Pages

Powered by Blogger.

Oct 27, 2013

மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்



நிறைய பெண்கள் மாதவிடாய் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், இவையே பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுள் முதன்மையானது.

தாமதமான மாதவிடாய் சுழற்சியை தடுக்கவும், மாதவிடாய் பிரச்னைகளுக்கும் ஒரு சில ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால் போதும்.

சோம்பு
சோம்பை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சுழற்சியானது சரியாக நடைபெறுவதோடு, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு சோம்பை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் அந்த நீரைக் குடித்து வர வேண்டும்.

சாலமன் மீன்
சாலமனில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் உள்ளது. இதனால் எலும்புகள் வலுவடைவதோடு உடலில் மாதவிடாய் சுழற்சியைத் தூண்டும் ஹார்மோன்களை நன்கு செயல்பட வைத்து, மாதவிடாய் சுழற்சியை முறையாக நடைபெறச் செய்யும்.

காய்கறிகள்
தினமும் உணவை சாப்பிடும் போது அதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் கீரைகள், கத்திரிக்காய் போன்றவை மிகவும் சிறந்தவை. இவை சீரான மாதவிடாய் சுழற்சியை நடைபெறச் செய்யும்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.