Pages

Powered by Blogger.

Oct 27, 2013

சீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமா.. இப்படிப் பண்ணிப் பாருங்க

செக்ஸ் என்பது பலவகையானது. ஆனாலும் கடைசியில் கிடைப்பது இன்பம் மட்டுமே. திருமணமாகி, குழந்தை குட்டியெல்லாம் ஆன பின்னர் பலருக்கும் செக்ஸ் என்பது சந்தோஷ விளையாட்டாக மாறி விடுகிறது. விதம் விதமான டிசைனில், விதம் விதமான பொசிஷனில் செக்ஸில் ஈடுபட்டு குதூகலிக்கிறார்கள்.

ஆனால் திருமணமாகிய புதிதில், குழந்தைக்காக எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் எல்லா பொசிஷனையும் டிரை செய்யாமல் சில குறிப்பிட்ட பொசிஷன்களை மட்டும் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் சீக்கிரமே கர்ப்பமாகும் வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள் டாக்டர்கள்.

செக்ஸை வெறும் இன்பத்திற்காக மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்றால் எந்த பொசிஷனையும் செய்து பார்க்கலாம். இருப்பினும் குழந்தைப் பேறு வேண்டும் என்று விரும்புவோர் சில குறிப்பிட்ட பொசிஷன்களை நாடுவதே நல்லதாம்.

அதுகுறித்துப் பார்க்கலாம்…
மிஷனரி –
இதற்கு மேன் ஆன் டாப் என்றும் பெயர் உண்டு. பெண் மீது ஆண் படர்ந்து செக்ஸில் ஈடுபடுவது தான் மிஷனரியாகும். இது கர்ப்பமாவதற்கு மிகச் சிறந்த பொசிஷனாம். ஆணுறுப்பானது மிகவும் ஆழமாக ஊடுறுவ இந்த பொசிஷனே உதவியாக இருக்குமாம். மேலும் விந்தனுக்களையும் விரைவாக செலுத்த இந்த பொசிஷன் உதவுமாம்.

ரெய்ஸ் தி ஹிப்ஸ்-
இடுப்பை சற்றே உயர்த்தி வைத்து உறவு கொள்வது. இதை செய்ய ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை. ஒன்று அல்லது ரெண்டு தலையணை போதும். இடுப்பை தூக்கி தலையணையில் வைத்து உயர்த்திய நிலைக்குக் கொண்டு வரவும். பின்னர் உறவு கொள்ள வேண்டும். அப்படிச் செய்யும் போது பெண்களின் செர்விக்ஸ் ஆனது அதிக அளவிலான விந்தனுக்களை உள்வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

டாகி ஸ்டைல் –
இது அனைவருக்கும் தெரிந்த பொசிஷன் தான். அதாவது பின்னாலிருந்து பெண்ணுடன் உறவு கொள்வது. பெண்ணின் பின்புறமாக நின்று கொண்டு உறவு கொள்ளுவது இது. இதில், விந்தனுக்குள், செர்விக்ஸுக்கு மிக நெருக்கமாக வந்து தேங்கும். இதன் மூலம் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளும் அதிகம் உருவாகிறதாம்.

சைட் பை சைட்-
இதுவும் கூட நல்லதொரு பொசிஷன்தான். பக்கவாட்டிலிருந்தபடி உறவு கொள்வது. இதுவும் நல்ல பலனைத் தருமாம்.

ஆர்கஸம் –
இதற்கும் பொசிஷனுக்கும் சம்பந்தம் இல்லைதான். இருந்தாலும், ஆர்கஸம் என்பது கர்ப்பம் தரிப்பதற்கு மிகவும் அவசியமாகும். பெரும்பாலான பெண்கள் இயற்கையாக ஆர்கஸத்தை எட்டுவதில்லை. இதுதான் நிதர்சனம். எனவே உறவின்போது ஆர்கஸத்தை தட்டி எழுப்ப வேண்டியது ஆணின் கடமையாகும். ஆர்கஸம் ஏற்பட்டு விந்தனுக்களை பெண்கள் வாங்கும்போது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறதாம்.

இயற்கையாக ஆர்கஸம் வராவிட்டால், உறவின்போது செயற்கையான முறையில் ஆர்கஸம் ஏற்பட பெண்களுக்கு ஆண்கள் உதவ வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் பெண்களை மேலும் கிளர்ந்தெழச் செய்யலாம்.

இவையெல்லாம் சின்னச் சி்ன்ன உபாயங்கள்.. செய்து பாருங்களேன்..

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.