரின் இது குறித்த விருப்பங்களில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆணின் விருப்பம் ஒரு விதமாகவும் பெண்ணின் விருப்பம் வேறு ஒன்றாகவும் இருக்கின்றன.
உதாரணமாக, திருமணம் முடிந்த புதிதில் நகைச்சுவையாக பேசக்கூடிய கணவனை மிக விரும்புவாள்  மனைவி... ஆனால் பத்து வருடம் கழிந்த பின் அதே மனைவி கணவனின் நகைச்சுவை பேச்சை அவ்வளவாக ரசிப்பதில்லை. ஒரு காரணம் என்னவென்றால், நம்மிடம் பேசுவதை போலத்தானே பிற பெண்களிடமும் பேசுவார், அது அவ்வளவு நல்லதில்லையே என்ற மனோபாவம் ஒரு காரணம், மற்றொன்று 'இருக்கிற சூழ்நிலை தெரியாம அது என்ன எதுக்கெடுத்தாலும் தத்துபித்துனு உளறிட்டு ?!!' என்பது...
இது போல் முதல் பத்து வருடங்களில் பிடித்தவை எல்லாம், அடுத்து தொடரும் காலங்களில் பிடிக்காமல் வெறுப்பிற்கு இடமாகி விடுகின்றன...! அது போன்றே அந்தரங்க விஷயத்திலும் மாற்றம் ஏற்படுகிறது, மற்றவை அவ்வளவாக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது, ஆனால் உடலுறவு விஷயம் அப்படி அல்ல...இதில் தவறினால் சமயங்களில் குடும்பத்தில் மிக பெரிய பாதிப்புகளையும், பிரிவுகளையும் ஏற்படுத்திவிட கூடும்.
அப்படி என்ன இதில் இருக்கிறது? என்ன என்ன பாதிப்பு ஏற்படும்? இது என்ன அவ்வளவு முக்கியமா? இது போன்ற கேள்விகளுக்கான பதில்களை தொடர்ந்து பார்க்கலாம்.....
  பெண்களின் விருப்பமின்மை....?!  
பகலில் மனைவிடம் எந்தவித அன்னியோனியமும்  இல்லாமல் இரவில்  மட்டும் தேடும் கணவனை எந்த மனைவியும் விரும்புவதில்லை. ஒருவேளை உறவிற்கு உடன்பட்டாலும் அதில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது 'என்னவும் செய்துவிட்டு போ' என்கிற விரக்தி மட்டுமே இருக்கும். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் உடல் உறுப்புகளில் கடினத்தன்மையும், வலியும் ஏற்படக் கூடும்.
பொதுவாக முப்பத்தைந்து அதற்கு மேல் வயதுள்ள பெண்களில் சிலருக்கு  உறவின் மேல் விருப்பமின்மை தோன்றும். இதை சில நடவடிக்கைகளை வைத்து கணவர்கள் புரிந்துகொள்ளலாம்.
o  இவர்களில் பலரும் கருத்தடை சாதனம் பொருத்தியோ, குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தவர்களாகவே இருப்பார்கள். இருந்தும் ஆணுறை அணிய செய்து உறவு கொள்ள சொல்வார்கள்.
o  உறுப்பில் வலி இல்லை என்றாலும் வலிக்கிறது, எரிச்சலாக இருக்கிறது என்பார்கள்.
o  தலை வலி, வயிறு வலி போன்ற வெளியே தெரியாத காரணங்கள்.
o  தூக்கம் வருகிறது, பசங்க தூங்கல, டயர்டா இருக்கு...
நேரடியாக உறவு பிடிக்கவில்லை என்று சொல்ல தயங்குவார்கள். அப்படி சொல்லிவிட்டால் கணவன் தன்னை வெறுத்துவிடுவானோ என்கிற அச்சம் ஒரு காரணம் !!
  கணவனின் புரிதலின்மை  
மனைவி உறவின் மேல் விருப்பம் இல்லை என்பது போல் காட்டிக்கொண்டால் அது போல் கோபம் வேறு எதிலும் ஒரு ஆணிற்கும் வராது. சாதாரண நேரத்தில் மனைவி மீது அன்பை வாரி பொழிபவர்களும் உறவுக்கு 'ரெட் சிக்னல்' என்றதும் எரிமலையாய் பொங்கிவிடுவார்கள். எதற்காக மறுக்கிறாள், என்ன காரணம் என்று நிதானித்து யோசிக்க கூடிய மனநிலை ஆண்களுக்கு அப்போது இருப்பதில்லை. உடனே நடந்தாகவேண்டும் என்று உறவை பற்றிய ஒரு உந்துதல் மட்டுமே அவர்கள் மனதில் இருக்கும்.
உறவு நடக்காத பட்சத்தில் மனைவி மீது எரிந்து விழுவது, சம்பந்தம் இல்லாமல் திட்டுவது, ஒரு சிலர் ஒரு நிலையை தாண்டி போய் ' உனக்கு வேறு யாருடனோ தொடர்பு இருக்கிறது, அதுதான் என்னை நிராகரிக்கிற' என்று சிறிதும் யோசிக்காமல் நடத்தையில் சேறை வாரி இறைப்பார்கள்.
இதற்கு பிறகு மனைவிக்கு, கணவனின் மேல் இருக்கிற அன்பு மொத்தமாக குறைந்து போகும் என்பதை தவிர வேறு எந்த நல்ல விஷயமும் நடக்க போவதில்லை.
உடல் உறவை தவிர்த்தல் என்பது இப்படி சந்தேகத்தில் வந்து முடிந்துவிட கூடிய ஆபத்தும் இருக்கிறது !!?
இத்தகைய விஷயத்தை வெகு சாதாரணமாக எடுத்துகொள்ளாமல் கவனமாக கையாளுவது கணவன் மனைவி இருவருக்கும் நல்லது.
ஒரு உண்மை தெரியுமா??
படுக்கை அறையில் ஆணை விட பெண்ணே அதிக இன்பத்தை பெறுகிறாள். உடலுறவின் மூலம் அவர்களது ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் பெண், உறவை அதிகம் விரும்பவே செய்வாள். அப்படி பட்ட பெண் உறவை தவிர்க்கிறாள் என்றால், எதனால் என்று புரிந்து கொள்வது ஒரு கணவனின் கடமை. அந்த காரணத்தை அறிந்து சரி செய்து கொள்வது தொடரும் குடும்ப வாழ்க்கைக்கு மிக மிக முக்கியம்.

ஆண்-பெண்களிடம் நிலவும் செக்ஸ் நம்பிக்கைகளும் அதற்கு மாறான மருத்துவ இயல் உண்மைகளும்!


பழைய நம்பிக்கை 1 :
முதல் இரவில் முழுமையான செக்ஸ் இன்பம் தரமுடியாத ஆண்களை ஆண்மை இல்லாதவர்கள் என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது..!
உண்மை :
முதலிரவில் 80 சதவீத ஆண்களால் முழுமையான உடலுறவு கொள்ள முடியாது. அதனால் அவர்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்று முடிவுக்கு வந்துவிடக் கூடாது.
பழைய நம்பிக்கை 2 :
உடல்உறவில் உச்சகட்ட இன்பம் கிடைக்கவில்லை எனில் அது ஆண்களிடம் உள்ளகுறை என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது!
உண்மை :
உடல் உறவில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் முழுமனதோடு ஆண்களுடன் இணைந்து ஒத்துழைத்தால் அன்றி முழுமையான உச்சகட்ட இன்பத்தை பெறமுடியாது. ஆண்பெண் இருவரும் சமஅளவில் உடலும் உள்ளமும் இணைந்து உடலுறவில் ஈடுபடும்போதுதான் பெண்களுக்கு இன்பம் அதிகரிக்கின்றது என்பதைப் பெண்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
பழையநம்பிக்கை 3 :
பெண்கள் வயதாகிவிட்டதாலும் மாதவிடாய் நின்றுபோனதாலும் மற்றும் ஆண்களுக்கு வயதாகிவிட்ட நிலையிலும் உடலுறவு அவசியமில்லை என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது..!
உண்மை :
60 சதவீதம் முதல் 80 சதவீதம் ஆண்கள் இளமையில் மட்டுமே உடல்உறவு கொள்வதற்குக் காரணம் பெண்களின் ஒத்துழைப்பு கிடைக்காததுதான்! பெண்களுக்கு மாதவிடாய் நின்றுபோன பின்பும் பாதி வாழ்க்கை இருக்கிறது. அந்நிலையில் உடல்உறவு தேவையில்லை என பெரும்பாலான பெண்கள் நினைப்பது தவறு. வயதான காலத்திலும் வளமான உறவை பெண்கள் நினைத்தால் அனுபவிக்கலாம். இது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.
பழையநம்பிக்கை 4 :
கணவர் தான் மனைவியை உறவுக்கு அழைக்க வேண்டும் என்று நினைப்பது!
உண்மை :
பரஸ்பரமான அன்பின் மிகுதியால் மனைவியும் கணவரை உறவுக்கு அழைக்க லாம்! ஆண்கள் தான் முதலில் அழைக்கவேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது தவறு! இருப்பினும் திருமணமான புதிதில் பெண்கள் வலியவந்து கணவரை அழைக்கும்போது சில ஆண்கள் தவறான அர்த்தம் ஏற்படுத்திக் கொண்டு வாழ்க்கையையே சிக்கலாக்கி விடுவார்கள்.

ஆண்களிடம் நிலவும் பழங்கால செக்ஸ் நம்பிக்கையையும் அதற்கு மாறான செக்ஸ் மருத்துவ இயல் உண்மைகளையும் விளக்குகிறார்..!
பழைய நம்பிக்கை 1 :
திருமணமான பெண் முதன் முதலில் உடலுறவு கொள்ளும்போது மெல்லிய ஹைமன் எனப்படும் கன்னிச்சவ்வு கிழிந்து வலியும் ரத்தமும் ஏற்பட்டால்தான் அப்பெண் கன்னித்தன்மை மாறாதவள் பெண் என்று பெரும்பாலான ஆண்கள் நினைப்பது!
 உண்மை :
திருமணமான பெரும்பாலான பெண்களுக்கு முதன்முதலில் உடலுறவு கொள்ளும்போது மெல்லிய ஹைமன் எனப்படும் கன்னிச்சவ்வு கிழிந்து வலியும் ரத்தமும் ஏற்படுவதில்லை. பெண்களுக்கு ஹைமன் எனப்படும் கன்னிச்சவ்வு சாதாரணமாக மெல்லியதாகவோ அல்லது தடிமனாகவோ இருக்கலாம். ஹைமனில் இருக்கும் துவாரம் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ, திறந்தோ அல்லது மூடிய நிலையிலோ இருக்கலாம். உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண்களுக்கு உடலுறவிற்கு முன்பே ஹைமன் சவ்வு கிழிந்திருக்கலாம். உடற்பயிற்சி மேற்கொள்ளாத பெண்களில்கூட சிலருக்கு முதலிரவு உடல்உறவிற்குப் பின்னும் ஹைமன் கிழியாமல் இருக்கலாம்!
பழைய நம்பிக்கை 2 :
பெரிய பருமனான மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு ஆசை அதிகமாக இருக்கும் என்று பெரும்பாலான ஆண்கள் நினைப்பது!
உண்மை :
செக்ஸிற்கு சிறிய மார்பகம் பெரிய மார்பகம் என்ற பாகுபாடு இல்லை. வம்சம், சுகா தாரம், உடல்எடை, ஊட்டச்சத்து ணவு போன்ற காரணிகளால் பெண்களுக்கு மார்பகங்கள் பெரி தாகவோ அல்லது சிறியதாகவோ அமையும்.
பழைய நம்பிக்கை 3 :
செக்ஸ் அறிவு இருக்கும் பெண்களுக்கு ஏற்கனவே செக்ஸில் முன் அனு பவம் இருக்கும் என்று பெரும் பாலான ஆண்கள் நினைப்பது..!
உண்மை :
தற்கால பெண்கள் படிப் பறிவு மிகுந்து ஆண்களைப்போல் சுதந்திரமாக வெளியில் சென்று தகவல் சேகரிக்கும் ண்ணறிவு டன் திகழ்வதால், செக்ஸ் அனு பவம் இல்லாமலே செக்ஸ் குறித்த அறிவைப் பெண்களால் பெறமுடியும்!
- செக்ஸ் மருத்துவ நிபுணர் டாக்டர் பத்மினி பிரசாத்.

Feb 7, 2014

சாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்?


 
ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால் கொள்ளையோ… கொள்ளைதான்.
 
ஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்கவேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம்.
 
சாமுத்திரிகாலட்சணப்படி ஒரு பெண்ணுக்கு அழகு பாகங்கள் எப்படி இருக்க வேண்டும்?
 
1. கால், பாதம்:
 
 
 
ஒரு பெண்ணின் பாதம் செந்தா மரைப் பூப்போன்று சிவப்பாக இரு க்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய வேண்டும். 5 விரல்களும் ஒன்றோ டொன்று பொருந்திய நிலையில் இருத் தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகு போல் அமைந்திருக்க வேண்டும்.
 
பாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லது. காலிலுள்ள நடு விரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். குதிகாலின் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச் சியாக வாழ்வாள்.
 
மேலும் பிரதானமாக கெண்டைக் கால் பருத்து இல்லாமல் இருப் பது நலம் ஆணாக இருந்தாலும் பெண் ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அதுபோல் இருப்ப வர்கள் ஆரோக்கியமாக வும் யோகம் உள்ளவர்களாக (அதிர்ஷ்டசாலியாக வும்) இருப்பார் கள்.
 
சில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பெண் குடும்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது எவ்வளவு இருந்தாலும் கணவரை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று சொல்லப்படுகிறது.
 
காலின் கட்டை விரல் வளைந்தும் மற்றொன்று வளையாமலும் இருக்கும். அப்படி இருந்தால் அந்த பெண் ணுக்கு இரண்டு கணவர் என்று அர்த்தம். அது அங்கீகாரத்துடனும் இருக்கலாம் இல் லாம லும் இருக்கலாம்.
 
 
 
2. தொடை:
 
 
 
 
 
 
 
பெண்களின் தொடை வாழைத்தண்டு போல் பளபள என்று இருக்க வேண் டும். முழங்கால் சிறிதாக இருக்க வே ண்டும். பெண்களின் தொடை உரோமம் இல்லாமல் பளிச்சென்று காட்சி தர வேண்டும்.
 
3. இடை:
 
 
 
 
 
 இளம் பெண்ணின் இடை நடுவில் சிறுத்தும் மேலும் கீழும் விரிந் திருக்க வேண்டும். ஆலிலைப்போல் வயிறு அமைந்திருந்தால் அழகு. வயிறு நல்ல வெள்ளித் தட்டுப்போல் இருந்து தொப்புள் வலது பக்கமாக சுழித்திருந்தாலும் செல்வம் பெருகும்.
 
4. மார்பகங்கள்:
 
 
 
 
 
 
பெண்ணின் மார்பகங்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக தோன்ற வேண்டும். அத்துடன் மார்பகங்கள் நிமிர்ந்தும் நீண்டும் காட்சி தர வேண்டும்.
 
5. கைவிரல்:
 
பெண்ணின் கைகள் கொளுத்த மீன் போல் சிவப்பாக இருத்தல் வேண்டும். கைவிரல்கள் பயித்தங்காய் போல் அழகாக காட்சி தர வேண்டும்.
 
6. கழுத்து:
 
 
 
 
 
 பெண்ணின் முகம் முழு நிலவுபோல ஒளி மிக்கதாக விளங்க வேண்டும். பெண்ணின் உதடுகள் உருண்டு திரண்டு பவளம் போலிருந்தால் அழகு. பெண்ணின் பல் வரிசை முத்துக்களைக் கோர்த்தது போல வரிசையாக இருக்க வேண் டும்.
 
7. கண்கள்:
 
 
 
 
 
 
 
 
பெண்களின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க வேண்டும்.. பாலில் விழுந்த வண்டுபோல கண்கள் துள்ள வேண் டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும். பெண்களுக்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும்.
 
உருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். சற்றே உருண்டு திரண்ட விழிகள்தான் அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல.
 
மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண் டவர்கள் கணவருக்கு ஏற்ற வராகவும் எல்லா இடத்திலும் நேர் மறை சிந்தனை கொண்ட வராகவும் இருப்பார்கள். மருண்ட விழி களில் சில அமைப்புகள் உண்டு.
 
உருண்ட விழி அதிர்ஷ்டம் மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும் பரந்த விழிகள் பிறரை எளிதில் கவரக் கூடிய தாகவும் பெரிய துறையில் பெரிய பதவி யில் அமரக்கூடியவராகவும் இருப் பார்கள்.
 
விழிகளைவிட விழித்திரை ரொம்ப முக்கியம். விழித்திரை வெள் ளையாக இருக்கிறதா அல்லது மஞ்சளாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந் தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பா ர்கள்.
 
சிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாதவர்க ள் என்று சொல்வார்களே… அது போல இருப்பார்கள்.
 
மஞ்சள் பின்னணியில் பரந்த விழியைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கரமானது. வாழ்க்கையில் பெரிய ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள்.
 
விழி மற்றும் விழிப்பின்னணி இமைகள் போன்றவை பற்றி சொல்லப்படுகிறது. இமையில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற் படும். அடர்த்தி இல்லாமல் பரவ லாக இருந்தால் ஆயுள் நிறைந்து இரு க்கும்.
 
வளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும்.
 
 
 
 
 முண்டக் கண்ணி என்று சொல்லப்படும் கண்கள் உள்ளவர்களுக்கு தாய் தந்தை யில் யாராவது ஒருவர் இருக்க மாட்டார்கள். சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்து விடுவார்கள்.
 
உள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பா வியாக இருப்பார்கள். பின்னர் செழிப்பாக இருப்பார்கள் 30 வயது வரை காசை செலவு செய்து விட்டு பின்னர் பணத்தை சரியாக கையாள்வார்கள்.
 
8. கூந்தல்:
 
 
 
 
 
 
 
பெண்களின் கூந்தல் நீண்ட கருங்கூந்தலாக இருக்க வேண்டும். பெண்களின் கூந்தலில் மலர் மணம் வீச வேண்டும்.
 
கோர முடி குடியைக் கெடுக்கும் சுருட்டை சோறு போடும்” என்று சொல்வார்கள்.
 
அதாவது சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும் வைத்து சோறு போடுபவர்களாகவும் சுற்றுத்தார் நண்பர்களை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள். அரவணைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
 
கோரை முடி கொண்டவர்கள் தாய் தந்தையை துன்பப்படுத்துபவர்களாக வும் குடும்பத்திற்கு கெட்ட பெயரை கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். கலப்பினத்தில் திருமணம் முடிப்பார்கள்.
 
ரோமக் கால்கள் எந்த அளவிற்கு மென் மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை மென்மையாக இருக்கும். ரொம்ப துன்பப்படாமல் அமைதியாக வீட்டிலேயே இருந்தபடி வாழ்க்கை நடத்தும் யோகம் கிட்டும்.
 
கடினமான மொரமொரவென்று இருக்கும் தலை முடி உள்ளவர்க ளுக்குகடினமான வாழ்க்கையாக இருக்கும். உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அவர்களது முடி போன்றுதான் வாழ் க்கையும் அமையும்.
 
9. வாசம்:
 
 
 
 
 
பெண்களின் உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, தென்ன ம்பாளை வாசனை, இலுப்பைப்பூ வாசனை, எலுமிச்சை வாசனை , தாழம்பூ வாசனை, தாமரைப்பூ வாசனை ஆகியவை முன் பக்கமும், பின் பக்கமும் வருமானால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள்.
 
10. மூக்கு:
 
 
 
 
 
 மூக்கு உயர்ந்து காணப்படுவது நலம். மூக்கின் நுனி அமைப்பு தான் முக்கியமாக சொல்லப்படுகிறது. மூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலி அரசாளும் யோகம் அமைச்ச ராதல் போன்ற யோகம் உண்டு.
 
எலியைப் போன்ற மூக்கு அதாவது லேசாக தூக்கியபடி இருந்தால் காம உணர்வு அதிகமாக இருக்கும் என்பார்கள்.
 
ஒரு சிலருக்கு மூக்கின் நுனிப் பகுதி உருண்டு காணப்படும். அவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் குணம் இருக்கும சந்தைப்படுத்துதல் துறையில் சிறந்து விளங்குவார்கள்.
 
சிலர் மூக்கு மண்ட மூக்கு என்று சொல்வது போல் இருக்கும். அவர் கள் மற்றவர்களை இம்சைப்படுத்து வார்கள். சிலருக்கு மூக்கு கொடை மிளகாய் போல் இருக்கும். அவர் களும் மற்றவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அடக்கி ஆள முயற்சிப் பார்கள்.
 
 
 

 
 மூக்கின் அடிப்பகுதி நடுப்பகுதி நுனிப்பகுதி என மூன்று அமைப்பையும் வைத்து சொல்லப்படுகிறது. ஒரே சீரான மூக்கைக் கொண்ட 
வர்களுக்கு சீரான வாழ்க்கை இருக்கும்.கொடை மிளகாய் மூக்குக் கொண்டவர்கள் தான் கொஞ்சம் பயங்கரமானவர்கள்.
 
ஒரு சிலருக்கு அடிப்பகுதி ஒரு மாதிரி இருக்கும் நடுப்பகுதி வேறு மாதிரி இருக்கும் நுனிப் பகுதி வேறு ஒரு மாதிரி இருக்கும். இவர்களுக்கு மாறுபட்ட சிந்தனை இருக்கும். மூக்கு பார்க்கும்போதே வளைந்து நெளிந்து இருக்கும்.
 
 
 
வாசிம் யோகம்… வாசிம் என்றால் மூக்கு பயிற்சி செய்வதை குறி க்கும். அதாவது சித்தர்கள் மூக்கு பயிற்சி செய்வார்கள். அவர் களுக்கு கிட்டத்தட்ட பென்சில் போல் இருக்கும் மூக்கு. அது போன்ற மூக்கு இருந்தால் பிரணயாமம் வாசியாம் செய்பவர்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
 
அந்த மாதிரி மூக்கு அமைப்பு இருந்தால் எதிர்காலத்தைப் பற்றி அறிவும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்வா ர்கள்.
 
11. நெற்றி:
 
 
 
 
 
 
 சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது. 
 உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும்.
 
நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள கோடு களுக்குத்தான் மிக முக்கியம். 2 அல்லது 3 கோடுகள் இருப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்குமேல் இருப்பது நல்லதற்கல்ல.
 
செவியின் அதாவது காதின் அமைப்பு பரந்து விரிந்து இருக்கவேண்டும். செவி குறுக குறுக மனநிலையும் குறுகி இருக்கும். சிந்தனையும் குறுகலாக இருக்கும்.

Feb 3, 2014

ஒரு நாளைக்கு 100 முறை ஆர்கஸம் - வினோத நோயால் தவிக்கும் பெண்


Woman who has up to 100 orgasms a DAY இங்கிலாந்தைச் சேர்ந்த 44 வயதாகும் கிம் ராம்சே (Kim Ramsey) பெரும் செக்ஸ் பிரச்சினையில் சிக்கி தினந்தோறும் அவஸ்தைப்பட்டு வருகிறார். சாதாரண வேலையைக் கூட செய்ய முடியாமல் தவிக்கிறார். ரயிலிலோ, பஸ்ஸிலோ கூட போக முடியாமல் திணறி வருகிறார். இத்தனை துயரங்களுக்குக் காரணம் - அவருக்கு வந்திருக்கும் ஆர்கஸப் பிரச்சினைதான்.

ஒரு நாளைக்கு 100 முறையாவது அவருக்கு ஆர்கஸம் எனப்படும் செக்ஸ் உச்சநிலை ஏற்பட்டு விடுகிறதாம். லேசான அதிர்வும், அசைவும் கூட அவரை கிளைமேக்ஸுக்குக் கொண்டு போய் விடுகிறதாம்.

கிம் ராம்சே இங்கிலாந்தின் ஹிட்சின் பகுதியிலுள்ள ஹெர்ட்போர்ட்ஷயரைச் சேர்ந்தவர். நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வந்திருப்பது Persistent Genital Arousal Disorder (PGAD) என்ற பிரச்சினையாகும். இதை சரிப்படுத்த முடியாது என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.

இவர் 2001-ம் ஆண்டு மாடிப்படியிலிருந்து உருண்டு கீழே விழுந்துள்ளார். அப்போது முதல்தான் இந்த குறைபாடு அவரைத் தொற்றிக் கொண்டு விட்டதாம். அவரது முதுகெலும்பில் டார்லோவ் சிஸ்ட் (Tarlov cyst ) என்ற கட்டி வந்துள்ளது. அந்த இடத்திலிருந்துதான் பெண்களுக்கு ஆர்கஸம் உருவாவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். எனவேதான் கிம்முக்கு நூற்றுக்கணக்கில் தினசரி ஆர்கஸம் ஏற்படுகிறதாம்.

தனது நிலை குறித்து கிம் கூறுகையில், "மற்ற பெண்களெல்லாம் ஆர்கஸம் வருவதற்கு என்ன செய்யலாம் என்று துடிக்கிறார்கள். ஆனால் நானோ என்ன செய்து இந்த ஆர்கஸத்தை தடுத்து நிறுத்துவது என்று துடிக்கிறேன். தொடர்ந்து நான்கு நாட்கள் வரை கூட எனக்கு தொடர்ச்சியாக ஆர்கஸம் வந்துள்ளது. அப்போதெல்லாம் எனக்குப் பைத்தியம் பிடித்தது போல இருக்கும்.

பல்வேறு பயிற்சிகளை செய்து பார்த்தேன். முடியவில்லை. ஒரு முறை எனக்கு தொடர்ந்து 36 மணி நேரத்திற்கு ஆர்கஸம் நீடித்தது. எனது நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். அந்த நாளில் எனக்கு 200க்கும் மேற்பட்ட ஆர்கஸங்கள் ஏற்பட்டன. அதனால் ஏற்பட்ட வேதனையும், வலியும் சொல்லில் மாள முடியாதது.
என்னால் தினசரி வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியவில்லை. என்னுடைய உடம்பு என்னுடைய கட்டுப்பாட்டிலேயே இல்லை. பொது இடங்களுக்குப் போக எனக்குப் பயமாக உள்ளது. ரயிலில் பயணம் செய்ய முடியவில்லை. காரில் கூட போக முடியவில்லை. நடந்து போனால் கூட லேசான அதிர்வு ஏற்பட்டால் உடனே ஆர்கஸம் வந்து விடுகிறது.

உடனே உதடுகளை அழுந்தக் கடித்துக் கொண்டு கைகளை குறுக்காக கட்டிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் சமாளிப்பது பெரும் அவஸ்தையானதாகும்" என்று கூறுகிறார்.

Jan 28, 2014

உயிர் ஜனனம் [ மருத்துவ அறிவியல் ]


இயற்கையின் சிருஷ்டியில் மிகமிக உன்னதமான படைப்பு, மனிதக் குழந்தைதான். உயிரினங்களிலேயே மிக உயர்வானதாக இருப்பதும் மனிதன்தான். இத்தகைய மனித உயிர்... தாயின் கருப்பையில் பத்து மாதம் வளர்ந்து... பிரசவம் என்னும் அற்புத நிகழ்வுக்குப் பின் வெளியுலகுக்கு வருவதை நாம் அறிவோம். ஆனால், மக்கள் எண்ணத்தில் ஆதிகாலத்திலிருந்து இன்றுவரை எப்படி உயிர் உருவாகிறது? என்ற சுவாரஸ்யமான தேடல் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்தக் காலத்தில், விஞ்ஞான வளர்ச்சி இல்லாததினால் ஒரு பெண்ணின் உடம்புக்குள் நிகழ்வதை வெளியிலிருந்து தெரிந்துகொள்ள இயலாத நிலை இருந்த தால், கரு எப்படி உருவாகிறது என்பது தெரியாமல் இருந்தது. விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், பல்லாயிரம் ஆண்டுகளாக ஆணும் பெண்ணும் செக்ஸில் ஈடுபட்டு, ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையை சந்தித்துக் கரு உருவாகிறது என்பது தெரியாமலே இருந்தது என்பதே உண்மை!

ஒரு புது உயிர் பெண்ணின் கருவறையில் உருவாக வேண்டும் என்றால்& ஆணின் பிறப்புறுப்புகள் சரியாக இருப்பதுடன், அதன் செயல்பாடுகளும் நன்றாக இருக்க வேண்டும். அதிலிருந்து போதுமான விந்து வெளியேறி, பெண்ணின் பிறப்புறுப்பில் சேரவேண்டும். இதற்கு பெண்ணின் பிறப்புறுப்பும் சரியாக அமைந்து, அதன் செயல்பாடும் நன்கு அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான், விந்திலிருந்து வெளியேறும் உயிரணு, கருவாக உருமாற வாய்ப்பு ஏற்படும்.

ஆணின் பிறப்புறுப்பு இரண்டுவிதமாக அமைந்துள்ளது. கண்ணுக்குப் புலப் படுவது மாதிரியான அமைப்பு. கண்ணுக்குத் தெரியாமல் உட்புறமாக அமைந்திருக்கும் உறுப்புகள். ஆண்குறி, விதைப்பை ஆகியவைக் கண்ணுக்குத் தெரியும் உறுப்புகள். கண்ணுக்குத் தெரியாமல் உட்புறமாக அமைந்திருப்பவற்றில், விதைகள் உட்பட பல உறுப்புகள் உள்ளன.

கருவை உருவாக்க ஆணின் விந்தில் உள்ள உயிரணுவால் (Cell / Stem Cell) மட்டுமே முடியும். இந்த உயிரணு உள்ள விந்து, பெண்ணின் பிறுப்புறுப்புக்குள் செல்லப் பயன்படுவதுதான் ஆண் குறி.


[சமீப காலம்வரை, செக்ஸில் ஈடுபட்டால் மட்டும்தான் கரு உருவாக முடியும் என்ற நிலைமை இருந்தது. அதனால்தான் ஆண் குறிக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது. ஆண் குறியைப் பெண் குறிக்குள் செலுத்துவதற்காகவே இயற்கை, ஒரு விஷயத்தை உண்டாக்கியிருக்கிறது. அதுதான் செக்ஸ் இன்பம். ஆனால், இன்று மருத்துவ விஞ்ஞானம் மிகவும் முன்னேறிவிட்டது. ஆண் குறியைப் பயன்படுத்தாமல்... செக்ஸில் ஈடுபடாமல் அவனுடைய உயிரணு உள்ள விந்தை மட்டும் பயன்படுத்திக் கரு உருவாக்க பல வழிமுறைகள் வந்துவிட்டன. பெண்ணின் கருப்பையிலிருந்து கருமுட்டை வெளிவரும் சமயத்தில், ஆணின் விந்தை எடுத்து அதற்குள் செலுத்தி விடுவது ஒரு வழி. இதற்கு இன்ட்ரா யுடிரியன் இன்செமினேஷன் (interuterine insemination) என்று பெயர். இன்னொரு வழிமுறை, சோதனைக் குழாய் குழந்தை. இதில் ஆணின் உயிரணு, பெண்ணின் கருமுட்டை இரண்டையும் தனியாக வெளியில் எடுத்து, சோதனைக் குழாயில் வைத்துக் கருவை உருவாக்கி விடுகிறார்கள். ]


பொதுவாக ஒரு ஆண், பருவ வயதை அடைந்த பின்னர் அவனின் ஆண் குறி 3 முதல் 4 அங்குலம் (விறைப்பு தன்மையில்லாதபோது) நீளமாக இருப்பதுடன், ஒரு அங்குலம் சுற்றளவு கொண்டிருக்கும். சாதாரண நிலையில் 4 அல்லது 5 அங்குலம் இருக்கும் ஆண் குறி, விறைப்புத் தன்மை அடையும்போது 7 அங்குலம் வரை நீளும். சுற்றளவு ஒன்றரை அங்குலமாகப் பெருக்கும். எல்லோருக்கும் பொதுவாகக் கட்டாயமாக இப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. இதுவொரு சராசரி அளவு. விதவிதமான உயரம், அதற்கேற்ப விதவிதமான எடைகளில் ஆண்கள் இருப்பதை போல அவர்களின் ஆண் குறியும் சிறிதாகவும் பெரிதாகவும் அமைந்திருக்கும். அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில், சாதாரண நிலையில் ஆண் குறி எந்த அளவில் இருந்தாலும், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் விறைக்கும்போது எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவுக்கு வந்துவிடும். அதேபோல, ஆண் குறி விறைத்த நிலையில் பெண் குறியின் கடைசிவரை உள்ளே போனால்தான் கரு உருவாகும் என்று கருத வேண்டாம். ஆண் குறியின் முனை சிறிதளவு உள்ளே போனால்கூட போதும்.


[ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்த விறைப்பு நிலையில் ஆண் குறியின் நீளம் இரண்டு அங்குலம் இருந்தாலே போதுமானது. ஏனெனில், பெண்ணின் பிறப்புறுப்பின் வெளிப்புற முன்பக்கத்தில் இரண்டு அங்குலத்தில் மட்டும்தான் உணர்ச்சி நரம்புகள் அமைந்துள்ளன. எனவே ஆண் குறி விறைப்பு நிலையில் இரண்டு அங்குலம் இருந்தாலே போதுமானது. அதற்கு மேல் அதிகமாக இருப்பதால் கூடுதல் இன்பமோ, பயனோ கிடைக்கப் போவதில்லை. பொதுவாக இயற்கை எல்லா ஆண் களையுமே போதுமான அளவுள்ள ஆண் குறியுடன்தான் படைத்திருக்கிறது. ஆனால், பத்து லட்சத்தில் ஒருவருக்கு விதிவசமாக மிகமிக சிறிய அளவிலான ஆண் குறி, பிறவிக் குறைபாடாக அமைந்துவிடலாம். இதற்கு மைக்ரோ பீனிஸ் என்று பெயர். ]


அடுத்து, விதைப்பையைப் பற்றி பார்ப்போம். ஆண் குறிக்கு கீழே விதைப்பை அமைந்துள்ளது. மெல்லிய சதை வடிவில் சாதாரண நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த விதைப்பை, உணர்ச்சிவசப்படுகிறபோது, அதாவது விறைப்பு நிலையில், உடம்போடு ஒட்டிக் கொள்கிற மாதிரி சிறிது சுருங்கி விடும். இதற்குள் இரண்டு விதைகள் உள்ளன. பொதுவாக நமது உடம்பின் வெப்ப நிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட்டாகும். விதைப் பைக்குள் இருக்கும் விதை நன்கு வேலை செய்ய வேண்டும் என்றால், உடம்பின் வெப்ப நிலையைவிட 3 முதல் 4 டிகிரி ஃபாரன்ஹீட் குறைவாக இருக்க வேண்டும். எனவேதான், உடம்புக்கு வெளியே பை போன்ற உறுப்பை படைத்து, அதற்குள் உடம்பின் பொது வெப்ப அளவைவிட குறைவான வெப்ப நிலையைப் படைத்து, அதில் விதைகளை வைத்திருக்கிறது இயற்கை.


[விதைப் பைக்குப் போதுமான காற்று கிடைக்காமல் போகும் என்பதாலும், விதைப் பையின் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதாலும்தான், வெப்ப மண்டலப் பிரதேசங்களில் வசிக்கும் ஆண்கள் இறுக்கமான ஆடைகளைக் அணியக் கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது. அப்படியில்லாமல் இறுக்கமான உடைகளைத் தொடர்ந்து பயன்படுத்தினால், விதைப்பையின் வெப்ப நிலை உயர்ந்து உயிரணுக்களின் தரமும், செயல்பாடும் பாதிக்கப்படும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. அதனால்தான் மருத்துவர்கள் 24 மணி நேரமும் உள்ளாடைகளை அணியக்கூடாது என்றும், பருத்தி உடைகளும், தளர்வான உடைகளும்தான் உகந்தது என்றும் சொல்கிறார்கள். ]


விதைப்பையில் இரண்டு விதைகள் உள்ளன. ஒவ்வொரு விதையும் ஒன்றரை அங்குல நீளம் ஒரு அங்குல அகலத்தில் நீள்கோள வடிவில் அமைந்திருக்கும். ஒவ்வொன்றின் எடையும் ஒரு அவுன்ஸ் (சுமார் 28 கிராம்) இருக்கும். இது பருவமடைந்த ஆண்களுக்கு! எல்லோருக்கும் இடது பக்கத்தில் உள்ள விதை எடை சிறிது கூடுதலாகவும், சிறிது கீழிறங்கியும் இருக்கும். இது ஏன் என்பதற்கான காரணத்தை மருத்துவ உலகம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் யூகமாக, நடக்கும்போது இரண்டு விதையும் இடிபடாமல் இருப்பதற்காகவும், அடிபட்டால் கசங்கி விடாமல் இருப்பதற்காகவும் இப்படி அமைக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

இந்த விதைகள், கரு உருவாக்கக்கூடிய உயிரணுக்களைத் தயார் செய்வது, ஆண் ஹார்மோன் எனப்படும் டெஸ்டாஸ்டொரான் (ஜிமீஷீமீக்ஷீஷீஸீமீ) தயாரிப்பது என இரு வேலைகளைச் செய்கிறது. கம்பீரமான குரல், மீசை, தாடி, அழகான தோற்றம், தசைகளின் வளர்ச்சி, செக்ஸ் எண்ணங்கள் அதற்கான தூண்டுதல்கள் போன்றவை இந்த ஆண் ஹார்மோனின் பரிசுதான்!

ஒவ்வொரு ஆணின் உடம்புக்குள்ளும் அடிவயிற்றில் இரண்டு சுரப்பிகள், பை மாதிரி அமைந்திருக்கும். செமினல் வெஸிக்கிள்ஸ் எனப்படும் சுரப்பி, சர்க்கரை நீரைப் போன்ற ஒரு திரவத்தைத் தயார் செய்கிறது. இந்தத் திரவம் விந்தின் ஒரு பகுதியாகும். அடுத்து, ப்ராஸ்டேட் கிலாண்ட் என்பது சிறுநீர் பைக்குக் கீழ் அமைந்துள்ளது. இது ப்ராஸ்டேட் ஃப்ளூய்டு எனும் திரவத்தை உற்பத்தி செய்கிறது. இதுவும் விந்தின் ஒரு பகுதியாக மாறும்.


[ஆதிகாலத்திலிருந்தே, ஆணின் ஜனன உறுப்பில் உருவாகும் விந்துக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. எல்லா நாட்டு மக்களிடமும் இந்த மனோநிலை இருந்தது. ஒரு குழந்தையை உருவாக்க மட்டுமே விந்து தேவைப்படும், மற்றபடி செக்ஸ் இன்பத்துக்கோ, செக்ஸ் செயல்பாட்டுக்கோ விந்து துளிகூட தேவையில்லை என்பதை மருத்துவ விஞ்ஞானம் நிரூபித்த பிறகுதான் விந்துக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் குறைய ஆரம்பித்தது.. ]


ஒரு ஆணின் உடலில் உள்ள விதை, செமினல் வெஸிக்கில்ஸ், பிராஸ்டேட் என்ற மூன்று சுரப்பிகள் சுரக்கும் நீர்களின் கலவைதான் விந்து. இந்த விந்துவை உற்பத்தி செய்வதில் விதையின் பங்கு 1 சதவிகிதம், செமினல் வெஸிக்கில்ஸின் பங்கு 60 சதவிகிதம், பிராஸ்டேட்டின் பங்கு 39 சதவிகிதம்.

கருமுட்டையுடன் சேர்ந்து கருவை உருவாக்கும் திறனை உயிரணு பெற்றிருந்தாலும், அந்த உயிரணுவுக்கு சக்தி கொடுத்து, ஆரோக்கியம் அளிப்பது செமினல் வெஸிக்கில்ஸ் திரவம்தான். அதுபோல விதையில் உருவாகும் உயிரணு, விதைக்குள் வளைந்து நெளிந்து செல்லும் குழாய்களுக்குள் நீண்ட தூரம் நகர்ந்து, பின்பு பெண்ணின் பிறப்புறுப்பிலும் பயணம் செய்து கருப்பையை அடைய அதற்கு சக்தியையும், ஆரோக்கியத்தையும் தருவது செமினல் வெஸிக்கில்ஸ் திரவத்தின் பணி. இதில் பிரக்டோஸ் என்கிற சர்க்கரை பொருள் இருப்பதால், கிட்டத்தட்ட 6 கலோரி அளவு சக்தியை இது உயிரணுவுக்குத் தருகிறது.

அதுபோல், பெண்குறியின் பாதையில் அமிலங்கள் நிறைந்திருக்கும். வெளியிலிருந்து கிருமிகள் அப்பாதைக்குள் நுழைய முயற்சிக்கும்போது இந்த அமிலங்கள் அக்கிருமிகளை அரித்துவிடும். இதன் மூலம் பெண்ணின் கருப் பையையும், கருமுட்டையையும் கிருமிகளிடமிருந்து பாதுகாக்கப்படுகின்றது. ஆனால், இந்த அமிலம் கிருமிகளை மட்டுமல்ல, ஆணின் உயிரணு வையும் சிதைக்கும் சக்தி பெற்றது. ஆகவே உயிரணு இந்த அமிலங்களால் சிதைக்கப்படாமல், பெண்ணின் உறுப்புக்குள் போவதற்காக பிராஸ்டேட் சுரப்பி உதவுகிறது. அதாவது, அமிலத்தன்மைக்கு எதிரான காரத்தன்மை கொண்டதாக இந்தத் திரவம் இருக்கும். இதனால் அமிலத்தன்மை உள்ள பாதையில் உயிரணு எந்த சேதமுமின்றி பயணிக்கும்.

விதை, செமினல் வெஸிக்கில்ஸ், பிராஸ்டேட் மூன்றின் பணிகளையும் எவராலும் கட்டுப்படுத்த முடியாது. ஒரு ஆண் பருவ வயதுக்கு வந்த நாள் தொடங்கி ஆயுளின் அந்தி வரைக்கும்... ஒரு நொடிகூட ஓய்வின்றி இவை மூன்றும் தங்கள் வேலையைச் செய்து கொண்டே இருக்கும். இவை இப்படி பணிபுரிவதால், ஒரு ஆரோக்கியமான ஆணின் விதை ஒரு நிமிஷத்துக்கு 50,000 உயிரணுக்கள் அல்லது ஒரு நாளில் ஏழு கோடியே இருபது லட்சம் உயிரணுக்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது. பிறக்கும்போதே ஜனன உறுப்பில் கோளாறு, பிறப்புறுப்பில் தொற்று நோய்கள், பிறப்புறுப்பில் அடிபட்டு காயம் ஏற்படுவது இந்த மூன்று நிலையில் மட்டும்தான் இதன் பணி பாதிக்கப்படலாம்.

வேளாண் துறையில் விதை மற்றும் மண் இந்த இரண்டின் முக்கியத்துவத்தை நாம் அறிவோம். இந்த இரண்டும் ஒரு பயிர் வளர, அடிப்படையான விஷயங்கள். அதேபோல்தான், ஒரு உயிர்வளர விதை என்ற உயிரணுவும், அதைத் தாங்கிச் சுமந்து வளர்க்கக்கூடிய கர்ப்பப் பை என்ற நிலமும் தேவை!

ஆணின் விதையிலிருந்து உருவாகும் உயிரணுவில் தலை, உடம்பு, வால் என மூன்று பகுதிகள் உள்ளன. தலைப்பகுதி கிட்டத்தட்ட வேல் வடிவத்தில் அமைந்திருக்கும். இந்தத் தலைப் பகுதியில்தான் ஒரு மனிதனின் பரம்பரைத் தன்மைகள் பொதித்து வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட அந்த மனிதனின் குணம், நிறம், பரம்பரை நோய்கள் போன்ற அனைத்தும் உயிரணுவின் தலைப் பகுதியில்தான் அடங்கியிருக்கும். ஒவ்வொரு உயிரணுவின் தலைப்பகுதியிலும் 23 குரோமோசோம்கள் இருக்கும் (பெண்ணின் கருமுட்டையிலும் 23 குரோமோசோம்கள் இருக்கும்).

உயிரணுவின் உடல் பகுதியை, உயிரணுவின் பவர் ஹவுஸ் என்றுதான் சொல்லவேண்டும். ஆண்குறியிலிருந்து வெளியேறும் ஒரு உயிரணு... பெண்ணின் பிறப்புறுப்புப் பாதையிலும், பெலோபியன் குழாய்களிலும் நீச்சலடித்துக் கருப்பைக்குள் செல்ல வேண்டும். இப்படி முழு வீச்சுடன் முண்டியடித்து நீந்தி செல்வதற்கான சக்தியை உயிரணுவுக்குத் தருவது, உயிரணுவின் உடல் பகுதிதான்.

பெண்ணின் பிறப்புறுப்புக்குள் உயிரணு நீந்திச் செல்லப் பயன்படுவது, அதன் வால்பகுதி. தலைப்பிரட்டை எனப்படுகிற தவளைக் குஞ்சு மாதிரிதான், உயிரணுவின் வடிவம் ஏறக்குறைய இருக்கும். வாலின் உதவியுடன் நீந்தும் உயிரணு மணிக்கு 5 முதல் 7 அங்குலம் வரை நீந்த முடியும்.


[தவளைக் குஞ்சை கண்ணால் பார்ப்பதுபோல், உயிரணுவைப் பார்க்க முடியாது. மைக்ராஸ்கோப் மூலம்தான் பார்க்க முடியும். 17&ம் நூற்றாண்டு வரை உயிரணுவைப் பற்றி யாருக்கும் சரியாகத் தெரியாததற்குக் காரணம், மைக்ராஸ்கோப் கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததுதான். அதே நூற்றாண்டில் டென்மார்க்கை சார்ந்த விஞ்ஞானி லீவன் ஹுக், மைக்ராஸ்கோப்பைக் கண்டுப்பிடித்த பிறகுதான் மருத்துவ உலகில் பல அற்புதங்களை, பேருண்மைகளைக் கண்டறியும் வாய்ப்பு கிட்டியது. தான் கண்டுப்பிடித்த மைக்ராஸ்கோப்பிலேயே முதன்முதலாக உயிரணுவைப் பரிசோதித்து, உயிரணு என்பது இப்படித்தான் இருக்கும் என்று உலகின் கூரையில் நின்று கூவினார் லீவன் ஹுக்! ]


ஆணின் விதையில் உருவாகும் உயிரணு, உருவாகும் போதே இன்னொரு உயிரை உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்குத் தகுதியோடும், பக்குவமாகவும் இருப்பதில்லை. படிப்படியாக வளர்ந்துதான் அது ஒரு பக்குவநிலைக்கு வருகிறது. பக்குவப்பட்ட ஒரு உயிரணு உருவாகக் கிட்டத்தட்ட 60 முதல் 72 நாட்கள் வரை ஆகும். அத்தகைய உயிரணு, ஆணுறுப்பிலிருந்து வெளிவந்த பிறகு 72 மணி நேரமே உயிருடன் இருக்கும். அதன்பிறகு இறந்துவிடும். பக்குவப்பட்ட உயிரணு ஏதோ காரணங்களால் வெளிவர முடியாவிட்டால் (உதாரணமாகக் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்திருந்தால்), அது அங்கேயே இறந்துவிடும். இறந்த உயிரணுவில் உள்ள பொருட்கள் உடலுக்குள்ளேயே ஜீரணிக்கப்பட்டுவிடும்.

பெண்ணின் ஜனன உறுப்பு: ஆண் ஜனன உறுப்பு போலவே, பெண்ணின் ஜனன உறுப்பிலும் கண்ணுக்குத் தெரியும் உறுப்புகள், கண்ணுக்குத் தெரியாத உள் உறுப்புகள் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. இதழ்கள் மற்றும் யோனிமலர் எனப்படும் கிளிட்டோரிஸ், வெஸ்டிபியூல் போன்ற பகுதிகள் கண்ணுக்குத் தெரிபவை.

இதழ்களில் இரு பகுதிகள் உண்டு. லேபியா மெஜோரா எனப்படுவது மேல் இதழ். இந்த மேல் இதழை விரித்தால் தெரிவது, உள் இதழ். இதற்கு லேபியா மைனோரா என்று பெயர். இதில் இரண்டு அடுக்குகள் உண்டு. இந்த இதழ்கள் பெண்ணின் பிறப்புறுப்பை ஒரு சதைக் கதவாக இருந்து பாதுகாக்கின்றன. இவை வெறும் சதைக் கதவு மட்டுமல்ல... ஏராளமான உணர்ச்சி நரம்புகள் இவற்றில் பின்னிப் பிணைந்துள்ளன். ஒரு பெண்ணுக்கு செக்ஸ் சுகத்தை அளிப்பதில் இதழ்களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது. இதில் லேபியா மைனோரா இதழை விரித்தால், அதற்குள் இருப்பதுதான் வெஸ்டிபியூல். இது பிறப்புறுப்பின் உள் பகுதி. இதில் சிறுநீர் துவாரம் மற்றும் பெண்குறியின் உள்பாதை இரண்டும் இருக்கும்.

பெண்ணின் ஜனன உறுப்பில் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளே இருக்கும் பகுதிகளில் பெண்குறி உள்பாதை, கர்ப்பப் பையின் வாசல், கர்ப்பப்பை, பெலோபியன் டியூப், கருமுட்டைப் பை ஆகியவை அடங்கும்.

பெண் பிறப்புறுப்பின் உள்பாதை, கண்ணுக்குத் தெரியும் வெஸ்டிபியூல் பகுதியில் தொடங்கிக் கர்ப்பப்பை வாசல் வரை அமைந்திருக்கும். உள்பாதையில் ஒரு அங்குல தூரத்தில் அமைந்திருப்பது கன்னித்திரை.


[பெண் பிறப்புறுப்பின் உள்பாதை, பெண்ணுக்குப் பெண் வித்தியாசப்படும். சராசரியாக சாதாரண நிலையில் பெண்குறியின் உள்பாதையின் நீளம் மூன்றிலிருந்து ஐந்து அங்குலம் வரை இருக்கும். ஆனால், இந்த உள்பாதை தேவைக்கேற்ப நீளும் தன்மை கொண்டது. சில பெண்கள், ஆண் அளவுடன் ஒப்பிட்டுக் கவலை கொள்வார்கள். இந்தக் கவலையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்கள் திருமணத்துக்குப் பின்னர் வெஜினிஸ்மஸ் என்கிற செக்ஸ் பிரச்னைக்கு ஆளாகிறார்கள். இது போன்ற உணர்வில் உள்ள பெண்களுக்கு, பிறப்புறுப்பு இறுக்கமாகி பிரச்னை வரும். ஆனால், இது தேவை இல்லாத கவலை. பத்தாவது மாதம் ஒரு குழந்தையே இந்தப் பாதை வழியேதான் வெளிவருகிறது என்பதை பலரும் அறிவதில்லை. ]


அடுத்துக் கர்ப்பப் பையின் வாசல். இதுவும் நீளும் தன்மை கொண்டதே. இப்பகுதியில் மியூக்கஸ் எனும் சளிபோன்ற திரவம் உற்பத்தியாகி, அது கர்ப்பப்பை வாசலில் அடர்த்தியான சளிப்படலமாக அமைந்திருக்கும். கருமுட்டை வெளிவரும் நாளில், இந்த சளிப்படலம் கரைந்து, பிறப்புறுப்பு பாதை வழியாக வெளிவந்து விடும்.


[கருமுட்டை வரும் நாளில் மியூக்கஸ் சளிப்படலம் மெலிதாகிக் கரைந்துவரும் விஞ்ஞான உண்மையை வெள்ளைப்படுதல் என்று சில பெண்கள் தவறாக புரிந்துகொள்கின்றனர். ]


கண்ணுக்குத் தெரியாமல் பெண்ணின் உடலுக்குள் அமைந்துள்ளவை: கர்ப்பப்பை, கருமுட்டைப் பை, கருமுட்டை. கர்ப்பப் பைக்கு ஆங்கிலத்தில் யூட்ரஸ் (ஹிமீக்ஷீ) என்று பெயர். கர்ப்பப் பையின் பரப்பளவு, நம் ஒரு கையை இறுக்கி மூடும்போது கிடைக்கும் பரப்பளவு போன்றதுதான். முக்கோண வடிவில் இருக்கும் கர்ப்பப்பை, சாதாரண நிலையில் 3 முதல் 4 அங்குல நீளமும், 2 அங்குல அகல மும் உடையது. அதேசமயம், கருவுற்ற காலத்தில் இதன் நீளம் 12 முதல் 13 அங்குலமாகவும், அகலம் 8 முதல் 10 அங்குல மாகவும் விரிவடையும். முக்கோண வடிவத்தின் கூர்பகுதியில் கர்ப்பப் பையின் வாசல் இருக்கும். கர்ப்பப் பையின் சுவர்கள் அடர்த்தியாகவும் நீளும் தன்மை உடைய தாகவும் இருக்கும். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் அது இயல்பான நிலைக்கு செல்ல வேண்டும் என்பதற் காகத்தான் இப்படியொரு நீட்சித்தன்மையுடன் உள்ளது.

கர்ப்பப் பையின் சுவர்கள் மூன்று அடுக்கு களைக் கொண்டிருக்கும். உள்ளே இருக்கும் அடுக்குக்கு எண்டோமெட்ரியம் என்று பெயர். கரு உருவானதும் அது வளர்வதற்கு ஏதுவாக சற்று பருத்து, ஒரு குஷன் போல் பயன் தரும் இந்த அடுக்கு. ஒருவேளை கரு தரிக்க வில்லை என்றால் இறந்த கருமுட்டை, உப்ப லான எண்டோமெட்ரியத்தின் துகள்கள் எல்லாம் மாதவிடாய் சமயத்தில் ரத்தத்துடன் கலந்து வெளியேறி விடும். ஒவ்வொரு மாதமும் எண்டோமெட்ரியம் உப்பலாகும். கரு உருவாகவில்லை என்றால், கழிவுகள் மாதவிடாயின்போது வெளிவந்துவிடும். இது ஒரு சுழற்சியாகவே நிகழும். பெண் பருவமடைந்திருந்த நாளிலிருந்து மெனோபாஸ்(மாதவிடாய் முற்றிலும் நிற்கும் வயது) வரை இது நடக்கும்.

அடுத்து, பெலோப்பியன் டியூப். இது கர்ப்பப் பையின் மேல்புறம், இடது மற்றும் வலது பக்கத்தில் இரு குழாய்களாக இருக்கும். ஒவ்வொரு ஃபெலோப்பியன் குழாயும் 4 அங்குல நீளம், 2 மில்லிமீட்டர் குறுக்களவு கொண்டது. இதனுள்ளே சிறுசிறு நூல் மாதிரி சீலியா என்பது அமைந்திருக்கும். கருமுட்டையைக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திக் கர்ப்பப் பைக்குக் கொண்டு வருதற்காக இந்த சீலியாக்கள் மரவட்டையின் கால்களைப் போல் அசைந்து கொண்டேயிருக்கும்.


[பெண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்படும் போது இந்த ஃபெலோப்பியன் டியூப் பைதான் வெட்டித் தைப்பார்கள். ]


கரு முட்டைப் பை: ஒவ்வொரு பெண்ணுக்கும் இரண்டு கரு முட்டைப்பை கர்ப்பப் பைக்கு இடது புறமும், வலதுபுறமும் அமைந்திருக்கும் இவை சிறிய நீள் வட்ட வடிவில் ஒன்றரை அங்குல நீளம், ஒரு அங்குல அகலமும் உடையவை. ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே, கரு முட்டைப்பை இருக்கும். அதில் பக்குவப் படாத சுமார் இரண்டு லட்சம் கருமுட்டைகள் இருக்கும். இந்த லட்சக் கணக்கான கருமுட் டையில் (பருவம் எய்திய நாளிலிருந்து மெனோபாஸ் வரைக்கும்) ஏறக்குறைய 300 முதல் 500 கருமுட்டைகளே பக்குவத்துக்கு வருகின் றன. மீதி உள்ளவற்றை உடம்பே ஜீரணித்து விடும்.

ஒவ்வொரு மாதமும் இடதுபுற அல்லது வலது புற கருமுட்டைப் பையிலிருந்து பக்குவமடைந்த ஒரு கருமுட்டை, பையிலிருந்து வெளிபட்டு சீலியாக்களால் நகர்த்தப்பட்டு கருப்பைக்குள் வரும். இப்படி ஒவ்வொரு மாதமும் கருமுட்டை வெளிப்படுவதற்கு ஓவலேஷன் என்று பெயர். லத்தீன் மொழியில் முட்டைக்கு ஓவம் என்று பெயர். இந்தக் கருமுட்டை வெளியேறு தல் ஒவ்வொரு பெண்ணுக்கும் பருவமடைந்த நாளிலிருந்து மெனோபாஸ் வரை 4 வாரங்களுக்கு ஒரு தடவை தொடர்ந்து நிகழும். கருமுட்டையைப் பக்குவமடைய வைப்பது, அதை நான்கு வாரத்துக்கு ஒரு முறை வெளிவர வைப்பது போன்றவற்றை ஈஸ்ட்ரோஜன் எனப்படும் பிரத்யேக பெண் ஹார்மோன் செய்யும். பொதுவாக ஒரு பெண்ணுக்கு 45 வயதிலிருந்து ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது நின்று விடுவதால்தான் அந்த வயதில் மாதவிடாய் நின்று விடுகிறது.

கருமுட்டை கருப்பைக்குள் போனதும் அந்த மாதமே அப்பெண் கருவாகிவிட்டால், அந்த முட்டை எங்கிருந்து வெளிப்பட்டதோ அங்கே ப்ரஜஸ்டெரோன் (Progesterone) எனும் ஹார்மோன் உருவாகி, மேற்கொண்டு அடுத்த கருமுட்டை வெளிவராமல் பார்த்துக் கொள்ளும்.


[கர்ப்பத் தடை மாத்திரைகளில் இருக்கும் ஹார் மோன் மருந்துகள், வாய்வழி உள்ளே சென்று ப்ரஜஸ்டெ ரோனை உருவாக்கி, முட்டை வெளியேறாமல் பார்த்துக் கொள்ளும். இவ்வாறாகத்தான் இந்த மாத்திரைகள் கர்ப்பம் அடையாமல் பார்த்துக்கொள்கின்றன. ]


கருமுட்டை: ஆணின் உயிரணுவில் இருப்பது போலவே பெண்ணின் கருமுட்டையிலும் 23 குரோமோ சோம்கள் இருக்கும். பரம்பரை குணங்கள், நிறம், பரம்பரை நோய்க் கூறுகள் எல்லாம் இதில்தான் பொதிந்திருக்கும். கருமுட்டையின் குறுக்களவு ஒரு மில்லிமீட்டர். குண்டூசி தலை அளவுதான் இருக்கும். பையிலிருந்து முட்டை வெளியாகி ஏறக்குறைய 24 மணிநேரம் வரை உயிருடன் இருக்கும்.

கரு எப்படி உருவாகிறது: ஒருமுறை உடல் உறவு கொள்ளும்போது 380 முதல் 480 மில்லியன் உயிரணு பெண்ணுறுப்புக்குள் செல்லும். இந்த உயிரணுக்கள் பெண்குறி பாதை, கர்ப்பப்பை வாசல் என பலவற்றில் பயணித்து ஃபெலோப்பியன் டியூப்புக்குள் செல்ல கிட்டத்தட்ட மூன்றிலிருந்து ஐந்து மணி நேரம் ஆகும். இதனால், 480 மில்லியன் உயிரணுவில் சுமார் 3000 உயிரணுக்கள் மட்டுமே டியூப்புக்குள் செல்லும். இவற்றிலும் பல, அசைந்து கொண்டேயிருக்கும் சீலியாக்களை எதிர்கொள்ள முடியாமல், இறந்துபோய் சில நூறு உயிரணுக்களே எஞ்சி நின்று கருமுட்டைக்கு அருகில் போய் நிற்கும். இந்த சில நூறு உயிரணுக்களில், ஒரே ஒரு உயிரணு மட்டுமே கடைசியில் கருமுட்டையைத் துளைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிடும். ஒரு உயிரணு வந்தவு டன் கருமுட்டை மூடிக்கொள்ளும். இதன் மூலம் இன்னொரு உயிரணு உள்ளே வருவது தடுக்கப்படுகிறது. கருமுட்டையிலிருக்கும் 23 குரோமோசோம்களும், உயிரணுவில் இருக்கும் 23 குரோமோசோம்களும் சேர்ந்து (23 ஜோடி) 46 குரோமோசோம்களாகி உயிர் உருவாகிறது.

கருமுட்டையை உயிரணு துளைக்கும்போது, உயிரணுவின் தலைப்பகுதியில் இருக்கும் 23 குரோமோசோம்களை மட்டும் (நியூக்ளியஸ்) கருமுட்டைக்குள் செலுத்திவிட்டு, உயிரணுவில் வாலும் உடலும் இறந்துபோய் திரும்பி விடும். உயிரணு கருமுட்டையை மோதும்போது, உயிரணுவின் தலைப்பகுதியில் அக்ரோசின் எனும் ரசாயனம் வெளிப்பட்டு கருமுட்டையின் சுவரை அரித்து சிறிய துளையை ஏற்படுத்தும்.


[ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்கத் தேவையான அளவில் உயிரணுக்கள், ஆரோக்கியமான உயிரணுக்கள் ஓர் ஆணிடம் இருக்க வேண்டும். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் தனது விந்து கெட்டியாக இருக்கிறது என்றோ, நீர்த்துள்ளது என்றோ... நினைத்துகொண்டு சிலர் போலி டாக்டர்களிடம் சிகிச்சைக்கு சென்று ஏமாறுகின்றனர். விந்து கெட்டியாக இருப்பதற்கும், நீர்த்து இருப்பதற்கும் நாம் சாப்பிடும் உணவு, நம் உடலில் உள்ள நீர்சத்து, உடல் ஆரோக்கியம் போன்றவைதான் காரணம். ஆகவே விந்து கெட்டியாக அல்லது நீர்த்துப் போயிருப்பது ஒரு குறைபாடு அல்ல. ஆரோக்கியமான உயிரணு அதில் உள்ளதா என்பதே முக்கியமானது.. ]


உயிர் எப்படி வளர்கிறது: கருமுட்டையுடன் விந்தின் உயிரணு இணைந்ததும் கரு உருவாகிறது. ஆரம்பத்தில் கருவுக்குள் ஒரே ஒரு செல்தான் இருக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் அந்த ஒரு செல், இரண்டு செல் ஆகிவிடும். அடுத்தடுத்து, அவை பன்மடங்காகப் பெருகி நான்காவது நாளில் பல ஆயிரம் செல்கள் சேர்ந்த ஒரு பந்து மாதிரி ஆகிவிடும். இந்தப் பந்துக்கு மாருலா என்று பெயர். இந்த மாருலா, நான்காம் நாள் ஃபெலோப்பியன் டியூப்பிலிருந்து நகர்ந்து கர்ப்பப் பைக்குள் வந்துவிடும். ஏழாம் நாள் கர்ப்பப் பையில் உப்பிக்கொண்டிருக்கும் உள்சுவரான எண்டோமெட்ரியத்தில் இந்த மாருலா அமர்ந்துவிடும். அங்கே படிப்படியாகப் பத்தாவது மாதம் வரை வளரும்.

இது இயற்கையாக, இயல்பாக எல்லோருக்கும் நடைபெறும் கருத்தரித்தலாகும்.
ஆனால், வெகு சில பெண்களுக்கு நான்காவது நாள் ஃபெலோப்பியன் டியூப்பிலிருந்து, மாருலா நகராமல் அதற்குள்ளேயே கருவாக வளரும். இதற்கு எக்டோபிக் பிரகனன்சி (ectopic pregnancy) என்று பெயர். இது தாயின் உயிருக்கே ஆபத்தாகி விடும் கர்ப்பம். ஏனெனில், கர்ப்பப்பைக்கு இருக்கிற விரிந்துகொடுக்கிற தன்மை, பெலோப்பியன் டியூப்புக்கு இல்லை என்பதால்தான் இந்த ஆபத்து.

கரு எப்படி ஆணாகவோ பெண்ணாகவோ மாறுகிறது: உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் இருக்கும். இதில் 22 ஜோடி குரோமோசோம்களின் வேலை பரம்பரை குணம், நிறம், நோய்க்கூறு போன்றவற்றை நிர்ணயிப்பது. எஞ்சியுள்ள ஒரு ஜோடி, அதாவது 23&வது ஜோடிதான் பாலினத்தைத் தீர்மானிக்கும் குரோமோசோம் (chromosome). ஆணின் உயிரணுவில் உள்ள 23 குரோமோசோமில் 50 சதவிகிதம் எக்ஸ் குரோமோசோம்களாகவும், 50 சதவிகிதம் ஒய் குரோமோசோம்களாகவும் இருக்கும். பெண்ணின் கருமுட்டையில் உள்ள 23 குரோமோசோமில் 100 சதவிகிதமும் எக்ஸ் குரோமோசோம்கள் மட்டுமே இருக்கும். ஆணின் உயிரணுவில் உள்ள ஒய் குரோமோசோம் பெண்ணின் கருமுட்டையில் உள்ள எக்ஸ் குரோமோசோமுடன் சேர்ந்தால் எக்ஸ்&ஒய் ஆகி, ஆண் குழந்தை உருவாகும். உயிரணுவில் உள்ள எக்ஸ் குரோமோசோம் பெண்ணின் கருமுட்டையில் உள்ள எக்ஸ் குரோமோசோமுடன் சேர்ந்தால் எக்ஸ்&எக்ஸ் ஆகி பெண் குழந்தை உருவாகும்.


[ஒரு பெண்ணின் வயிற்றில் பெண் குழந்தை உருவாகக் காரணமாக இருப்பது ஆணின் உயிரணு என்பது தெரியாத பலர், பெண்ணிடதில் குறை உள்ளதாக அவர்களை கொடுமைக்கு ஆளாக்குகின்றனர். முழுக்க முழுக்க பெண், ஆண் என்பதைத் தீர்மானிப்பது ஆணின் உயிரணுதானே தவிர, பெண் அல்ல!.. ]


குழந்தை பிறக்காமை அல்லது குழந்தை உருவாக்க இயலாமை ஏன் ஏற்படுகிறது? :

ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்காமைக்கான காரணங்கள் தற்காலிகமாக இருந்தால் அதற்கு பெயர் இன்பெர்டிலிட்டி. அதுவே நிரந்தரமானவையாக இருந்தால் அதற்கு ஸ்டெரிலிட்டி என்று பெயர். ஒருவேளை, குழந்தை பிறக்காமைக்குக் காரணங்கள் நிரந்தரமானவையாக இருந்தாலும், இன்றைய நவீன மருத்துவத்தில் நல்ல சிகிச்சை முறைகள் உள்ளன. உதாரணமாக, ஆணுக்குத் தீர்க்கமுடியாத குறைகள் இருந்தால் டோனர் இன்செமினேஷன்... பெண்ணுக்கு சரோகேட் மதர் எனும் நவீன சிகிச்சை முறைகள் உதவுகின்றன.

பொதுவாக ஒரு பெண் கர்ப்பமாக வேண்டும் என்றால், கருமுட்டை வெளியாகும் தருணத்தில் உடல் உறவில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, பெண்ணின் ஜனன உறுப்பும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆணின் உயிரணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதுடன், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக உருவான கரு தங்கி வளருவதற்கு ஏற்றாற்போல கர்ப்பப் பையும் ஆரோக்கியமாக இருப்பதுடன் கர்ப்பம் தரிக்கும் பெண்ணின் உடலும் முழுமையான ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.

ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு ஆண் சார்ந்த காரணங்கள், பெண் சார்ந்த காரணங்கள் அல்லது இருவரையும் சார்ந்த காரணங்கள் என மூன்றுவிதமான காரணங்கள் உண்டு.
குழந்தையின்மைக்கு ஆண் சார்ந்த காரணங்கள் 40&லிருந்து 45 சதவிகிதம் இருக்கலாம். பெண் சார்ந்த காரணங்கள் 50&லிருந்து 55 சதவிகிதம் இருக்கலாம். 5 முதல் 15 சதவிகிதம் வரை இருவரையும் சார்ந்த காரணங்கள் இருக்கலாம்.


ஆண் சார்ந்த காரணங்கள்:

சம்பந்தப்பட்ட ஆணுக்குத் தரமான உயிரணு உற்பத்தியாவதில் பிரச்னை இருப்பது: ஒரு ஆண் செக்ஸில் ஈடுபடும்போது, அவனிடமிருந்து கண்டிப்பாக 2 மில்லி லிட்டர் விந்து வெளியேற வேண்டும். அப்போதுதான் குழந்தையை உருவாக்க முடியும். இப்படி வெளிவரும் விந்தில், ஒரு மி.லி&க்கு 20 மில்லியன் உயிரணுவாவது இருக்க வேண்டும். இதில், 30 சதவிகித உயிரணு ஆரோக்கியமான தரத்துடன் இருக்க வேண்டும். அதேபோல், இந்த 20 மில்லியன் உயிரணுவில் 50 சதவிகிதம் நல்ல நீந்தும் திறனைப் (மொடிலிட்டி) பெற்றிருக்க வேண்டும். 20 மில்லியன் உயிரணுவில், 25 சதவிகிதமாவது மிகமிக வேகமாக நீந்தும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
மேற்சொன்ன அளவுகள் குறைந்தபட்ச அளவுகள்தான். இவை உலக சுகாதார நிறுவனம் 1992&ல் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியுள்ளவை.

ஆண் உறுப்பில் அடிபட்டு காயம் ஏற்பட்டிருந் தாலோ, தொற்று நோய் ஏற்பட்டிருந்தாலோ, பிறவிக் கோளாறு இருந்தாலோ& தரமான உயிரணு உற்பத்தி யாவதில் பிரச்னை ஏற்படும். சத்தான உணவு, உடற்பயிற்சி, சரியான ஓய்வு இவற்றுடன் புகை மற்றும் மதுப்பழக்கம் இல்லாதிருக்கும் ஆணுக்குத் தரமான விந்தணு உற்பத்தியாவதில் பொதுவாகத் தடையேதும் இருப்பதில்லை.

உடலுறவில் ஈடுபடுவதில் பிரச்னை: சந்ததி உருவாக்குதல், இன்பம் அடைதல், உறவு களின் கட்டமைப்பு என செக்ஸுக்கு மூன்றுவித நோக்கங்கள் உண்டு. செக்ஸின் முதன்மையான, முக்கியமான நோக்கம்& சந்ததியை உருவாக்குவதுதான். இனப்பெருக்கம் ஒன்றுக்காகத்தான் செக்ஸ். எல்லா உயிரினங்களும் உலகில் பல்கிப் பெருகிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற இயற்கையின் ஏற்பாடுதான் இது. வெறும் இனப்பெருக்கம் என்றால், மனிதனுக்கு அதில் பெரிய ஈடுபாடு இருக்காது என்பதால், அதனுடன் ஒருவிதமான இன்பத்தையும் இணைத்து வைத்துள்ளது இயற்கை! செக்ஸ் இன்பத்துக்காக இணைசேரும் ஆணின் உயிரணு பெண்ணின், ஜனன உறுப்பில் தங்கி சந்ததியை உருவாக்குகிறது.

சில தம்பதிகளில், கணவனின் உயிரணு மனைவியின் உறுப்பில் தங்காத சூழலில், குழந்தை பிறக்காமல் போய் விடலாம். இப்படியொரு நிலை ஏற்பட சில காரணங்கள் உள்ளன. ஆண் உறுப்பில் விறைப்புத் தன்மை இல்லாதிருப் பது, தீவிரமான துரித ஸ்கலிதம் காரணமாக ஆண் உறுப்பு பெண் உறுப்புக்குள் நுழைந்தாலும் பெண் உறுப்புக்கு வெளியிலேயே விந்து வெளியேறி விடுவது, நல்ல விறைப்புடன் பெண் உறுப்புக்குள் நுழைந்தும் விந்து வெளியேறாமல் போவது போன்ற காரணங்களால் விந்து, பெண் உறுப்புக்குள் தங்காமல் போகலாம்.

உடலுறவு கொள்ளும் கால அவகாசத்தில் பிரச்னை: ஒரு நாளில் முதல் தடவை உடலுறவு கொள்ளும் போதுதான் போதுமான அளவில் விந்தும் அதில் போதுமான அளவு உயிரணுவும் இருக்கும். அதே நாளில் அடுத்தடுத்த முறை உடலுறவு கொள்ளும்போது வெளிப்படும் விந்தின் அளவு குறைவதுடன், அதில் போதுமான அளவில் உயிரணுவும் இருக்காது. அதேபோல் நிறைய நாட்கள் இடைவெளிவிட்டு உறவு கொள்வதால், உயிரணுவின் மூவ்மென்ட் பாதிக்கப்பட்டு, நீந்தும் திறன் குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், உயிருடன் இருக்கும் உயிரணுவின் எண்ணிக்கையும் குறைந்துவிடும்.

செக்ஸில் தவறான டெக்னிக்குகளைப் பின்பற்றுவது: பெண்ணை உடலுறவிற்கு தயார்நிலைக்குக் கொண்டுவராமல் உடலுறவில் ஈடுபடும்போது, பெண் பிறப்புறுப்பு ஈரப்பதமின்றி இருக்கும். பெண் பிறப்புறுப்புல் ஈரப்பதம் முன்விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் இயற்கையாகவே உண்டாக்குகின்றன. இதை தவிர்த்து செயர்க்கையாக ஈரப்பதத்தை உண்டாக்க எண்னை போன்ற சில பொருட்களை பயன்படுத்துவதால் இவை, உயிரணுவைக் கர்ப்பப் பைக்குள் போகவிடாமல் தடுக்கின்றன. மேலும், இவை கர்ப்பப்பை, பெலோப்பியன் குழாய் போன்றவற்றில் கிருமித் தொற்றையும் உண்டாக்குகின்றன. இதனால் கருமுட்டை வெளிவருவதும் தடுக்கப்படும். சமயத்தில், கரு உருவானால்கூட அது கர்ப்பப் பையில் தங்கி வளர முடியாத நிலையை இந்தக் கிருமித் தொற்று ஏற்படுத்திவிடும்.

ஆண் ஜனன உறுப்பில் பிறவிக் கோளாறு இருப்பது: பெண்குறிக்குள் ஆண்குறி நுழைந்து உயிரணு வெளிப்படும்போதுதான் கரு உருவாகும். ஆனால், சில ஆண்களுக்குப் பிறவியிலேயே ஆண் குறியின் முனையில் இருக்கவேண்டிய துவாரம் கீழ்ப்பக்கம் தள்ளி இருக்கும். இதனால் ஆண்குறி, பெண்குறிக்குள் நுழைந்தாலும், உயிரணு கர்ப்பப் பைக்குள் போகாமல் வெளியிலேயே வெளியேறிவிடும். இது ஒரு பிறவிக் குறை. இதற்கு ஹைபோஸ்பேடியாஸ் என்று பெயர். இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானத்தில் இக்குறையை நீக்க ஆபரேஷன் இருக்கிறது. இதன் மூலம் இக்குறையை நிவர்த்தி செய்துவிடலாம். சில ஆண்களுக்கு, பிறவிக் குறைபாட்டால் ஆண்குறி அளவுக்கதிகமாக வளைந்திருக்கும். இதனால் ஆண்குறி, பெண்குறிக்குள் போகவே போகாது. இந்தக் குறையையும் ஆபரேஷன் மூலம் சரிசெய்துவிட முடியும்.


பெண் சார்ந்த காரணங்கள்:

கருமுட்டை வெளியாகும்போதுதான் ஒரு பெண்ணால் கர்ப்பம் தரிக்க முடியும். சில பெண்களுக்குக் கருமுட்டை வெளியாகாமல்கூட இருக்கலாம். சில பெண்களுக்குக் கருமுட்டையும், உயிரணுவும் சந்தித்து கரு உருவானாலும் கூட& உருவான கரு, பெலோப்பியன் டியூப்பிலிருந்து நகர்ந்து கருப்பைக்கு வராமலேகூட இருந்து விடலாம். அப்படியே வந்தாலும் கர்ப்பப் பையில் தங்கி வளர முடியாத நிலைமை ஏற்பட லாம். இதனால் இந்தப் பெண்களுக்குக் குழந்தை பிறக்காமல் போகும்.

உயிரணுவானது கருப்பாதை, பெலோப்பியன் டியூப், கர்ப்பப்பை போன்ற இடங்களை நீந்திச் சென்றால்தான் கர்ப்பம் தரிக்க முடியும். ஆனால், சில பெண்களுக்கு உயிரணுவானது நீந்திச் செல்ல முடியாத அளவுக்குத் தடைகள் ஏற்பட்டு, அதனால் குழந்தை இல்லாமல் போகலாம். இன்னும் சில பெண்களுக்கு ஃபெலோப்பியன் டியூப்பில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக குழந்தை பாக்கியமற்றுப் போகலாம். அல்லது ஜனன உறுப்பில் கிருமி தொற்றிப் பாதிப்பு ஏற்பட்டு இக்குறை ஏற்படலாம்.

ஹார்மோன் கலாட்டா: பொதுவாக ஒரு பெண்ணுக்கு இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு தடவை மாதவிடாய் வந்தது என்றால், பதினான்காம் நாள் கருமுட்டை வெளிவரும். அப்படி வரும் கருமுட்டையின் ஆயுட்காலம் 24 மணி நேரம்தான். இந்தத் தருணத்தில் உடல் உறவு கொண்டால்தான் கரு உருவாக வாய்ப்பு உண்டு. ஆனால், சில பெண்களுக்கு கரு முட்டையே வெளிவராமல் கரு உருவாவது தடைபடுகிறது. கருமுட்டை வெளிவராமல் போவதற்குக் காரணம் ஹார்மோன் குறைபாடுகள்தான். உடல் எடை கூடுதலாக இருக்கும் பெண்களில் சிலருக்கும் குழந்தை இல்லாமல் இருக்கும். இவர்களுக்கு ஹார்மோன் குறைபாட்டால் கருமுட்டை வெளிவராமல் போய்விடலாம். இதுமட்டுமில்லை, தீவிர மன அழுத்தம்கூட கருமுட்டையை வெளிவராமல் செய்துவிடும் என்பது மருத்துவ உண்மை.

பொதுவாக கரு ஃபெலோப்பியன் டியூப்பில்தான் உருவாகும். அதன் பின்னர், நான்கிலிருந்து ஏழு நாட்களுக்குள் கரு நகர்ந்து கர்ப்பப் பைக்குள் வர வேண்டும். ஒருவேளை கருப்பையின் உட்சுவர் (எண்டோமெட்ரியம்) பலவீனமாகிப்போனால், பெலோப்பியன் டியூப்பிலிருந்து நகர்ந்து கர்ப்பப்பைக்கு வரும் கருவானது, அங்கு தங்கி வளரமுடியாத சூழல் ஏற்படும். இந்த எண்டோமெட்ரியம் ஆரோக்கியமில்லாமல் போவதற்குரிய காரணங்களில், ஹார்மோன் கலாட்டாவும் ஒன்று.

பெண் குறியின் பாதை எப்போதும் அமிலத்தன்மை கொண்டிருக்கும், இந்த அமிலத்தன்மையை விந்தில் உள்ள காரத்தன்மை மட்டுப்படுத்திவிடும். சில பெண்களுக்குக் கிருமித் தொற்றால், அமிலத் தன்மை அதிகரித்துவிடும். இதனால் உயிரணுக்கள் இறந்து விடும்.

கர்ப்பப் பையின் வாசலில் மியூக்கஸ் என்கிற அடர்த்தியான சளிப்படலம் ஒரு கதவுபோல இருக்கும். கருமுட்டை வெளியாகும் தருணத்தில் இது நீர்த்துப்போய் கசிந்து வெளியேறிவிடும். ஆனால், சில பெண்களுக்குக் கரு முட்டை வெளிவரும் நாளில் இந்த சளிப்படலத்தின் அடர்த்தி குறையாமல் போய்விடும். அப்போது இதுவே கர்ப்பப் பையின் வாசலில் தடையாக இருந்து& உயிரணுவைப் பைக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி விடும். இதன் காரணமாகவும் குழந்தைப் பிறப்பு தடைபடும்.

சில பெண்களுக்கு பெண்குறி பாதையிலும், கர்ப்பப்பை வாசலிலும் உயிரணுவை எதிர்க்கிற ஒருவித ரசாயனம் சுரக்கும். இதனால் உள்ளே வரும் உயிரணுவின் வீரியம் குறைந்துவிடும் அல்லது உயிரணு இறந்து விடலாம்.

ஃபெலோப்பியன் டியூப் பிளாக்: கரு முட்டையும், உயிரணுவும் சந்திக்கும் ஃபெலோப்பியன் டியூப்பில் அடைப்பு இருந்தாலும் கரு உருவாகாமல் போகலாம். பிறவி குறைபாடு, பால்வினை நோய், காச நோய் போன்றவற்றால் ஃபெலோப்பியன் குழாயில் அடைப்பு ஏற்படலாம். மிகவும் அரிதாக, சில பெண்களுக்கு மன அழுத்தத்தால் ஃபெலொப்பியன் டியூப்பில் பிளாக் ஏற்படலாம்.
கர்ப்பப் பைக்கு இரண்டு பக்கமும் உள்ள இரண்டு ஃபெலோப்பியன் டியூப்களில் ஏதாவது ஒன்றில் அடைப்பு இருந்தால், குழந்தை பிறக்க 50 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இரண்டிலும் அடைப்பு இருந்தால், அந்தப் பெண்ணுக்குக் குழந்தை பிறக்க நிச்சயம் வாய்ப்பே இல்லை.

பெண் ஜனன உறுப்பில் பிறவிக் குறைபாடு: பிறவியிலேயே கருமுட்டைப் பை, கர்ப்பப்பை, பெண்குறி பாதை போன்றவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாமல் குறைபாட்டுடன் பிறந்திருக்கும் பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் எட்டாக் கனவுதான். இன்னும் சில பெண்களுக்கு ஜனன உறுப்பு படைக்கப்பட்டிருக்கும். ஆனால், சரியாக வளர்ச்சி அடைந்திருக்காது. சில பெண்களுக்கு ஜனன உறுப்பு சரியாகவும் உரிய வளர்ச்சியும் பெற்றிருக்கும். ஆனால், பிறவியிலேயே ஜனன உறுப்புக்குப் பாதை இருக்காது. சிலருக்கு ஜனன உறுப்பில் பாதை இருக்கும். ஆனால், அது அடைபட்டிருக்கலாம். இது போன்றவர்களுக்கு உடலுறவிலும் பிரச்னை இருக்கும். இந்தக் குறையை ஆபரேஷன் மூலம் குணப்படுத்தலாம்.

செக்ஸ் பிரச்னையால் குழந்தை இல்லாமை: சில பெண்களுக்கு செக்ஸ் ஆசை இருக்கும். உணர்ச்சிவசப்படவும் செய்வார்கள். ஆனால், உடல் உறவில் ஈடுபட்டால் வலி எடுக்குமோ என்ற தேவையற்ற பயத்தில் உழல்வார்கள். அதன் காரணமாக அவர்களையும் அறியாமல் பெண்குறி பாதையை இறுக்கமாக்கி விடுவார்கள். திருமணமான புதிதில் சில பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கும். சில பெண்களின் இல்லற வாழ்வில் இதுவே தொடர்கதையாகவும் இருக்கும். இதன் காரணமாகவும் குழந்தை பிறப்பு தடைபட்டுப் போகும்.


இருவருக்கு மான காரணங்கள்:

குழந்தையின்மையைப் பொறுத்தவரை, கணவன்&மனைவி இருவருக்கு மான காரணங்கள் 5 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகித ஜோடிகளுக்குஇருக்கும். சில தம்பதிகளில் கணவருக்கும் சரி, மனைவிக்கும் சரி, எந்த பிரச்னையும் இருக்காது... ஆனால், குழந்தை பிறக்காமல் இருக்கும். இதற்கு மருத்துவரீதியில் இடியோபதிக் இன்ஃபெர்டிலிட்டி என்று பெயர். இன்னாதென்று அறியவே முடியாத ஏதோ ஒரு காரணத்தால்தான் இந்த நிலை ஏற்படுகிறது. இதற்கான காரணத்தை இன்றைய அதி நவீன மருத்துவ விஞ்ஞானத்தால்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவேளை, எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம்.

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 100 மருத்துவக் குறிப்புகள்


1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது. 

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

பெண்களுக்காக…
10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம். 

12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது. 

13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள். 

கர்ப்பக் கால கவனிப்பு!
14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே! 

15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது. 

16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.

26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது. 

27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.

28. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் 
புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு. 

31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.

உணவே மருந்து!
32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்! 

33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும். 

37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், 
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

மருந்தே வேண்டாம்!
49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.

50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.

51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.

லப்… டப்..!
53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.

55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள். 

56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள். 

57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 

கிட்னியைக் கவனியுங்கள்
58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்! 

60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது. 

61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை. 

பல்லுக்கு உறுதி!
62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.

63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.

65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.

66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.

68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.

69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது. 

70. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும். 

71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது. 

72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.

74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்

75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஜெனரல் வார்டு!
76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.

77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.

78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.

79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.

80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.

81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.

82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.

83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.

84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.

85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.

நில்… கவனி… செல்!
86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும். 

87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது. 

88. ‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.

89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.

90. ‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.

91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.

93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். 

94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.

எச்சரிக்கை
95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.

97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.

98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.

99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.

100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்.