Pages

Powered by Blogger.

Oct 28, 2013

உணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி

படுக்கை அறையில் சரியா செயல்பட முடியலையே, என்ன சாப்பிட்டாலும் சரியா வரலையே, என்று தவிக்கும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்கு உள்ள ஆண்மை குறைபாட்டினை சரி செய்வதற்காக நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர் அவற்றை படியுங்களேன்.

இன்றைக்கு ஆண்மை குறைபாட்டிற்கு காரணம் கண்டதையும் சாப்பிடுவதுதான். அதேபோல் இளம் வயதிலேயே போதை, மது பழக்கத்திற்கு ஆளாவதும்தான் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் வாழ்க்கையும் இளம் வயதிலேயே ஆண்மை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த சிக்கல் நீடிக்காமல் இருக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்

கண்டதை படிக்காதீங்க

தாம்பத்ய உறவில் ஈடுபாடு இல்லையா? ஆர்வம் வரவேண்டும் என்பதற்காக ஆபாச நூல்கள், இணையதளத்தில் ஆபாச படங்களைப் பார்க்க வேண்டாம் இதனால் மனமும், உடலும்தான் கெடும். அதற்கு பதிலாக செக்ஸ் பற்றிய அறிவியல் பூர்வமான மருத்துவரீதியான நூல்களைப் படித்தால் பாலியல் அறிவு பெருகும் என்கின்றனர் நிபுணர்கள். விந்தின் தன்மையை சீராக்கி, குழந்தைப் பேறுக்கு தகுதியுடையதாக ஆக்க..விந்தணுக்களைப் பெருக்க சில உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். மீன் வகைகளில் எதுகிடைக்கிறதோ அவற்றை வாங்கிச் சாப்பிடலாம்.

நாட்டுக்கோழி முட்டை

இளமையில் ஏற்படும் ஆண்மைக் குறைவை முறையாக முட்டை உண்பதன் மூலம் போக்கலாம். இரண்டு நாட்டுகோழி முட்டைகளை ஒரு மண்பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் சிறிது சூடுபடுத்திய பின் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சிறிது சூட்டோடு உண்ணவும். காலை உணவுக்குப் பதிலாக இப்படி முட்டை மட்டும் சாப்பிட்டுபின் பால் குடித்து வரலாம். தொடர்ந்து 3மாதம் இதை சாப்பிட்டால் முழுபலன் கிடைக்கும்.

உப்புக்கண்டம்

பறவைகளில் மனைப்புறா, வான்கோழி, கௌதாரி, பச்சைப்புறா.. ஆகியவற்றின் இறைச்சி சாப்பிட்டால் ஆண்மை குறைபாட்டிற்கு சிறப்பான பலன்கள்தரும். வெள்ளாட்டுக் கறியும், இறால் உணவும் நல்லது. அதுவும் காயவைத்துப் பதப்படுத்திய (உப்புக்கண்டம்) இறைச்சியையும் உண்ணலாம். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவீர்களானால் 50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்.

பழங்கள்

காலை உணவுக்குப்பின் கால்மணிநேரம் கழித்து 10 பேரீச்சம்பழங்கள் சாப்பிட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள். அதேபோல் இரவு உணவுக்குப்பின் 10 பேரீச்சம் பழங்களை உண்டு பசும்பால் குடியுங்கள். தொடர்ந்து 2 மாதம் இவ்வாறு சாப்பிட்டுவந்தால் ஆண்மை சத்தி குறிப்பிடத்தக்க அதிகரிக்கும். இந்தநாட்களில் குளிர்ச்சியான பானங்கள், உணவுகள் சாப்பிடவேண்டாம். அதேபோல் அன்றாடம் உண்ணும் உணவோடு அரைக்கீரையை வாரம் 2 அல்லது 3 முறை தொடர்ந்து சாப்பிட்டால் போதும்..

செலினியம் உப்பு

அதேபோல் பழுப்பு பார்லி, அரிசி, முளைவிட்ட கோதுமை, கோதுமை பிரட், கைக்குத்தல் அரிசி, டர்னிப் கீரை, வெள்ளைப்பூண்டு, ஆரஞ்சு சாறு, ஆகிய ஏழு உணவுகளிலும் செலினியம் என்ற அரிய தாது உப்பு போதுமான அளவு இருக்கிறது. இவை வைட்டமின் ‘இ’ யுடன் சேர்ந்து ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டாக செலினியம் உப்பும் செயல்படுகிறது. இந்த வைட்டமினும் தாது உப்பும் சேர்ந்து உயிரணுக்களில் உள்ள மெல்லிய தோல்களையும், திசுக்களையும் நோய் எதுவும் தாக்காமல் பாதுகாக்கின்றன. செலினியம் உப்பு உடலில் குறைவாக இருந்தால் ஃப்ரீரேடிக்கல் திரவம் அதிகம் வெளியாகி உயிரணுக்களை சேதப்படுத்திவிடும் எனவே இவற்றை தடுக்க செலினியம் அடங்கிய சத்தான உணவுகளை உண்ணவேண்டும்.

ஆண்மைக்குறைபாடு சரியான உடன் தினசரி உறவில் ஈடுபடலாம் என்று நினைக்காதீர்கள். உங்கள் வயது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தினசரி உடலுறவு அல்லது வாரம் 3,4 முறை உடலுறவு என்பது ஆற்றலை அழித்து விடும். எனவே வாரம் ஒருமுறை அல்லது இருமுறை உறவு வைத்துக்கொண்டால் போதும். இதனால் உடலின் தற்காப்புத்திறன் மேம்படுவதோடு வாழ்நாட்களும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.