Pages

Powered by Blogger.

Oct 27, 2013

மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு தரும் விளக்கெண்ணெய்:




மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு தரும் விளக்கெண்ணெய்:

விளக்கெண்ணெயுடன் துளசிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சம் சாறு சம அளவு எடுத்து காய்ச்சிக் கொண்டு 15 மில்லி அளவு உட்கொண்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் அகலும்.

மாதவிடாய் சரியாக வெளிப்படாமல் வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கவும் விளக்கெண்ணெய் பயன்படுகிறது.

சிலருக்கு குழந்தைப் பேற்றுக்குப் பின்னர் சரியாக மாதவிடாய் ஆகாமல் தொடர்ந்து வயிற்று வலியை ஏற்படுத்தும். அப்படி இருக்கும்போது, அடிவயிற்றில் விளக்கெண்ணெய் தடவி, அதன் மீது ஆமணக்கு இலைகளை வதக்கி பொறுக்கக் கூடிய சூட்டில் போட்டு வர உதிரப் போக்கு ஏற்பட்டு வயிற்று வலி தீரும்.

பொதுவாக பூப்பெய்திய பெண்களுக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இது கர்ப்பப்பை தொடர்பான கேளாறுகளை சரி செய்யும். ஆனால் அந்த வழக்கம் நாளடைவில் குறைந்து வருவதே பல கர்ப்பப்பை பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.