Pages

Powered by Blogger.

Feb 2, 2014

தமிழில் காமசூத்ரா 5



பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்...? 

ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர்களும் உண்டு. நான் ஒரு பெண்ணை விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன்.... அது எனக்கு மிக எளிதான காரியமும் கூட...
இப்படி முரண்பட்ட கருத்துக்களை நாம் பார்க்கலாம். ஆம். மனதில் நினைத்த பெண்ணை அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட செய்திகளையும் கேள்விப்படுகிறேம். அதே சமயம், ஒரே ஆண் நினைத்த பெண்களையெல்லாம் அனுபவித்த கதைகளையும் கேள்விப்படுகிறேம். இந்த இரண்டு விதமுமே நாட்டில் உண்டு. சரி. தோல்வியடைந்து புறமுதுகிட்டுப் போகும் ஆண்களைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டு, இதில் தான் நினைத்த படி வெற்றி பெறும் ஆண்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்...


தான் விரும்பிய பெண்ணை மிக எளிதாக அடைந்து விடும் ஆண்களுக்கென சில விஷேசக் குணங்கள்:

பெண்களைச் சந்தோஷப்படுத்தும் செயல்களைச் செய்பவன்.
விருந்துகளில் மகிழ்ச்சியாக இருப்பவன்
ஏராள, தாராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன்
பிற ஆணுக்காகத் தூது செல்பவன்
அன்பான குணத்தை இயற்கையாகவே கொண்டவன்
உல்லாசமாக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறவன்
அதிகத் துணிச்சல் உள்ளவன்
ஒன்றக வளர்ந்தவன்...
காம சாஸ்திரம் நன்கு கற்றவன்
அடிக்கடி பெண்கள் பார்வையில் தெரியும் படி இருப்பவன், நடந்து கொள்பவன்....
இளம் பருவத்தில் தோழனாக இருந்தவன்
மனதைக் கவரும் கதை சொல்வதில் வல்லவன்...
புதுமாப்பிள்ளை
முதலாளியாக இருப்பவன்
தாராள மனப்பான்மை உள்ளவன்
ரகசியத்தை அறிந்தவன்
அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன்
பெண்ணின் கணவனை விட, அழகிலும், அறிவிலும் சிறந்தவன்....
ஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்...? ஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது பற்றி காமசூத்ரா என்ன கூறுகிறது என அறிந்து கொள்வோம்....



எல்லாப் பெண்களும் ஆண்களிடம் அவ்வளவு சுலபமாக மயங்கி விடுவதில்லை. அவர்களுக்குப் பிடிக்க வில்லையென்றால், திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால் மனதுக்குப் பிடித்துப் போன ஆணுக்காக எதையும் செய்யவும் தயங்க மாட்டார்கள். ஆனால் சில பெண்கள் சிறிது முயற்சி செய்தாலே போதும். மயங்கி விடுவார்கள். இப்படி இவர்கள் மயங்குவதற்கு காமசூத்ரா 20 காரணங்களைக் கூறுகிறது. அவை...

வேற்று ஆண்களை உற்று உற்றுப் பார்க்கிறவள்....
வஞ்சக நோக்கம் உடையவள்...
அடிக்கடி வீட்டு வாசலில் நிற்பவள்
வலியச் சென்று பழகும் குணம் உள்ளவள்
தூது செல்பவள்
தெருவில் போவோர் வருவோரை வேடிக்கை பார்க்கிறவள்
குலப் பெருமையை அறிந்திராதவள்
மலடி
கணவனிடமிருந்து விலகி வாழ்பவள்
செக்சில் மிகுந்த விருப்பம் கொண்டவள்
வீட்டைத் தவிர, வெளி இடங்களில் மகிழ்ச்சியுடன் இருப்பவள்...
கட்டுப்பாடு இல்லாதவள்
அசாதாரணக் குணம் உள்ளவள்
தகுதியற்றவனை மணந்தவள்
வயதான கணவனைக் கொண்டிருப்பவள்
இளம் வயதில் கணவனை இழந்தவள்
அடிக்கடி வெளியூர் செல்லும் கணவனைப் பிரிந்திருக்க நேர்பவள்
காம இச்சை அதிகம் கொண்டவள்
ஆண்மையற்ற கொடுமைக்குணம் உள்ளவனை மணந்தவள்
கணவனை வெறுப்பவள்....
இப்படி வரையறுத்துக் கூறுகிறது,. எளிதில் ஆண்களிடம் மயங்கும் பெண்களைப் பற்றி....*
ஆண்களின் மனதில் காம இச்சை இயற்கையாக உண்டாகிறது. அதற்கு வடிவம் கொடுக்கும் வகையில் அவன் கடும் முயற்சிகள் செய்து பெண்ணை அடைகிறான். இதற்கிடையில் ஆபத்து வந்தால் அதையும் சமாளித்து வெற்றி கொள்கிறான். ஆனால் காம சாஸ்திரங்கள் மற்றவன் மனைவியையும், தன் மனைவியைத் தவிர வேறு பெண்களையும் விரும்புவதை ஆதரிக்க வில்லை. அதைத் தவறு என்கிறது அது.

 பாலுறவு என்பது மகிழ்ச்சியளிப்பதாய் இருக்க வேண்டும். அதைவிட முக்கியம் அது வெற்றிகரமான அனுபவமாய் அமைவது. அதற்க்கு உறவு நாட்டத்தைத் தூண்டும் உத்திகளை ஒவ்வொருவரும் அறிந்திருப்பது அவசியம்.

உடலுறவு ஓர் அற்ப்புதம். அந்த இனிய அனுபவத்தில் கொடுப்பவர் மட்டுமின்றி பெறுபவரும் மகிழ்ச்சி அடைகிறார். இது தொடர்பாக ''நமது முன்னோர்கள் அறுபத்து நான்கு கோட்பாடுகளை வகுத்திருக்கிறார்கள'';. அவற்றை ஒட்டுமொத்தமாக காமக்கலை எனலாம் கல்வித் தொழில் நுட்ப்பம் என்றும் சொல்லலாம்.

தயார் நிலையில்....

கலவியல் ஆண் தொடங்கி வைப்பதோடு முடித்து வைக்கிற பொறுப்பையும் ஏற்றிருக்கிறான். உடலுறவு புனிதமானது. அது சொல்லித் தருகிற விசயமல்ல. அடுத்தவரிடம் கேட்டுப் புரிந்து கொள்ளக் கூடியதுமல்ல என்ற எண்ணம் பலருக்கண்டு. ஆனால் உடலுறவு தொடர்பாக பல உண்மைகளை; இருக்கின்றன.




உடலுறவு சிறப்பாக அமைய முதல் தேவை ஆண் பெண் இருவரின் அந்தரங்க உறுப்பும்( பொருத்தம் பார்க்கும் முறை சாதகம்) ஒன்றுக்கொன்று பொருந்துவதாய் இருக்க வேண்டும். அடுத்து அவரவர் தேக அமைப்புக்கேற்றவாறு கலவி நிலைகள் வேறுபடும்.


ஓர் ஆண் தனது கலவித் தொழிலைத் தொடங்குவதற்க்கு முன் பெண்ணை அதற்க்கு தயார் செய்ய வேண்டும். அதாவது பெண் உடலால் மட்டுமல்லாமல் உணர்வாலும் கலவிக்குத் தயாராக வேண்டும். அவளைத் தயார் செய்கின்ற பொறுப்பு அணுக்கு இருக்கிறது. அவன் சில காதல் முன் விளையாட்டுக்களை அது தொடர்பாக பழக வேண்டிருக்கும்.




கலவி என்பது இரண்டு தேகங்களின் இயக்கம் மட்டுமல்ல. அது உணர்வு சம்பந்தப்பட்ட விசயம். உடலுறவில் உச்சகட்ட நிலை அடைவது பிரதானம் ஆணும் பெண்ணும் ஏக காலத்தில் அந்த நிலையை அடைந்தால் பரவசம். கலவியின் மூலம் உடல், மனம், ஆன்மா இம்மூன்றும் திருப்தி அடைகின்றன.

உடலுறவு பற்றி அவ்வப்போது சில நூல்களில் சொல்லப்பட்டதுண்டு. முழுமையாகவிசயத்தை சொன்னவர் வாத்ஸ்யாயனர். அவருடைய நூல் காமசூத்திரம் என்ற பெயரில் அறியப்படுகிறது.



மனித வாழ்க்கையில் காமம் வகிக்கும் முக்கியப் பங்கை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். அவ்வகையில் பாமரர்களுக்கு ஒரு ''விழிப்புணர்வை அவருடைய நூல் ஏற்படுத்திற்று எனலாம்.'' ஆண்-பெண் உடலமைப்பு உறுப்புக்களின் விளக்கம் முன் விளையாட்டுக்கள். கலவி வகைகள் என்று உடலுறவுக் கலையை அவர் ஒழுங்கு படுத்தித் தந்திருக்கிறார்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.