Pages

Powered by Blogger.

Feb 7, 2014

உடலுறவில் எந்த வகையான உறவை பெண்கள் விரும்புகிறார்கள்?


சிலருக்கு கரடுமுரடனான செக்ஸ் உறவுதான் பிடிக்கும். சிலருக்கு மென்மையான உறவே விருப்பமாக இருக்கும். அது, ஒவ்வொருவரும் தங்களது துணையை கையாளுவதைப் பொறுத்து அமைகிறது.
நீங்கள் கடைப்பிடிக்கும் முன் விளஐயாட்டுக்கள், பொசிஷன்கள் உள்ளிட்டவையே உங்களது உறவின் தன்மையை நிர்ணயிக்கின்றன. ஆண்கள் எப்படியோ, பெரும்பாலான பெண்களுக்கு மென்மையான உறவுதான் பிடித்தமானதாக இருக்கிறதாம், காட்டுத்தனமான உறவை அவர்கள் வெறுப்பதாக கூறுகிறது ஆய்வுகள். காதலும், மென்மையும் கலந்த காம உறவையே அவர்கள் அதிகம் விரும்புகிறார்களாம்.
முரட்டு உறவு.. 
இதில் மென்மைக்கு முக்கியமான இடமில்லை. அதேபோல தனிப்பட்ட மகிழ்ச்சிக்கும் இங்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை. எனக்கு இப்படித்தான் வேண்டும் என்று பெண்களின் விருப்பம், ஆசை, ஆர்வம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஆண்களே அத்தனையையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள்.
காதலை விட காமமே இதில் மிகுதியாக இருக்கும். மகிழ்ச்சியான வலி கூட அளவுக்கு அதிகமாக இருக்கும். அழுத்தம் அதிகமாக இருக்கும். முரட்டுத்தனமாக உடம்பைக் கையாள்வார்கள் ஆண்கள். கடித்தல், பிடித்து இழுத்தல், இறுக்குதல் ஆகியவற்றில் பெரும் முரட்டுத்தனம் இருக்கும்.
ரசித்து அனுபவித்தல் என்பது போய் கட்டாயப்படுத்தி காமுறுதலே இதில் கையோங்கியிருக்கும். ஒருவரின் ஆசை, அபிலாஷைகளைப் புரிந்து கொள்ளாமல் சுயநலத்துடன் கூடிய வேகமே இதில் மிஞ்சியிருக்கும்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது பெரும்பாலும் முரட்டு உறவே இருக்கும் என்கிறார்கள். காரணம், அடக்கி வைத்திருந்த ஆசை காட்டாற்று வெள்ளம் போல உடைத்தெடுத்துக் கொண்டு ஓடி வரும்போது மென்மைக்கு அங்கு இடமேது என்கிறார்கள் இப்படிப்பட்ட உறவை விரும்புபவர்கள்.
இருப்பினும் பெரும்பாலான பெண்களுக்கு இதுபோல முரட்டுத்தனமாக உறவு கொள்வதில் விருப்பம் இருப்பதில்லையாம். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இதில் என்ன சுகம் இருக்கப் போகிறது, கிட்டத்தட்ட இது கற்பழிப்பு போலத்தான். இதில் சுகத்தை விட வலியே அதிகம் இருக்கும் என்கிறார்கள்.
மென்மையான உறவு
இது மிக மிக நிதானமானது, ரசித்து அனுபவிக்கும் உறவாகும். செக்ஸ் உறவின்போது என்னென்ன செய்கிறீர்களோ அத்தனையையும் அனுபவித்து நிதானித்து ரசித்து செய்வீர்கள். ஒருவருக்கொருவர் திருப்திகரமான மன நிலையுடன் உறவில் ஈடுபடுவீர்கள். மென்மையான முத்தத்தில் தொடங்கி, இனிமையான உறவில் இது முடியும். இங்கு கிளைமேக்ஸின்போது மட்டுமே அதிவேகம் இருக்கும், மற்றபடி மற்ற நேரங்களில் மென்மையும், காதலும் இருவரிடத்திலும் கொஞ்சி விளையாடும்.
இருவருக்கும் மனக் கட்டுப்பாடும், நேர்த்தியும், அனுபவமும், முதிர்ச்சியும் இருக்கும்போது மென்மையான உறவு தித்திப்பான அனுபவமாக அமையும். இத்தகைய உறவின்போது இன்ப வலியும் கூட சற்று குறைவாகவே இருக்கும்.
மென்மையான உறவில் தங்களது கணவர் ஈடுபடும்போது அவர் என் மீது வைத்துள்ள அன்பை வெளிக்காட்டுவதாக உணர்கிறேன் என்று பெரும்பாலான பெண்கள் சொல்கிறார்கள்.
காமம்தான் செக்ஸ் என்றாலும் கூட காதலே அதில் தலை தூக்கியிருக்க வேண்டும். காதல் 90 சதவீதம் என்றால் காமம் 10 சதவீதமாக இருக்கலாம். இப்படிப்பட்ட உறவுதான் நீடித்து நிலைக்கக் கூடியது, நெடுங்காலம் அனுபவித்து ரசிக்கக் கூடியது என்பது பெரும்பாலான பெண்களின் கருத்து.
நீங்க இதில் இந்த வகை…?

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.