Pages

Powered by Blogger.

Oct 28, 2013

பாலின நோய்கள் தெரியுமா?

Medicines to prevent sexual diseases generally do not have anything.
1.பொதுவாக பாலின நோய்களை தடுப்பதற்கு மருந்து ஏதுவும் கிடையாது. ஆனால், இவைகளை நம் உடம்பில் மேலும் பரவாமல் இருக்க, சில பாதுகாப்பு முறைகளை கையாளலாம்.

2.இப்பொழுது உள்ள பாலின நோய்களில், மிகக் கொடுமையானது 'எய்ட்ஸ்' சிபிலிஸ், கொனேரியா போன்றவைகள் தான்.

3. எயிட்ஸ் நோய் என்ற மிக நுண்ணிய வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. இதை 'ஹெச்ஐவி'  என்றும் அழைக்கலாம்.

4.இவைகள் ஒரு கூட்டுக் குடும்பம் போல வாழ்கின்றன. இது நம்முடைய நோய் எதிர்பு சக்தியை அழித்து, பல தொற்று வியாதிகள் நம் உடலில் ஏற்பட காரணமாகிறது. இது தாக்கி, சுமார் 5 வருடம் வரை எந்த அறிகுறியும் ஏற்படாது,பிறகு மெல்ல மெல்ல பல நோயின் ஆரம்பமாகின்றன.

5.இதைத் தடுக்கவோ, அழிக்கவோ இதுவரை மருந்து கிடையாது. வெளிபடையாக நோயின் அறிகுறிகள் ஏற்பட்ட 2-3 ஆண்டுகளில் மரணம் ஏற்படும்.

6. சிபிலிஸ் என்ற பாலின நோய், 'ஸ்பைரோசீட்டஸ்' என்ற நுண்ணிய கிருமிகளால் ஏற்படுவது. இதனுடைய அறிகுறிகள், சாதாலண தோல் வியாதியைப் போல காணப்பட்டு, பிறகு மரைந்து விடும். இதனால் இது பெரும்பாலும் அலட்சியப்படுத்தபடுகிறது.

7. இது சுமார் 30 ஆண்டு காலம், பல அறிகுறிகளை ஏற்படுத்தி மறைந்து, உடல் உள் உறுப்புகளைத் தாக்கிய வண்ணம் இருக்கும். முற்றிய நிலையில் மரணம் நிச்சயம். ஆரம்ப கட்டங்களில், இதற்கு மருந்துகள் உண்டு.

8.'கொனோரியா' என்ற நோய் மிகப் பரவலாகக் காணப்படும் நோய். சுமார் 80 சதம் பெண்கள், எந்தவித அறிகுறியும் இல்லாமல் இதைச் சுமந்தே செல்கின்றனர். ஏனென்றால், இந்த நோய் கண்டவர்களின் படுக்கை, தலையணை, டவல் போன்றவற்றால், இது எளிதில் பிறரிடம் பரவும். இதற்கு மருந்துகள் உண்டு,

9.பொதுவாக தோலிலேயோ, பாலின உறுப்புகளிலேயோ, எதும் மாற்றம் ஏற்பட்டால், உடனே சரும நோய் டாக்டரிடம் அல்லது பாலின டாக்டரிடமோ காட்ட வேண்டும்,

10. இதைத் தவிர இன்னும் பல பாலின நோய்க்கிருமிகள் உள்ளன. குறிப்பிட்டு சொல்ல முடியாத பல பாலின நோய்களும் உண்டு.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.