Pages

Powered by Blogger.
Showing posts with label பெண்ணுறுப்பு. Show all posts
Showing posts with label பெண்ணுறுப்பு. Show all posts

Feb 11, 2014

பெண்களை பாதிக்கும் பாலியல் பிரச்சினைகளும் தீர்வு முறைகளும்!

திருமணமான பெண்களை அதிகம் பாதிக்கும் பாலியல் பிரச்சினைகளும், அவற்றுக்கான காரணங்களும், தீர்வு முறைகளும்
திருமணமான பெண்களிடம் அவர்களது செக்ஸ் வாழ்க்கைப் பிரச்சினைகள் குறித்து சமீபத்தில் ரகசிய ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. அதன்படி நூற்றுக்கு தொண்ணுறு பெண்களுக்கு செக்ஸ் உறவு தொடர்பான ஏதோ ஒரு பிரச்சினை இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
திருமணமான பெண்களை அதிகம் பாதிக்கும் சில செக்ஸ் பிரச்சினைகளும், அவற்றுக்கான காரணங்களும், தீர்வு முறைகளும் அலசப்பட்டன. அதன்படி.... மிகக் குறைவான செக்ஸ் ஆர்வத்திற்குக் காரணம்....
குழந்தைப் பருவத்தில் பெரும்பாலான பெண்களுக்கு ஏதோ ஒரு வகையில் மோசமான செக்ஸ் அனுபவம் கிடைக்கிறது.
செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாத வயதில் அவர்கள் சந்திக்கும் இந்த அனுபவம், அவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும் செக்ஸ் குறித்த தவறான எண்ணத்தை உருவாக்கி விடுகிறது.
இதனால் பல பெண்களுக்குத் திருமணத்திற்குப் பிறகும் செக்ஸ் அத்தனை ரசிப்பிற்குதியதாக இல்லை.
சாப்பிடுவது, தூங்குவது என்பது மாதிரி செக்ஸ் உறவும் ஏதோ மாமூலான ஒன்று என்கிற ரிதியில் செல்லும் போதும் பெண்களுக்கு அதன் மீதான ஆர்வம் குறைகிறது.
திருமணமான புதிதில் தம்பதியர் இருவரும் சேர்ந்திருந்த சந்தோஷ தருணங்கள், இருவரையும் கிளர்ச் சியூட்டிய விஷயங்கள் ஆகியவற்றை நினைவு கூர்வது இப்பிரச் சினைக்குத் தீர்வாக அமையலாம்.
தம்பதியர் இருவரும் சேர்ந்து குளிப்பது, புதிய இடத்தில், சூழ்நிலையில் உறவு வைத்துக் கொள்வதும் இதற்குத் தீர்வாகும்.
இன்னும் சில பெண்களுக்கு பிரசவம், களைப்பு, கோபம், மாத விலக்கு சுழற்சியில் ஏற்படும் கோளாறுகள், டென்ஷன் ஆகிய வற்றின் காரணமாகக் கூட செக்ஸில் ஆர்வம் குறைகிறதாம்.
மனரிதியான பாதிப்புகளாக இருந்தால் செக்ஸ் தெரபி மற்றும் கவுன்சலிங் மூலமும், உடல் ரிதியான பாதிப்புகளுக்கு ஹhர்மோன் ரிப்ளேஸ்மென்ட் தெரபி மூலமும் சிகிச்சை அளித்து இதைக் குணப்படுத்தலாம்.
 பிறப்புறுப்பு வறட்சி:
இதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. ஈஸ்ட்ரோஜன் ஹர் மோன் அளவு குறையும் போது வறட்சி ஏற்படலாம். தாய்ப் பாலூட்டும் பெண்களுக்கும், மெனோபாஸ் காலக் கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் இது சகஜம். இதற்கும் ஹhர்மோன் ரிப்ளேஸ்மென்ட் தெரபி பலனளிக்கும்.
குடிப் பழக்கம் இருக்கும் பெண்களுக்கும் பிறப்புறுப்பு வறட்சி ஏற்படுகிறது. ஆல்கஹலே அந்த வறட்சிக்குக் காரணம். குடியை நிறுத்தவதன் மூலமும், வழுவழுப்புத் திரவங்களை உபயோகிப்ப தன் மூலமும் இதைக் குணப்படுத்தலாம்.
 உறவின் போது வலி:
உறவின் போது சில பெண்களுக்குத் தாங்கவே முடியாத அளவுக்கு வலி ஏற்படலாம். பிறப்புறுப்புப் பாதையில் இரு புறங்களிலும் பட்டாணி அளவுக்குப் பெண்களுக்கு பார்த்தோலின் சுரப்பிகள் என்று உண்டு.
இவற்றின் வேலையே உறவின்போது வழுவழுப்புத் திரவத்தைக் கசியச் செய்வதுதான். இவை பாதிக்கப் படும் போது பிறப்புறுப்பில் வீக்கம், எரிச்சல் ஏற்படுவதோடு சில சமயங்களில் நடக்கவே முடியாத அளவுக்குக் கூட வலி தீவிரமாகலாம்.
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதை ஆன்டிபயாடிக் மருந்துகளின் மூலமோ, தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை மூலமோ சரி செய்து விட முடியும்.
வலி ஏற்படுகிற சரியான இடத்தையும், சரியான நேரத்தையும் (உறவு தொடங்கிய உடனேயா, உறவின் இடையிலா, உச்சக் கட்டம் அடைகிற போதா) சொன்னால் மருத்துவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.
 உறவே கொள்ள முடியாத நிலை:
ஆர்வமும், ஆரோக்கியமும் இருந்தும் கூட சில பெண்களால் உறவில் ஈடுபட முடியாத நிலை ஒன்று உண்டு. அதற்கு வாஜனிஸ்மஸ் என்று பெயர். செக்ஸைப் பற்றிய பயம், கடந்த காலக் கசப்பான செக்ஸ் அனுபவங்கள், பிரசவம் போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம்.
மெனோபாஸை அடைந்து விட்ட பெண்களுக்கு பிறப்புறுப்புத் திசுக்கள் சுருங்கியதன் விளைவாக கசிவு குறைவாக இருக்கும். இவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.
செக்ஸ் தெரபியின் மூலம் இந்தப் பெண்களுக்கு இடுப்புச் சுவர் தசைகளை எப்படி hpலாக்ஸ் செய்வது என்று கற்றுக் கொடுக்கப்படும். மேலும் பெண் மேலிருந்த நிலையில் உறவு கொள்வதும் இதற்குத் தீர்வாக அமையும்.
 உச்சக் கட்டத்தை அடைய முடியாமை:
சில பெண்களுக்கு உறவின் ஏதேனும் ஒரு கட்டத்தில் உச்சக் கட்டம் சாத்தியமாகிறது. இன்னும் சிலருக்கு செக்ஸின் போது குறிப்பிட்ட சில நிலைகளைக் கையாளும் போது உச்சக் கட்டம் கிடைக்கிறது.
இன்னும் சிலர் சுய இன்பம் காண்பதன் மூலம் மட்டுமே உச்சக் கட்டம் அடைகிறார்கள். குறிப்பிட்ட சிலருக்கு உச்சக் கட்டம் என்பது எப்போதுமே சாத்தியமாவதில்லை.
உச்சக் கட்டம் அடைய முடியாத பெண்கள் செக்ஸை அனுபவிக்கத் தகுதியற்றவர்கள் என்றோ, அவர்கள் உடலளவிலோ, மனத்தளவிலோ பாதிக்கப்பட்டவர்கள் என்றோ அர்த்தமில்லை.
உறவின் போது பெரும்பாலான பெண்களது கவனம் தன் கணவன் மீதே இருக்கிறது. கணவன் தேவைகளை முழுமையாக நிறை வேற்றுகிறோமா என்பதிலேயே அவர்கள் கவனம் போய் விடுவதால் தன்னை எது உச்சக் கட்டம் அடையச் செய்யும் என்பதைப் பற்றி நினைக்கத் தவறி விடுகிறார்கள்.
இந்த மாதிரிப் பெண்கள் உறவு இல்லாத நேரங்களில் தன் உடலைத் தொட்டுப் பார்த்து அதில் எந்த இடம் அல்லது எந்த மாதிhpயான ஸ்பரிசம் தனக்குக் கிளர்ச்சியைத் தருகிறது என்று கண்டறிய வேண்டும்.
அதைத் தன் கணவனிடம் சொல்லத் தயங்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக உறவின் போது அவசரம் இருக்கக் கூடாது. உச்சக் கட்டம் அடையவும் பெண்கள் மேல் நிலையில் இருந்து உறவு கொள்வது பலனளிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Jan 30, 2014

வெள்ளைப்படுதலும் அதை குணப்படுத்தும் வழிகளும்..

பெண்ணுறுப்பில் சாதாரணமாக இருக்கும் ‘கான்டிடா அல்பிகான்ஸ்’  எனும் காளானின் அதிக வளர்ச்சியால் விளையும் பொதுவான பெண்ணுறுப்பின் தொற்று பாதிப்பு தான்.

இது எதனால் ஏற்படுகிறது?

• குறைந்த நோய் எதிர்ப்பு, சக்தி பலவீனமான உடல் ஆரோக்கியம்.

• இந்த காளான் வகை தொற்றுக்கிருமிகள் சளி, காய்ச்சல் முதலியவற்றுக்காக சாப்பிடும் மாத்திரைகளாலும் அதிகமாக வளர்ச்சி அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் உண்டாகிறது.

• கர்ப்பம் அல்லது கருத்தடை மாத்திரைகளால் ஹார்மோன் அளவுகள் மாறி இந்த காளான்கள் வளர சரியான சூழ்நிலை உண்டாகிறது.

• நீரிழிவு வியாதி, உடல் பருமன்.

• இந்த காளான்கள் சாதாரணமாக குடலிலும், தோலிலும் இருக்கும். இங்கிருந்து இவை யோனிக்கு பரவும்.

• இறுக்கமான, ஈரத்தை உறிஞ்சாத உள் ஆடைகள் காளானின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

• சுகாதார குறைவு, வயிற்றில் பூச்சிகள்.

இந்த நோயின் அறிகுறிகள்......

• பெண்ணுறுப்பில் அரிப்பு, எரிச்சல்

• யோனிலிருந்து அடர்த்தியான, தயிர்போன்ற வெள்ளை திரவ வெளியீடு

• புண்படுவது – தேய்ப்பதினாலும், சொரிவதனாலும் அதிகரிக்கும்

• எரிச்சல்/ சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு

• உடலுறவின் போது வலி.

சிகிச்சை முறைகள்........

1. தனக்குதவி

• நீண்ட விரல் நகங்களால் சொரியவோ அல்லது தேய்க்கவோ செய்யாதீர்கள்.

• மிகச் சூடான நீரினால் கழுவ வேண்டாம்.

• குளிக்கும் டவலால் கடுமையாக துடைத்து கொள்ளாதீர்கள்.

• உடலுறவை சிகிச்சை பெறும் போது தவிர்க்கவும்.

2. ஆயுர்வேத மருந்துகள்...
அசோகரிஷ்டம், திராக்ஷதி சூரணம், அசோக்ருதம், அசோகாதிவடி, பிரதராந்தக ரஸ போன்றவை.

3. இதர குறிப்புகள் உணவு முறைகள்.........

• வெள்ளைப்படுதல், நோய் மற்றும் கொழுப்பு சத்து உணவுகள் சர்க்கரை இவைகளால் உண்டாகிறது. அதுவும் உங்கள் உடல் பருமனாக இருந்தால் இந்த உணவு வகைகளை தவிர்க்கவும். நிறைய பழங்கள், காய்கறிகள், தானியங்கள், சத்துள்ள பயறு வகைகள் சாப்பிடவும். தினமும் 6 லிருந்து 8 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் நோய்க்கு வாசனை அதிகமுள்ள சோப்புக்கள், குளிப்பதற்காக உபயோகிக்காதீர்கள்.

• மன உளைச்சலை குறைக்கவும்.

• உடற்பயிற்சி உதவும்.

• இந்த வியாதி உடலுறவினால் பரவும் நோயல்ல. இருந்தாலும் உடலுறவை தவிர்க்க முடியாவிட்டால் கணவரிடம் தெரிவிக்கவும் உடலுறவினால்  அதிகரிக்கவும்,  கணவருக்கும் தொற்று பாதிப்பு வரலாம். உடலுறவை தவிர்ப்பது நல்லது.

வீட்டு மருத்துவம்.......

• சிறிது கடுக்காய் நெல்லிக்காய் தாண்றிக்காயை சம அளவு எடுத்துப் பொடி செய்து ( திரிபலா சூரணம்) அதனை 2 லிட்டர் தண்ணீரில் காய்ச்சி வைத்துக் கொண்டு மிதமான சூட்டில் பெண் உறுப்பை கழுவி வந்தால் வெள்ளைபடுதல் மறையும்.

• மிகவும் குளிர்ந்த நீரில் 2 முறை தினசரி கழுவி வர வெள்ளைபடுதல் குறையும்.

• சிறிது வெந்தயத்தை எடுத்து தூளாக்கி டீ போடுவது போல கஷாயமாகப் போட்டு காலை வெறும் வயிற்றில் தினசரி பருகி வர வெள்ளைபடுதல் மறையும்.

• லோத்ரா பட்டையை நீரிலிட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு அந்த நீரால் காலை மாலை என இரு வேளை உறுப்பைக் கழுவி வர வெள்ளைபடுதல் கட்டுப்படும்.

ஆயுர்வேத மருத்துவம்.......

வெள்ளைபடுதலுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் அசோகப் பட்டை லோத்ரா பட்டை போன்றவை சிறந்த பயன் தரக் கூடியவை. இவை சேர்ந்த பல ஆயுர்வேத தயாரிப்புகள் உள்ளன. அவற்றை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உபயோகித்து சிறந்த பலனைத் தரும். ஆயுர்வேத முறையில் மட்டுமே வெள்ளைபடுதலை நிரந்தரமாக போக்கிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Jan 27, 2014

பெண்குறிகளின் அமைப்பு எப்படி இருக்கும்?




பெண்குறிகளின் அமைப்பு எப்படி இருக்கும்? இதனை 4 வகையாக பிரித்துள்ளார்கள் 1.தாமரை மொட்டு போல குவிந்தது,
2. வளர்பிறை போல வட்டமானது.
3. மடிப்பு மடிப்பாக சேர்ந்திருப்பது
4. எருமை நாக்கு போல சொரசொரப்பானது.
இந்த நான்கிலும் தாமரை மலர் போன்ற யோனி தான் அழகு. மற்ற மு°ன்றும் ஒன்றை விட மற்றொன்று தாழ்ந்தது.

பெண்களின் யோனியை ஐந்து பகுதிகளாக பிரித்து பார்க்கலாம்.
அவை உதடுகள், பூநரம்பு, யோனித்துவாரம், கருப்பை,சினைப்பை. உதடுகள்------இது கடிதடத்திற்கு கீழே வாயின் இதழ்களை போல் இருபுறத்திலும் தசைகளால் ஆகி மடிந்திருக்கும். வண்ணத்துப்பூச்சியின் இற்குகளை போல் காணப்படும். இந்த இதழ்களை திறந்து பார்த்தால் உள்புறம் சிவந்த நிறமாக காணப்படும். பூநரம்பு( கிளிட்டோரிஸ்) பெண்களை சொர்க்கத்தின் உச்சிக்கு கொண்டு செல்லும் காம உணர்ச்சி குவித்து வைக்கப்ட்டிருக்கும் இடம் இது என்று சொல்லலாம்.

அடிவயிற்றின் கீழ் பெண்குறி தொடங்கும் இடத்தில் ரோஜா மொட்டு போல் காணப்படும். உடலில் உள்ள பல நுண்ணிய ரத்தக்குழாய்கள் இந்த மொட்டில் தான் வந்து முடிவடைகிறது. இது உச்சக்கட்ட இன்ப உணர்வை தரும் பகுதி என்பதால் இயற்கை கூட இதனை மு°டி பாதுகாப்பாக வைத்திருக்கிறது. மேல் சொன்ன உதடு அமைப்பு இந்த கிளிட்டோரிஸ் ஐ மு°டி வைத்திருக்கும்.

ஆண்குறி உள்ளே செலுத்தப்படும் நிலையில், ஆண்குறியின் அழுத்தத்திற்கு ஈடு கொடுத்து பெண்குறியின் உதடுகள் ஆண்குறியுடன் இழுபட்டு யோனியின் உள்புறம் நோக்கி மடிய தொடங்கும். அப்போது, இந்த கிளிட்டோரிஸ் உதடுடன் சோந்து இழுபட்டு ஆண்குறியை வந்து தொடும்.பெண் ஆணுடன் வேகமான இயங்கி உடலுறவு கொள்ளும் போது, ஆண்குறி இழுபட்ட நிலையில் உள்ள கிளிடடோரிசுடன் உரசும்.அப்போது பெண்ணு்க்கு ஏற்படும் பரவச உணர்வு வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒன்று என்கிறார்கள்.

ஒரு பெண்ணுக்கு காமஉணரச்சி வேகமாக எழும்ப வேண்டுமானால் இந்த கிளிட்டோரிஸ் மொட்டை ஒரு ஆண் தனது உதட்டால் கவ்வி பிடித்து சுவைத்தால் போதும். அந்த பெண் தன்னிலை மறப்பது நிச்சயம். இந்த கிளிட்டோரிஸ் மொட்டின் முக்கியத்துவம் பற்றி தெரியாத ஆண்கள் ஒரு பெண்ணுக்கு முழுமையான சுகத்தை தர முடியாது என்பது உறுதி.

ஆண்குறி இந்த பூநரம்பை உராயும் போது தான் ஒரு பெண் காமத்தில் முழு திருப்தி பெறுகிறாள் என்பது உறுதி.ப புணர்ச்சி காலத்தில் இந்த நரம்பிலிருந்து ஒரு வகை நீர் சுரக்கிறது. இந்த பூநரம்புகள் தளர்ச்சியடைந்தாலும், உதடுகளில் உள்ள தசைநார்கள் பலம் இழந்தாலும் புணரும் ஆண்களுக்கு இன்பம் கிடைக்காது.

Jan 25, 2014

முதலிரவன்றுதான் கன்னித்திரை கிழியுமா?


முதலிரவன்றுதான் கன்னித்திரை கிழிகிறது என்ற எண்ணம் முன்பு நமது பெண்களிடம் இருந்தது. ஆண்களுக்கும் இது ‘கெளரவமான’ செயலாக இருந்தது. முதலிரவுன்று மனைவியிடம் ‘ரத்தம் பார்த்தால்தான் நாம் ஆம்பளை’ என்ற உணர்வும் முன்பு ஆண்களிடம் இருந்தது.

உடலுறவு கொண்டால் மட்டுமே கன்னித்திரை சவ்வு கிழிபடும் என்ற எண்ணம் இன்னும் கூட பலரிடம் இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை, உடலுறவு அல்லாமல் வேறு சில சமயங்களிலும் கூட கன்னித்திரை சவ்வு கிழிபடும் என்பதே உண்மை.

மேலும் கன்னித்திரை தொடர்பாக ஏகப்பட்ட கதைகள், அறியாமைச் செய்திகள் நிறையவே உலா வருகின்றன. கன்னித்திரை என்பது கணவரால் மட்டுமே கிழிபடும் என்ற எண்ணமும் கிராமப்புறங்களில் இன்னும் கூட நிலவி வருகிறது. இருப்பினும் உண்மை என்பது வேறாகவே இருக்கிறது. கன்னித்திரை என்பது மிக மெல்லிய சவ்வாகும். முதல் முறையாக ஒரு பெண் உறவு கொள்ளும்போது இந்த சவ்வு கிழிபடுகிறது. ஆனால் அப்படித்தான் அது கிழியும் என்றில்லை, ஒரு பெண் முதல் முறையாக சுய இன்பம் அனுபவிக்கும்போது கூட இது கிழியும்.

கன்னித்திரை சவ்வு கிழிபடும்போது லேசாக ரத்தம் வருவது இயற்கையானதே. லேசான வலியும் கூட சிலருக்கு இருக்கலாம். அதேசமயம் பல பெண்களுக்கு கன்னித்திரை சவ்வு கிழியும்போது ரத்தம் வருவதில்லை. இது முதலிரவின்போது பலருக்கு பிரச்சினைகளைக் கூட கொண்டு வந்திருக்கும். ஏன் ரத்தம் வரவில்லை என்று கணவர்களுக்கு லேசான சந்தேகம் கூட வரலாம், அப்படி வந்தால் அது நிச்சயம் அறியாமை என்பதைத் தவிர வேறு ஏதுமில்லை.

 கன்னித்திரை சவ்வு என்பது செக்ஸ் உறவில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இறுக்கமான கன்னித்திரை என்பது செக்ஸ் உறவை மேலும் உற்சாகமாக்க உதவுகிறது. குறிப்பாக ஆண்களுக்கு கூடுதல் உற்சாகம், சந்தோஷம் கிடைக்கிறதாம். அதேசமயம் எப்போதும் கன்னித்திரை இறுக்கமாக இருக்க முடியாது. ஒரு கட்டத்தில் அது கிழிபட்டே தீரும்.

உடற்பயிற்சியின்போதோ, சைக்கிள் ஓட்டும்போதோ கன்னித்திரை கிழியும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விளையாட்டு வீராங்கனைகளுக்கு அவர்கள் கடுமையான உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது போட்டிகளுக்காக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போதோ கன்னித்திரை கிழிகிறதாம். நீச்சல் உள்ளிட்டவற்றின்போதும், இடுப்புகளை அதிகம் விரிக்கும் வகையிலான உடற்பயிற்சி அல்லது விளையாட்டின்போதும் கன்னித்திரை சவ்வு கிழிய வாய்ப்புள்ளது. சைக்கிள் ஓட்டும் பெண்களுக்கு சீக்கிரமே கன்னித்திரை சவ்வு கிழிந்து விடும். ஜிம்முக்கு அடிக்கடி சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்யும்போதும் கன்னித்திரை சவ்வு கிழிகிறது.

கன்னித்திரை சவ்வு கிழிவது என்பதே கன்னி கழிவது என்று பலரும்- அதாவது ஆண்கள் – நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட எண்ணம் ரொம்ப காலத்திற்கு முன்பு இருந்த பழமையான, அறியாமையுடன் கூடிய எண்ணம். ஆனால் இன்றுள்ள நிலையில் அப்படியெல்லாம் பத்தாம் பசலியாக நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது.

இன்று ஆண்களுக்கு நிகராக பெண்கள், ஏன், ஆண்களை விட அதிகமாகவே பெண்கள் உழைக்கிறார்கள். கடுமையாக வேலை பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட புதிய சூழலில் பெண்களுக்கு செக்ஸ் உறவின்போது அல்லாமல் வேறு வழிகளில் கன்னித்திரை சவ்வு கிழிவது என்பது இயல்பான ஒன்றாக மாறி விட்டது என்பதே உண்மை.

Jan 23, 2014

பெண்ணுறுப்பு பராமரிப்பு வழிமுறைகள்



 


பெண்ணுறுப்புதான் ஆணுறுப்பை விட அதிக கவனத்துடனும் அக்கரையுடனும் பாதுகாக்க வேண்டிய உறுப்பு. பருவம்டையும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. இது எல்லோருக்கும் தெரிந்ததுதான் இருந்தாலும் எல்லாத்தையுமே அடிப்படையிலிருந்து சொல்லித் தருவதுதானே மரபு.

தூங்கும் போது எந்த விதமான உள்ளடையும் அணியக் கூடாது. பெண்ணுறுப்பு காற்றோட்டத்துடனும் இறுக்கம் இல்லாமலும் இருக்க வேண்டும். நீங்கள் எப்படிப் படுத்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை.

குளிக்கும் போது  பெண்ணுறுப்பில் நன்றாகத் தண்ணீர் விட்டுக் கழுவுங்கள். பெண்ணுறுப்பின் மேட்டில் சோப்புப் போடலாம்.ஆனால் உள்ளே கூடாது. சிறுநீர் கழித்த பின்பும் நன்றாகக் கழுவ வேண்டும். ஜட்டியை ஈரமாக அணியக் கூடாது. குளித்து முடித்தவுடன் பெண்ணுறுப்பில்  ஈரமில்லாமல் துடைக்க வேண்டும்.
பெண்ணுறுப்பின்  மேலுள்ள முடியை  ட்ரிம் செய்யலாம் அல்லது வழித்துவிடலாம். முடி இல்லாமல் இருப்பது பெண்ணுறுப்பில் ஏற்படும் நாற்றத்தையும் நோய்த் தொற்றையும் குறைக்கும்.

பீரியட்சின் போது ஒரு நாளைக்கு நாப்கினை மூன்று அல்லது நான்கு முறை மாற்ற வேண்டும். அதோடு பெண்ணுறுப்பை  அடிக்கடி கழுவ வேண்டும்.

பெண்ணுறுப்பை  இறுக்காத ஜட்டியை அணியுங்கள். ஃபேஷன் என்ற பெயரில் சிறு கோவணத்தை அணிய வேண்டாம். பெண்கள் ஜட்டியை மூன்றுமாதத்தில் மாற்றவேண்டும்.

உடலுறவு முடித்தபின்பும் சுய இன்பம் செய்த பின்பும் பெண்ணுறுப்பை கழுவ வேண்டும். தூங்கும் முன்பு கழுவிவிட்டுத் தூங்குங்கள்.