Pages

Powered by Blogger.

Feb 2, 2014

தமிழில் காமசூத்ரா 2

அது ஒரு மாபெரும் சக்தி


காதல் செய்வது உயிரியற்கை என்கிறபோது அதைச் சொல்வதற்க்கு ஒரு நூலும் தேவையா என்பது சிலரின் கருத்து. விலங்கு உடலுறவு கொள்கிறது. மனிதனும் உடலுறவு கொள்கிறான். இரண்டும் ஒன்றாகிவிடுமா..? விலங்கு தனது இரையை அப்படியே உண்கிறது. மனிதனுக்கோ பக்குவம் தேவைப்படுகிறது. அதனால் தானே அவன் உயிரினங்களில் முதலிடம் வகிக்கிறான். அவனுக்கு உடலிறவிலும் பக்குவம் தேவை. அதனால் தான் காமநூல் அவசியப் படுகிறது.

 அச்சமும், தயக்கமும் கொண்டவர்களுக்கு வேண்டுமானால் ''காமநூல்கள் மருட்சியை ஏற்ப';படுத்தலாம்'' ஆனால் இந்த நூல்களை அவர்கள் அச்சத்திலிருந்தும் தயக்கத்திலிழருந்தும் விடுவிக்கும் காமம் சக்தி வாய்ந்தது. அது கற்றவர்களை காதலில் தேர்ச்சி உடையவராக்கும். மற்றவர்களை பொறுத்தவரை ''மண வாழ்க்கையை நாசம் செய்யும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்.


காமம்-விலங்குகள் உலகில் வெறும் பாலுணர்வு வேட்க்கை, மனிதர்கள் வாழ்வில் அது ஒரு யோக சாதனை, காம துறவிகள் விலக்கலாம். ''சம்சாரிக்கு அது முடியாது. சுகத்தை தேடுகிறவன் பாவங்கள் செய்யும்படியாகும். குற்றங்களை புரியும்படி இருக்கும் என்பது மகான்களின் கருத்து. காமவாய்ப்பட்டவன் தன் குடும்பத்தை தானே நாசம் செய்து விடுவான் என்று அவர்கள் கருதினார்கள்.


 போஜர்குல மன்னன் தாண்டக்யன் ஒரு மேல்யாதிப் பெண்ணை கற்ப்பழித்துவிட அதன்விளைவாக அவன் செத்துப் போனான். அவனுடைய நாடு புழுதி காற்றில் காணமல் போயிற்று என்று புரணங்கள் கூறும்.
''இந்திரன் அகலிகையை ஏமாற்றினான். சீசகன் திரளெபதியை இழிவு செய்தான். ராவணன் சீதையை தூக்கி சென்றான். இப்படி தங்கள் பலத்தையும் பிரக்யாதியையும் நம்பிச் செயல் பட்டவர்களெல்லாம் அழிந்து பட்டார்கள். காமம் அவர்கள் கண்ணை மறைத்தது என்பார்கள்.


காமம் கெடுதல் செய்வதில்லை. மனிதனிடம் உள்ள தீய பண்புகள் தான் அவனையும் கெடுக்கின்றன. அவனை சற்றியள்ளவர்களையும் கெடுக்கின்றன. உடலுறவு முக்கியம், உடம்புக்கு உணவு, தண்ணீர் மாதரி உடலுறவு அவசியப்படுகிறது.


காமம் என்பது அர்த்தம். தர்மம் இவற்றின் விளைவு பலன் என்கிறார்'' வாத்ஸ்யாயனர். அச்சம் பாலுறவுக்கு இடையுறாகி விடக்கூடாது.
'' கால் நடைகள் பயிரை மேய்ந்து விடும் என்பதற்காக விவசாயம் செய்யாமல் இருக்க முடியுமா..?''


பிச்சைக்காரனுக்கு பயந்து சமைப்பதை நிறுத்திவிடலாமா..? என்று கேட்க்கிறார் வாத்ஸ்யாயனா. அர்த்தம், காமம், தர்மம் இவற்றை அறிந்தவனும் தனது உடம்பு, மனம், ஆன்மாவில் அவற்றை கடைபிடிக்கிறவனும் இவ்வுலகத்தோடு மறுவுலகிலும் மகிழ்ச்சியாயிருப்பார்.


இளைஞர்கள் கலைகள், அறிவியல் கற்பதுடன் தர்மம், அர்த்தம், காமம், பற்றிய நூல்களையும்கற்று தோச்சி பெற வேண்டும். ''முதலிரவை எதிர் நோக்கியிருக்கும் மணப்பெண் காமசூத்திராவை அறிந்திருக்க வேண்டும்''
என்கிறார் வாத்ஸ்யாயனர்.


 தேர்வு செய்தல்...!


திருமணம் செய்து கொள்வதன் நோக்கமே தர்மங்களை நிறைவேற்றுவதுதான்.

அதற்க்கு தேவையான செல்வங்களைத் தேடிக் குவிப்பதும்தான்.

காமம் - குழந்தை பெற உதவுகிறது.

அர்த்தம் - குழந்தைக்கான சொத்துகளைச் சம்பாதிக்க உதவுகிறது...
கன்னித்தன்மை இழக்காத பெண்ணை மணந்து காதலை. பாலுறவு மகிழ்ச்சியை அனுபவித்திரு என்கிறது வேதம். மணவினை எப்படி நிகழ
வேண்டும் என்பதற்க்குப் பல நியமங்களையும் வேத நூல்கள் செய்து வைத்திருக்கின்றன.

ஓர் ஆண் தன்னைவிட மூன்று வயதேனும் குறைந்த பெண்ணை மணக்க வேண்டும்.
அவளுடைய பெற்றோர் தங்கள் மகளைக் கட்டுப்பாடாக வளந்திருக்க வேண்டும்.
அவளுக்கு அத்தைமார், மாமாமார் என்று சொந்த பந்தங்கள் இருக்க வேண்டும்.
பெண்ணின் குடும்பம் வசதியாகவும். கௌரவமான தாயும் இருக்க வேண்டும்.
அவளுடைய குடும்பத்தவரும் உறவினர்களும் நாட்டில் பிரபலமானவர்களோடு பழக்கம் உள்ளவர்களாயிருக்க வேண்டும். ( கிழிஞ்சுது போ.....)
பெண் அழகும், நன்னடத்தையும் கொண்டவளாயிருப்பது அவசியம்.
ஆரோக்கியமும், கவர்ச்சியும், தேவை. நல்ல பற்கள், நகங்கள், காதுகள், கண்கள், மார்பகங்கள், ஆகியவை விளக்கமாய் அமைந்திருக்க வேண்டும். உடம்பில் மாசு. மாறு இருக்க கூடாது.

ஓர் ஆண் மகனுக்கு நல்ல இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்விக்கிற புனித கடமை அவனுடைய பெற்றோர்களும். உறவினர்களுக்கும்
உண்டு. தங்கள் மகனுக்குப் பெண்ணைத் தரும்படி பையனின் பெற்றோர்கள்
எவ்வகையிலும் முயற்ச்சிக்கலாம். பெண் வீட்டாரிடம் பையனுடய வம்சாவழி. குணநலன் பற்றிப் புகழ்ந்து பேசலாம்.

இரண்டு குடும்பத்தார்கள் மட்டும் தங்களுக்கள் பேசி திருமணத்தை உறுதி செய்து விடக் கூடாது. அவர்களுடைய உற்றார் உறவினர்கள் முன்னிலையில்
அந்த திருமணம் நிச்சயிக்கப்பட வேண்டும். மற்றவர்களின் கருத்தும் அறியப்பட வேண்டும்.

''மணப்பெண் சோம்போறித்தனமுடையவளா. முன்பே வேறொருவனை விரும்பியவளா. ஏறுமாறனவளா நரம்பு கோளாறு உடையவளா என்பதையெல்லாம் சோதித்தறிய வேண்டும்.
பொய்யான கூந்தல் உடையவளை. கோடையில் கை கால் வியர்ப்பவளை ஆணைப்போல் தோற்றம் கொண்டவளை விலக்க வேண்டும்.
ஊமையை, கூன் விழுந்தவளை, மிகப்பெரிய ''பிருஸ்டபாகம் ''கொண்டவளைத் தவிர்க்க வேண்டும்.''
''அமங்கலமான பெயர்கள் உடைய பெண்ணை. ஒரு நதி, மரம் அல்லது நட்சத்திரத்தின் பெயர் கொண்ட வளை மணக்கக் கூடாது.
''லா'' அல்லது''ரா'' என்று முடிகிற பெயருடைய பெண்ணையும் மணக்க கூடாது.
தன்னைவிட வயதில் மிகவும் இளைய பெண்ணை மணப்பதும் தவறு.
குழந்தைப் பருவத்தில் தன்னோடு விளையாடியவளையும் மணப்பது தவறு.

பெற்றோர்கள் தங்களுடைய பெண்ணை சமூக நிகழ்ச்சிகளுக்கும். விழாக்களும் அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களுடைய வீட்டில் ஒரு பெண் திருமணத்துக்குத் தயாராயிருக்கிறாள் என்பதை அதன் மூலம் மற்றவர்களுக்குத் தெரியவைக்க முடியும். அந்தப் பெண்ணைத் தங்களுடைய மகனுக்க வரிக்க எண்ணம் குடும்பத்தார் அவர்களுடன் கலந்து பேசி. விருந்துண்ண அது வகை செய்யும்.

தங்களுடைய பெண்ணுக்கு ஏற்ற வரனாக இவன் இருப்பான் என்று உறுதிப்படாதவரை அந்தப் பையனுடைய குடும்பத்தாரிடம் எது பற்றியும் வாக்களிக்கக் கூடாது. எங்கள் உறவினரிடம் கலந்து பேசி இன்னும் சில நாட்களில் பதிலளிக்கிறோம் என்று சொல்லி விடலாம்.

தங்களுடைய நாடு மற்றும் குடும்ப சம்பிரதாயங்களக்க ஏற்ப மணவினை நிகழ்த்தபட வேண்டும். ஒருவர் தம்முடைய இனத்தாருடன் மட்டுமே நட்ப்பு கொள்ளவும். மணம் பேசி முடிக்கவும் வேண்டும். தனது அந்தஸ்தைவிட உயர்ந்த இடத்தில் பெண்ணெடுத்தால் சுய கௌரவத்தை இழக்கும்படி ஆகும்.

ஒரு வேலைக்காரனைப்போல் நடத்தப்படும் நிலைதான் இருக்கும். தன்னைவிட அந்தஸ்து குறைந்த இடத்தில் பெண்ணெடுத்தால் அவளுடைய குடும்பத்தை கொடுமைப்படுத்த நேரிடலாம். சம அந்தஸ்து இல்லாத திருமணங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை.



தொடரும்..

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.