Pages

Powered by Blogger.

Feb 11, 2014

ஆண்களுக்கு பாலியல் ஆலோசனைகள் 12



[ பல ஆண்கள் உடலுறவு வைத்துக்கொள்வது என்பது, சாலையில் செல்லும் தெரிந்த நபரிடம், போகிற போக்கில் "ஹலோ! எப்படி, வரட்டுமா..." என்பது போல இருக்கிறது. பல ஆண்கள் உச்சக்கட்டம் முடிந்தவுடன் துவண்டுபோய் சுருண்டுவிடுகிறார்கள். உறவுக்குப்பின்னும் நெருக்கம் இருக்க வேண்டும்.
பெண்களுக்கு வெறும் காமத்தை பின்னணியாகக் கொண்ட தொடுதல்களைவிட பரிவான, இதமான தொடுதல், மெல்ல அணைப்பது, கைகளைப் பற்றிக்கொள்வது, முத்தமிடுதல் ஆகியவை மிக முக்கியமானவையாகும். பல பெண்கள், “என் கணவர் படுக்கையறையைத் தவிர மற்ற நேரங்களில் முத்தமிடுவதில்லை” என்ற மனக்குறை உள்ளவர்களாக இருக்கிறார்கள். எப்பொழுதெல்லாம் விருப்பமோ அப்பொழுதெல்லாம் ஒரு முத்தத்தைப் பரிசளியுங்களேன், குறைந்தா போய்விடுவீர்கள்?!]
1.  பாலியல் செயலைவிட ஒரு பெண்ணிடம் பேசுவது, அவளின் உணர்வுகளைப் புரிந்துகொள்வது மிக முக்கியமானது.
2.  மனைவியிடம் உங்கள் அன்பைத் தெரிவியுங்கள். எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதைக் கூறுங்கள். உள்ளார்ந்து அன்பைப் பொழியுங்கள். இதயத்தை அன்பால் வருடுங்கள்.
3.  உங்கள் மனைவியிடம் பிடித்த விஷயங்களைத் தெரிவியுங்கள். அவளது மிருதுவான தோல், குரலின் இனிமை, அழகான இதழ்கள், கவர்ந்திழுக்கும் கண்கள், மெல்லிய புன்சிரிப்பு என உங்களை ஆக்கிரமிக்கும் அத்தனை உணர்வுகளையும் குறிப்பிடுங்கள்.
4.  பெண்களின் உணர்வுகள் இதயத்திலிருந்து இயக்கப்படுகிறது. அவர்களுக்கு "காம உணர்வு" வாழ்க்கையில் தனிப்பட்ட விஷயமில்லை. அவர்களின் மனம் இதமாக இருப்பது அவசியம். கணவன் படுக்கையறைக்கு வெளியே எப்படி நடந்து கொள்கிறான் என்பதைப் பொருத்துத்தான் படுக்கையறையின் மகிழ்ச்சியிருக்கும். மனைவியைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, அதிரப் பேசுவது, மோசமாக நடந்துகொள்வது ஆகியவை அவளை பாதிக்கும். அன்பும் நெருக்கமும் இருவருக்கும் இடையில் இருந்தால்தான் உடல் உறவும் இன்பமாக இருக்கும். வேலையிலிருந்து திரும்பும் கணவன், மனைவிக்கு வாங்கிவரும் பரிசுப்பொருட்கள் அவளுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த மகிழ்ச்சி செக்ஸ் உறவை இரட்டிப்பாக்கும்.
5.  செக்ஸ் உறவில் உச்சக்கட்டம் என்பது ஒரு இன்பமான விஷயம். ஆனால், அது எப்பொழுது ஏற்படும் என்பதை கணிக்க முடியாது. ஒரு ஆய்வுப்படி 60 சதவீதம் பெண்கள் மட்டும்தான் உச்சக்கட்ட நிலையைத் தொட்டுள்ளார்கள். மனைவி உச்சக்கட்ட நிலையை அடைய கணவன் உதவ வேண்டும்.
6. உச்சக்கட்ட நிலையைத் தொடவேண்டும் என்ற ரீதியலான உடலுறவு என்பது ஒரு நதியின் அடுத்த கரைக்குச் செல்வதில் கவனம் இருப்பதைப் போன்றது. செல்லும் வழியில் உள்ள ரசிக்கவேண்டிய பல விஷயங்கள் அந்த பரபரப்பில் மறைக்கப்படும். உடலுறவில் ஏற்படும் உச்சக்கட்ட நிலையைவிட, உடல் ரீதியான நெருக்கம், உணர்வுகளின், உணர்ச்சிகளின் நெருக்கம் மற்றும் முன்விளையாட்டுக்களின் மூலமாகப் பெண்கள் உச்சத்தைத் தொடுவார்கள்.
7.  பாலியல் உறவைச் சில ஆண்கள் 'கருமமே கண்ணாகக் கொண்டு" மூர்க்கத்தனமாகச் செயல்படுவார்கள். சிரிப்பதையும், புன்னகை செய்வதையும்கூட மறந்துவிடுவார்கள். இவர்கள் காதல் வயப்பட்டு, சில சின்னச் சின்ன சில்மிஷங்களைச் செய்ய வேண்டும். உடலுறவின்போது கலகலப்பாக இருப்பது அவசியம். ஜாலியான மூடில் பழகுவது அதிக மகிழ்ச்சியைத் தரும்.
8.  பெண்களுக்கு வெறும் காமத்தை பின்னணியாகக் கொண்ட தொடுதல்களைவிட பரிவான, இதமான தொடுதல், மெல்ல அணைப்பது, கைகளைப் பற்றிக்கொள்வது, முத்தமிடுதல் ஆகியவை மிக முக்கியமானவையாகும். பல பெண்கள், “என் கணவர் படுக்கையறையைத் தவிர மற்ற நேரங்களில் முத்தமிடுவதில்லை” என்ற மனக்குறை உள்ளவர்களாக இருக்கிறார்கள். எப்பொழுதெல்லாம் விருப்பமோ அப்பொழுதெல்லாம் ஒரு முத்தத்தைப் பரிசளியுங்களேன், குறைந்தா போய்விடுவீர்கள்?!
9.  உங்கள் மனைவி, உங்களைத் தழுவி இதமாக, கழுத்து, தலையை வருடிவிடுவது உங்களின் இதயத்தை எப்படித் துள்ள வைக்கிறது! அதுபோலத்தான் உங்களின் நெருக்கமும் அவர்களுக்கு மகிழ்ச்சிகரமானது என்பதை மறந்துவிடாதீர்கள்.
10.  உங்களின் உறவு இனிமையாக மாற, மனம் திறந்து பேசுங்கள். ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள். இதமான, உணர்வுப் பூர்வமான விஷயங்கள் மகிழ்ச்சியைப் பல மடங்காக்கும்.
11.  பல ஆண்கள் உடலுறவு வைத்துக்கொள்வது என்பது, சாலையில் செல்லும் தெரிந்த நபரிடம், போகிற போக்கில் " ஹலோ! எப்படி, வரட்டுமா..." என்பது போல இருக்கிறது. பல ஆண்கள் உச்சக்கட்டம் முடிந்தவுடன் துவண்டுபோய் சுருண்டுவிடுகிறார்கள். உறவுக்குப்பின்னும் நெருக்கம் இருக்க வேண்டும்.
12.  உறவின்போது ஆண்களிடம் "என்டார்பின்" இயக்குநீர் அதிகரிக்கும். இதனால் உணர்ச்சிகளை ஆண்கள் உடனடியாகக் கொட்டித் தீர்த்துவிடுவார்கள். பெண்களிடத்தில் இது மெதுவாக வேலை செய்யும். அதற்கு ஈடுகொடுத்து ஆண்கள் செயல்பட வேண்டும். இந்த இணக்கமான போக்கு பெரிய மாற்றங்களைச் செய்யும். அப்போது உறவில் மகிழ்ச்சி எல்லையற்றதாக மாறும்.
- டாக்டர், எம். குமரேசன், ஆசிரியர் "பாலியல் மெய்யும் பொய்யும்''

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.