
வாத்ஸாயனரின்
காமசாஸ்திரம்...பக்குவம் பெற படியுங்கள்...இந்த ஆவணப்பதிப்பில் உள்ள
பலகருத்துக்கள் நன்மையையும்..அதே வேளை மதசார்பு மூட நிலைகளையும் பரப்பி
நிற்கிறது... இது அறிவுசார் நிலையையும்..அறியாமைத் தனத்தையும்.. அவசரப்
போக்கையும்..விரிவாகவும்...விளக்கமாகவும் எடுத்து விளக்கியுள்ளது எனவே
ஒவ்வொரு தமிழனும் அல்லது மனிதனும் இதை படித்தறியப்பட வேண்டிய ஒன்று.. இதை
படித்து முடிக்கும் போது ஒரு தெளிவு நிலை வரும்.. உங்கள் காரசாரமான வாத
பிரதி வாதங்களையும் கருத்துகளையும் வையுங்கள்.. இது சாதரண மனித
வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாகவும் நெறிபடுத்துவதாகவும் உள்ளது. இப்போ
தொடருக்குள் நுழைவோம்...
*
தர்மமே அனைத்துக்கும் மூலம். தர்மத்திலிருந்து அர்த்தம் வளர்ச்சியுற்றது
காமம் மலர்ச்சி கண்டது. ஓர் இந்துவின்வாழ்கை முறை இம்மூன்றையும்
குறிக்கோள்களாய் கொண்டு இயங்கும்.தர்மம் என்பது ஆன்மிக மற்றும் நெறி
சார்ந்த கடமைகள். அர்த்தம் என்பது இகழ்வாழ்விற்க்கான பொருள்களும். அறிவும்
பெறுதல். காமம் என்பது புலன்களின் இன்பம்.
*
இந்த உலகத்தை படைத்தவர் முதலில் பிரஜாபதி என்றும் பிற்பாடு அவரே பிரும்மா
என்றும் அறியப்பட்டார். மக்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி தர்மம், அர்த்தம்,
காமத்தைக்கொண்டு புனிதப்படுத்தி கொள்வது என்பதை அவர் இலட்சம் பாடல்களில்
விவரித்திருக்கிறார்.
*
நம்முடைய மூதாதையான மனுவாகப்பட்டவர் தர்ம உபதேசங்களைச் செய்தார். அதுவே
மனுநீதி என்பது. அர்த்தம் பற்றி பிருகஸ்பதி எழுதினார். நந்தி பகவான்
காமசாஸ்திரத்தை ஆயிரம் அத்தியாயங்களில் வடிவமைத்தார்.
*
உத்தலாகரின் மகனான ஸ்வேதகேது காமசூத்திரத்தை ஜநூறு அத்தியாயங்களில்
உரைத்தார் பாப்ரவ்யர் அந்த ஞானத்தை நூற்று ஜம்பது அந்தியாயங்களில்
சுருக்கித் தந்தார். அவை ஏழு தனி தனி தலைப்புக்களில் வகைப்படுத்தப்பட்டன.
* தியானம், உடலுறவு, காதல், திருமணம், கள்ள உறவு, விலைமகளிர் மற்றும் மோக ஊக்கிகள் ஆகியவை அந்த ஏழுமாகும்.
*
ஒரு கட்டத்திலும். காமத்தை ஒரு கட்டத்திலும் அவன் கடைப்பிடிக்க வேண்டும்.
ஒரு நேரத்திற்கு ஒன்று என வைத்து கொண்டால தானே எதையும் உருப்படியாக செய்ய
முடியும். அவன் தன்னுடைய சிறுவயதில் அந்த பாகத்தில் கவனம் செலுத்த
வேண்டும்.
*
இளமையில் காமத்தையும். முதுமையில் தர்மத்தையும் அனுசரிக்க வேண்டும். இந்த
அமைப்பை அல்லது ஒழுங்கை வாத்ஸ்யாயனர் மாற்றினார். தர்மம், அர்த்தம், காமம்
இவற்றை நீங்கள் உங்களால் முடிந்த போதெல்லாம். முடிந்த விதத்தில் எல்லாம்
செய்யலாம் என்கின்றார்.
*
தர்மம் என்பது வேதத்தில் விதித்தபடி நடப்பது. உதரணமாக புலால் மறுப்பு,
யக்ஞம், யோக சாஸ்திரம் பயிலல் மிகச் சிறந்த குருமார்களை அண்டியிருத்தல்,
அர்த்தம் என்பது கல்வி, வீடு, நிலம், தானியம், கால்நடை, ஆபரணங்கள், ஆடைகள்,
நண்பர்கள், கலைகள், செல்வம்சேர்த்தல் பற்றியதாகும்.
*
காமம் என்பது உடல், மனம், ஆன்மா ஆனுபவிக்கிற மகிழ்ச்சி. இது ஒரு
நுட்ப்பமான உணர்வு கண்கள், நாசி, நாக்கு, செவிகள், சருமம், இவற்றை
விழிப்படையச் செய்யும் உணர்வதற்க்கும் உணரப்படுவதற்க்கும் இடையில் காமம்
முகழ்கிறது.
*
தர்மமே அனைத்துக்கும் மூலம் என்று முன்பே குறிப்பிட்டோம். அதனால் தர்மத்தை
முதலிலும் தர்மத்துக்கு பின் அர்த்தத்தையும், அர்த்தத்துக்குபின்
காமத்தையும் அமைத்து கொள்ள வேண்டும்.
* அர்த்தம் - புற வாழ்க்கை காமம் - அக வாழ்க்கை சம்பந்தப்பட்டது.
அது
ஒரு மாபெரும்ட சக்தி காதல் செய்வது உயிரியற்கை என்கிறபோது அதைச்
சொல்வதற்க்கு ஒரு நூலும் தேவையா என்பது சிலரின் கருத்து. விலங்கு உடலுறவு
கொள்கிறது. மனிதனும் உடலுறவு கொள்கிறான். இரண்டும் ஒன்றாகிவிடுமா..?
விலங்கு தனது இரையை அப்படியே உண்கிறது. மனிதனுக்கோ பக்குவம்
தேவைப்படுகிறது. அதனால் தானே அவன் உயிரினங்களில் முதலிடம் வகிக்கிறான்.
அவனுக்கு உடலிறவிலும் பக்குவம் தேவை. அதனால் தான் காமநூல் அவசியப்
படுகிறது. அச்சமும், தயக்கமும் கொண்டவர்களுக்கு வேண்டுமானால் ''காமநூல்கள்
மருட்சியை ஏற்ப';படுத்தலாம்'' ஆனால் இந்த நூல்களை அவர்கள்
அச்சத்திலிருந்தும் தயக்கத்திலிழருந்தும் விடுவிக்கும் காமம் சக்தி
வாய்ந்தது. அது கற்றவர்களை காதலில் தேர்ச்சி உடையவராக்கும். மற்றவர்களை
பொறுத்தவரை ''மண வாழ்க்கையை நாசம் செய்யும் நற்பெயருக்கு களங்கம்
ஏற்படுத்தும். காமம்-விலங்குகள் உலகில் வெறும் பாலுணர்வு வேட்க்கை,
மனிதர்கள் வாழ்வில் அது ஒரு யோக சாதனை, காம துறவிகள் விலக்கலாம்.
''சம்சாரிக்கு அது முடியாது. சுகத்தை தேடுகிறவன் பாவங்கள்
செய்யும்படியாகும். குற்றங்களை புரியும்படி இருக்கும் என்பது மகான்களின்
கருத்து. காமவாய்ப்பட்டவன் தன் குடும்பத்தை தானே நாசம் செய்து விடுவான்
என்று அவர்கள் கருதினார்கள். போஜர்குல மன்னன் தாண்டக்யன் ஒரு மேல்யாதிப்
பெண்ணை கற்ப்பழித்துவிட அதன்விளைவாக அவன் செத்துப் போனான். அவனுடைய நாடு
புழுதி காற்றில் காணமல் போயிற்று என்று புரணங்கள் கூறும். ''இந்திரன்
அகலிகையை ஏமாற்றினான். சீசகன் திரளெபதியை இழிவு செய்தான். ராவணன் சீதையை
தூக்கி சென்றான். இப்படி தங்கள் பலத்தையும் பிரக்யாதியையும் நம்பிச் செயல்
பட்டவர்களெல்லாம் அழிந்து பட்டார்கள். காமம் அவர்கள் கண்ணை மறைத்தது
என்பார்கள். காமம் கெடுதல் செய்வதில்லை. மனிதனிடம் உள்ள தீய பண்புகள் தான்
அவனையும் கெடுக்கின்றன. அவனை சற்றியள்ளவர்களையும் கெடுக்கின்றன. உடலுறவு
முக்கியம், உடம்புக்கு உணவு, தண்ணீர் மாதரி உடலுறவு அவசியப்படுகிறது. காமம்
என்பது அர்த்தம். தர்மம் இவற்றின் விளைவு பலன் என்கிறார்'' வாத்ஸ்யாயனர்.
அச்சம் பாலுறவுக்கு இடையுறாகி விடக்கூடாது. '' கால் நடைகள் பயிரை மேய்ந்து
விடும் என்பதற்காக விவசாயம் செய்யாமல் இருக்க முடியுமா..?''
பிச்சைக்காரனுக்கு பயந்து சமைப்பதை நிறுத்திவிடலாமா..? என்று கேட்க்கிறார்
வாத்ஸ்யாயனா. அர்த்தம், காமம், தர்மம் இவற்றை அறிந்தவனும் தனது உடம்பு,
மனம், ஆன்மாவில் அவற்றை கடைபிடிக்கிறவனும் இவ்வுலகத்தோடு மறுவுலகிலும்
மகிழ்ச்சியாயிருப்பார். இளைஞர்கள் கலைகள், அறிவியல் கற்பதுடன் தர்மம்,
அர்த்தம், காமம், பற்றிய நூல்களையும்கற்று தோச்சி பெற வேண்டும். ''முதலிரவை
எதிர் நோக்கியிருக்கும் மணப்பெண் காமசூத்திராவை அறிந்திருக்க வேண்டும்''
என்கிறார் வாத்ஸ்யாயனர்.

தேர்வு செய்தல்...!
திருமணம் செய்து கொள்வதன் நோக்கமே தர்மங்களை நிறைவேற்றுவதுதான்.
அதற்க்கு தேவையான செல்வங்களைத் தேடிக் குவிப்பதும்தான்.
காமம் - குழந்தை பெற உதவுகிறது.
அர்த்தம் - குழந்தைக்கான சொத்துகளைச் சம்பாதிக்க உதவுகிறது...
கன்னித்தன்மை இழக்காத பெண்ணை மணந்து காதலை. பாலுறவு மகிழ்ச்சியை அனுபவித்திரு என்கிறது வேதம். மணவினை எப்படி நிகழ
வேண்டும் என்பதற்க்குப் பல நியமங்களையும் வேத நூல்கள் செய்து வைத்திருக்கின்றன.
* ஓர் ஆண் தன்னைவிட மூன்று வயதேனும் குறைந்த பெண்ணை மணக்க வேண்டும்.
* அவளுடைய பெற்றோர் தங்கள் மகளைக் கட்டுப்பாடாக வளந்திருக்க வேண்டும்.
* அவளுக்கு அத்தைமார், மாமாமார் என்று சொந்த பந்தங்கள் இருக்க வேண்டும்.
* பெண்ணின் குடும்பம் வசதியாகவும். கௌரவமான தாயும் இருக்க வேண்டும்.
* அவளுடைய குடும்பத்தவரும் உறவினர்களும் நாட்டில் பிரபலமானவர்களோடு பழக்கம் உள்ளவர்களாயிருக்க வேண்டும். ( கிழிஞ்சுது போ.....)
* பெண் அழகும், நன்னடத்தையும் கொண்டவளாயிருப்பது அவசியம்.
*
ஆரோக்கியமும், கவர்ச்சியும், தேவை. நல்ல பற்கள், நகங்கள், காதுகள்,
கண்கள், மார்பகங்கள், ஆகியவை விளக்கமாய் அமைந்திருக்க வேண்டும். உடம்பில்
மாசு. மாறு இருக்க கூடாது.
ஓர் ஆண் மகனுக்கு நல்ல இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்விக்கிற புனித கடமை அவனுடைய பெற்றோர்களும். உறவினர்களுக்கும்
உண்டு. தங்கள் மகனுக்குப் பெண்ணைத் தரும்படி பையனின் பெற்றோர்கள்
எவ்வகையிலும் முயற்ச்சிக்கலாம். பெண் வீட்டாரிடம் பையனுடய வம்சாவழி. குணநலன் பற்றிப் புகழ்ந்து பேசலாம்.
இரண்டு
குடும்பத்தார்கள் மட்டும் தங்களுக்கள் பேசி திருமணத்தை உறுதி செய்து விடக்
கூடாது. அவர்களுடைய உற்றார் உறவினர்கள் முன்னிலையில்
அந்த திருமணம் நிச்சயிக்கப்பட வேண்டும். மற்றவர்களின் கருத்தும் அறியப்பட வேண்டும்.
*
''மணப்பெண் சோம்போறித்தனமுடையவளா. முன்பே வேறொருவனை விரும்பியவளா.
ஏறுமாறனவளா நரம்பு கோளாறு உடையவளா என்பதையெல்லாம் சோதித்தறிய வேண்டும்.
* பொய்யான கூந்தல் உடையவளை. கோடையில் கை கால் வியர்ப்பவளை ஆணைப்போல் தோற்றம் கொண்டவளை விலக்க வேண்டும்.
* ஊமையை, கூன் விழுந்தவளை, மிகப்பெரிய ''பிருஸ்டபாகம் ''கொண்டவளைத் தவிர்க்க வேண்டும்.''
* ''அமங்கலமான பெயர்கள் உடைய பெண்ணை. ஒரு நதி, மரம் அல்லது நட்சத்திரத்தின் பெயர் கொண்ட வளை மணக்கக் கூடாது.
* ''லா'' அல்லது''ரா'' என்று முடிகிற பெயருடைய பெண்ணையும் மணக்க கூடாது.
* தன்னைவிட வயதில் மிகவும் இளைய பெண்ணை மணப்பதும் தவறு.
* குழந்தைப் பருவத்தில் தன்னோடு விளையாடியவளையும் மணப்பது தவறு.
பெற்றோர்கள்
தங்களுடைய பெண்ணை சமூக நிகழ்ச்சிகளுக்கும். விழாக்களும் அழைத்துச் செல்ல
வேண்டும். அவர்களுடைய வீட்டில் ஒரு பெண் திருமணத்துக்குத்
தயாராயிருக்கிறாள் என்பதை அதன் மூலம் மற்றவர்களுக்குத் தெரியவைக்க
முடியும். அந்தப் பெண்ணைத் தங்களுடைய மகனுக்க வரிக்க எண்ணம் குடும்பத்தார்
அவர்களுடன் கலந்து பேசி. விருந்துண்ண அது வகை செய்யும்.
தங்களுடைய
பெண்ணுக்கு ஏற்ற வரனாக இவன் இருப்பான் என்று உறுதிப்படாதவரை அந்தப்
பையனுடைய குடும்பத்தாரிடம் எது பற்றியும் வாக்களிக்கக் கூடாது. எங்கள்
உறவினரிடம் கலந்து பேசி இன்னும் சில நாட்களில் பதிலளிக்கிறோம் என்று சொல்லி
விடலாம்.
தங்களுடைய
நாடு மற்றும் குடும்ப சம்பிரதாயங்களக்க ஏற்ப மணவினை நிகழ்த்தபட வேண்டும்.
ஒருவர் தம்முடைய இனத்தாருடன் மட்டுமே நட்ப்பு கொள்ளவும். மணம் பேசி
முடிக்கவும் வேண்டும். தனது அந்தஸ்தைவிட உயர்ந்த இடத்தில் பெண்ணெடுத்தால்
சுய கௌரவத்தை இழக்கும்படி ஆகும்.
ஒரு
வேலைக்காரனைப்போல் நடத்தப்படும் நிலைதான் இருக்கும். தன்னைவிட அந்தஸ்து
குறைந்த இடத்தில் பெண்ணெடுத்தால் அவளுடைய குடும்பத்தை கொடுமைப்படுத்த
நேரிடலாம். சம அந்தஸ்து இல்லாத திருமணங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை.

நம்பிக்கையை எப்படி பெறுவது....?
''மண முடித்தபின் மூன்று நாட்க்களவரை தரையில் படுக்க வேண்டும்''
கடுமையான பிரும்மச்சாரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். காரம். இனிப்பு.
கலவாத உணவையே உண்ண வேண்டும்.
ஏழு நாட்க்கள் இரவும் பகலும் வீட்டில் இசையொலி கேட்கட்டும்.
இன்னிசை கருவிகள் முழங்கட்டும். இசை கலைஞர்கள் திரைமறைவில் இருந்து தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தட்டும்.
மணமக்கள்
அந்த இசையில் லயித்தபடி இணைந்து நீராட்டும் அவர்கள் விலைமிக்க உடைகளையும்.
வேலைப்பாடுமிக்க ஆபரணங்களையும் அணிந்து மகிழட்டும். மணமக்கள் ( எந்த
இனத்தவரை சேர்ந்தவராயினும்) தங்கள் குடும்பத்தவர்க்கும். கேளிக்கை
மன்றங்களுக்கும் சென்றுவரலாம்.
பெண்ணின்
நம்பிக்கையையும். பிரியத்தையும் சம்பாதித்துக் கொள்ள இது ஒரு நல்ல உத்தி.
பாப்ரவ்யர் சொல்கிறார். எதைச் செய்தாலும் அதில் உங்கள் ஆசையும்.
விருப்பமும் வெளிப்பட வேண்டும். இல்லையேல் பெண் உங்களை ஒரு ஜடம் என்றோ. அலி
என்றோதான் கருதிக்கொள்வாள் என்று.
நீங்கள்
அவளை முத்தமிடவும். சீராட்டவும் வேண்டும். தீண்டுவதன் மூலமாகவே அவளுடைய
நம்பிக்கையை. விருப்பத்தை படிப்படியாகப் பெற முடியும் என்கிறார் அவர்.
அவளுடைய கருத்துக்கு மாறாக எதையும் செய்யாதீர்கள்.
பெண்கள்
பூப்போல் மென்மையானவர்கள் அவர்கள் மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்.
நீங்கள் பிரிவில்லாமல். முரட்டுதனமாய் நடந்து கொண்டால் அவள் உடலுறைவையே
வெறுக்க ஆரம்பித்து விடுவாள். முதலில் பெண்ணின் நம்பிக்கையைப் பெறுங்கள்
வெகு சீக்கீரமே
அவளுடைய காலைப் பெற்று விடலாம்.
அவள்
உங்கள் முன்னிலையில் ஒய்வு கொள்ள முனைந்தால் அதை அனுமதியுங்கள். அவளை
மென்மையாகத் தொட்டு தடவியபடி இருக்கலாம்.அன்போடு தட்டவும் செய்யலாம்.
சீராட்டல்களை நீண்ட நேரத்துக்கு வைத்துக் கொள்ளக் கூடாது.
முன்பின்
அறிந்திராதவர்களுடையே மணவினை நிகழ்ந்திருப்பின் கொஞ்சல்களை மேல்பாதி
உடம்பில் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். அவளுடைய தொப்புள்
பிரதேசத்துக்கக்கீழ் துழவா முற்ப்படும் உணர்வைக் கட்டுபடுத்தி கொள்வது
நல்லது.
தம்பதிகள்
இருவரும் முன்பே ஒருவருக்கொருவர் பரிச்சயம் உள்ளவர்களாயின் அவள் அறையின்
வெளிச்சத்தைக் குறைக்கும்படி கோரமாட்டாள். அன்னியமாயின் இருட்டில்தான்
இணைந்து கொள்ளும்படி
இருக்கும்.
வெளிச்சம் கூத்தையும் கூச்சம் வெளிச்சத்தையும்- அனுமதிப்பதில்லை.
நீங்கள்
விரும்புகிற காரியத்தைச் செய்யும்படி பெண்ணைக் கட்டாயப்படுத்தாதீர்கள்.
அவளிடம் கெஞ்சுங்கள். மண்டியிட்டு மன்றாடுங்கள். எவ்வளவு தான் கூச்சமும்.
கோபமும் கொண்ட பெண்ணாயிருந்தாலும் கணவன் தன்னிடம் மண்டியிடுவதை சகித்துக்
கொள்ள மாட்டாள். அவளுடைய மனம் இளகியது.

தாம்புலத்தில்
நறுமண. இன்சுவை சரக்குககள் சேர்த்து மடித்து உங்கள் உதடுகளில் கவ்விக்
கொள்ளுங்கள். தனது உதடுகளால் அதைக் கவ்வி எடுத்து கொள்ளும்படி அவளிடம்
கூறுங்கள். அவள் தாம்புலத்தை அவ்விதம் எடுக்க முனையும்போது முத்தமிடுங்கள்.
அவளுக்கு மகிழ்ச்சியளிக்குமாயின் மறுப்பு சொல்ல மாட்டாள். அவளிடம்
அப்பாவித்தனமாய் கேள்வி போடுங்கள். அந்தரங்கமாய் உரையாடத் தொடங்குகங்கள்.
அவள் சட்டென்று பதில் பேசிவிட மாட்டாள். நீங்கள் மீண்டும் மீ;ண்டும்
கேட்க்கும்படியிருக்கும்.
அதன் பிறகும் அவள் வாய் திறவாதிருந்தால் உங்கள் மனோவேகத்தைக் கட்டு
படுத்தி கொள்ளுங்கள். அவளை நிர்ப்பந்திக்க வேண்டாம்.
புது
மணப் பெண் கூச்சத்தில் பேசாதிருக்கலாம் அல்லது குழப்பத்தில் வார்த்தைகள்
குளறலாம் ஆனால் தனது கணவனிடம் வார்த்தைகளை ஒன்று விடமால் மனதில் பதித்து
கொள்வாள். அவன் பழகும் விதத்தை அப்படிய கிரகித்து கொண்டுவிடுவாள்.
நான் பார்க்க நன்றாயிருக்கிறேனா? என்னை உனக்கு பிடிச்சிருக்கா?
போன்ற கேள்விகளுக்கு அவள் நீண்ட மௌனம் சாதிப்பாள். பிறகு- மெல்ல
தலையசைப்பாள். ஒரு பதிலுக்காக இரவு முழுக்கவும் நீங்கள் காத்திருக்கும்படி ஆகலாம்.
உங்களுக்காக
அவள் இனிப்பு களையோ எடுத்து வரும்போது அவளுடைய கரத்தை பற்றிக்கொள்ளுங்கள்.
மார்பகக் கா..........த் திருகுங்கள். இலேசாகத் தான். அவள் தடுப்பாள்.
மறுப்பாள் ஆனாலும் சொல்லிவிடுங்கள். நான் உன்னை இறுக தளுவிகொள்ள வேண்டும்.
அதன்பிறகுதான் இங்கிருந்து உன்னைப் போக விடுவேன் என்று.
அவளை
உங்கள் மடி மீது இருத்திக் கொண்டு. தொப்புள் பிரதேசத்தில் கையை அலைய
விடுங்கள். அவள் உதற முற்ப்படலாம். இல்லை என்னோட இந்தக் கை அதற்க்க மேல்
எதுவும் செய்யாது என சொல்லுங்கள். ஆனால் மறு கையை பயன்படுத்துங்கள். அவள்
என்ன இது? என்று சிணுங்குவாள் .ஓ...நான் வலது கைக்குச் சொன்னது. இது இடது
கையல்லவா என்று நீங்கள் அப்பாவித் தனமாய் பதிலளிக்க அவள் தன்னை அறியாமால்
சிரித்தே விடுவாள்.
அவள்
உங்களை விட்டு விலக முற்ப்பட்டாலும் அப்படியிப்படி நெளிந்தாலும்
பயமுறுத்துங்கள். (விளையாட்டகாத்தான்) நான் உன்னோட உதட்டிலும் மா...
கடிக்கப் போகிறேன். இல்லேன்னா என் உடம்பு முழுக்க கடித்'துக்கொண்டு என்
பொண்டாட்டியோட வேலை இது என்று எல்லோரிடமும் காண்பிப்பேன் என்கிற மாதிரி.
மூன்றாவது
இரவில் செய்கின்ற முன்விளயாட்டக்களுக்குக்களி அவளை சங்கமத்துக்குத் தயார்
செய்துவிட வேண்டும். அவளது தேகமெங்கும்..முத்தம்
பதித்து...தொ..............அன்புடன் நீவி......கொடுத்து உடைகளை களைய
வேண்டும்
அவள்
தடுத்தால் கொஞ்சம் தாமதியுங்கள். கெடுதலாய் எதவும் ஆகிவிடாது. என்று
சொல்லுங்கள். ஆனால் கைவிரல்கள் ஒவ்வொன்றாய் விடுவிக்கட்டும் கடைசியில்-
உங்கள் கட்டுப்பாட்டை நீங்கள் இழப்பீர்கள்.
உங்களுடைய
கடுமையான பிரும்மாச்சார்ய விரதம் அந்தக் கணமே தோற்றுப் போகும். நீங்கள்
செய்கின்றவை எல்லாம் அவளுடைய மகிழ்ச்சிக்காகத்தான் என்பதை அவளுக்க புரிய
வையங்கள்; முதல் மூன்று இரவுகளிலும் அவளை நீங்கள் எப்படி நேசிக்கிறீர்கள்
என்பதை விவரியுங்கள். வாழ்வில் சின்னதாய் கூட ஒரு தீங்கும் உனக்கச்
செய்யமாட்டேன் என்று வாக்களியங்கள்.
அவள்
மிகவும் நம்பிக்கை வைப்பாள். உங்களக்கு உயிர்த துணையாய்த் திகழ்வாள்.
அவளிடம் கண்ணியமாய் நடந்து கொள்ளுங்கள். அவளக்கு மகிழ்ச்pயைக் கொடுங்கள்.
அவளுடைய நம்பிக்கையை பெறுங்கள். அவள் எப்போதும் உங்களிடம் நேமாய்
இருப்பாள்.
தன்
மீது உங்களுக்கு நேசம் இருப்பதாய் எந்த அறிகுறியும் தென்படாத பட்சத்தில்
அவள் மனம் கசந்து போகும். அது உங்கள் மீது பகையாய் மாற அதிக காலம் ஆகாது.
நீங்கள் அவளை வலுக்கட்டயமாய் அடைய முற்ப்பட்டால் வாழ்ககை நெடுகிலும் வன்மம்
தொடரும்.
தன்னுடைய
உணர்வுகளை மதிக்காத ஆணுடன் உறவு வைத்து கொள்ள எந்தப் பெண்ணும் விரும்ப
மாட்டாள். அவள் பாதை மாறிப்போனாலும் ஆச்சரியப் படுவதற்க்கில்லை...!
தொடரும்....
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.